ஜனாதிபதி கோத்தாபயவிற்கு இந்திய பிரதமர் நன்றி தெரிவிப்பு!

23 Mar, 2020 | 06:10 PM
image

(நா.தனுஜா)

சார்க் நாடுகளின் கொவிட் - 19 ஐ தோற்கடிப்பதற்கான நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க  டொலர்களை வழங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக முழு உலகுமே பாரிய நெருக்கடி நிலையொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில்இ இச்சவாலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான வீடியோ மாநாடொன்று கடந்த 15 ஆம் திகதி சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் நடைபெற்றது.

அதன்போது பிராந்தியம் என்ற வகையில் இச்சவாலுக்கு ஒன்றிணைந்து முகங்கொடுப்பதற்கான நிதியைத் திரட்டிக்கொள்வதற்கும் தலைவர்களுக்கிடையில்  இணக்கம் காணப்பட்டது. அதன்படி குறித்த நிதியத்திற்காக இலங்கை 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பின்வருமாறு டுவிட்டர் பதிவொன்றைச் செய்திருக்கிறார்:

'சார்க் நாடுகளின் கொவிட் - 19 ஐ எதிர்கொள்வதற்கான அவசர நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியமைக்காக இலங்கை ஜனாதிபதிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மோசமான வைரஸ் தொற்றை எதிர்கொண்டு இல்லாதொழிப்பதில் எமக்கு இடையிலான ஒதநுழைப்பு வலுவாகத் தொடரும்'.

அதேவேளை இந்நிதியத்திற்காக ஆப்கானிஸ்தான் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களையும்இ பங்களாதேஷ் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதாக இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44