சட்டவிரோத கோடாக்களுடன் மூவர் கைது!

23 Mar, 2020 | 04:50 PM
image

(செ.தேன்மொழி)

திருகோணமலையை அண்டிய பகுதியில் சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் கோடாக்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையை அண்டியப்பகுதியில்  காணப்படும் வனப்பகுதியொன்றில் கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கமைய ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டிருந்த கடற்படையினர் வனப்பகுதி ஒன்றிற்கருகில் இரு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைத்துள்ளதை அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த கடற்படையினர் சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் 5 கோடாக்கள் (பீப்பாய்கள் )  மற்றும் மதுபான வடித்தலுக்கு பயன்படுத்தும் சில உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

 தோம்பூர் மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்த 20-21 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08