ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் அவதி!

23 Mar, 2020 | 05:57 PM
image

(எம்.மனோசித்ரா)

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் நோக்கில் மக்கள் அல்லோலப்பட்டனர். அத்தியாவசிய உணவு பொருட்கள் விற்பணை நிலையங்கள், எரிப்பொருள் விற்பணை நிலையங்கள் , மரக்கறி விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் நீண்ட வரிசையிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்ய காத்திருந்தனர்.

இதே வேளை சில பகுதிகளில் போதிய அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப்பெற வில்லை என மக்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கடந்த சில வாரங்களாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதற்கமைய கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. கொழும்பு இ கம்பஹாஇ புத்தளம் மற்றும் வடக்கில் 5 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நேற்று திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டது.

இதன் போது நுவரெலியா இ கேகாலைஇ குருணாகல்இ இரத்தினபுரி இ களுத்துறைஇ கண்டிஇ காலிஇ மாத்தளைஇ மாத்தறைஇ அநுராதபுரம்இ திருகோணமலைஇ மட்டக்களப்புஇ பொலன்னறுவை இ அம்பாறைஇ பதுளைஇ அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட குறுகிய நேரத்திற்குள் பெரும்பாலான மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக விற்பனை நிலையங்களிலும் பல்பொருள் அங்காடிகளிலும் குழுமியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது ஒருநபரிலிருந்து பிரிதொருவர் சுமார் 1 மீற்றர் இடைவெளியைப் பேண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட போதிலும் பெரும்பாலான பிரதேசங்களில் பொது மக்கள் கூட்டமாகக் குழுமியிருந்தமையையே அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எனினும் பொதுமக்களில் பெருமளவானோர் முகக்கவசங்களை அணிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஹட்டன் உள்ளிட்ட நகர்பகுதிகளில் பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் என்போர் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு பொலிஸ் பிரிவுகளில் நகர் பகுதிகளில் ஒலி பெருக்கிகள் மூலம் மக்களுக்கான அறிவுறுத்தல்கள் தொடர்ந்தும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. மேலும் பேரூந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து கனிசமானளவே காணப்பட்டன. மேற்குறித்த மாவட்டங்களில் பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவிருந்த நிலையில் நகர்புறங்களில் போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டிருந்தமையையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58