8 மாவட்டங்களை  ஏனைய மாவட்டங்களிலிருந்து தனிமைப்படுத்தும் அரசு!

23 Mar, 2020 | 04:50 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு ,கம்பஹா, பத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்படு நாளை நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுத்தப்பட உள்ளது.

அதனைத் தொடர்நது  27 வெள்ளிக் கிழமை காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதோடு பின்னர் மீண்டும் இம் மாவட்டங்களில் 27 நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கான ஊடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளதாவது :

ஏனைய மாவட்டங்களில் நேற்று திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்படுவதுடன்இ அன்றைய தினம் நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணங்கள் மேற்கொள்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டுசெல்வதற்கும் இடமளிக்கப்படும்.

விவசாய மற்றும் வர்த்தக துறைக்கு பொறுப்பான அமைச்சர் இப்பணிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43