எல்லை நிர்­ணயம் முடி­யாமல் தேர்­தலை நடத்த இய­லா­து ; பைசர் முஸ்­தபா

Published By: Priyatharshan

21 Jun, 2016 | 09:31 AM
image

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் விட­யத்தில் புதிய முறை­மையில் தொகுதி­களின் எல்லை நிர்­ணயம் மேற்­கொள்­வதில் பல்­வேறு சிக்­கல்கள் எழுந்­துள்­ளன. எல்லை நிர்­ணய சபையின் வேலைத் திட்­டத்­திற்கு இறுதி நாள் காலக்­கெடு இது­வ­ரையில் கொடுக்க முடி­யாது உள்­ளது என மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்தார்.

வடக்கு கிழக்கில் அர­சியல் கட்­சி­களின் ஆலோ­ச­னை­க­ளைப் பெற்­றும் பூகோள அமை­வு­களின் அடிப்­ப­டை­யிலும், அர­னா­ய­கவில் புதிய குடி­யேற்­றத்தின் பின்­னரும், வில்­பத்­துவில் சட்­ட­வி­ரோத குடி­யேற்றம் தவிர்ந்தும் எல்­லை­நிர்­ணயம் செய்­யப்­படும் எனவும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை பிற்­போட்டு ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­ன­ருக்கு வாய்ப்­பு­களை நாம் ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தாக பல்­வேறு விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­றனர். மஹிந்த அணி­யனர் மட்டும் அல்­லாது எமது கட்­சி­யிலும் சிலர் அவ்­வா­றன விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­றனர்.

எனினும் இந்த குற்­றச்­சாட்­டு­களை ஒரு­போதும் என்னால் ஏற்­று­கொள்ள முடி­யாது. இது­வரை எல்லை நிர்­ணயம் செய்­யப்­பட்­டி­ருந்த முறை­மையில் எம்மால் தேர்­தலை நடத்த இய­லாது. குளி­ரூட்­டப்­பட்ட அறை­களில் இருந்து தீர்­மா­னிக்­கப்­பட்ட எல்லை நிர்­ணய முறை­மை­களை இப்­போதும் எம்மால் நடை­முறை படுத்த இய­லாது. புதி­தாக அனைத்து மாவட்­டங்­க­ளி­னதும் எல்லை நிர்­ணயம் தொடர்பில் மாற்றம் செய்­ய­வேண்­டி­யுள்­ளது. எல்லை நிர்­ணயம் சரி­யான முறையில் மேற்­கொள்­வ­தென்­பது இல­குவில் செய்­ய­கூ­டிய விடயம் அல்ல.

மேலும் கடந்த ஆண்டு பொதுத் தேர்­தலின் பின்னர் புதிய எல்லை நிர்­ணய வேலை­களை ஆரம்­பித்து இந்த ஆண்டு பெப்­ர­வரி மாத­ம­ளவில் நிறைவு செய்ய முடியும் என கரு­தப்­பட்­டது. எனினும் தொகு­தி­களின் எல்லை நிர்­ணயம் மேற்­கொண்ட போது பல்­வேறு சிக்­கல்கள் எழுந்­துள்­ளன.

அதேபோல் மக்­களின் சார்பில் பல்­வேறு முறை­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்டும் உள்­ளன. ஆகவே அவற்­றையும் கருத்தில் கொண்டு சரி­யான முறை­மையை கையாண்டு இந்த எல்லை நிர்­ணய வேலை­களை செய்­வ­தென்­பது இல­கு­வான காரியம் அல்ல. எல்லை நிர்­ணய சபையின் வேலைத் திட்­டத்­திற்கு இறுதி நாள் காலக்­கெடு இது­வ­ரையில் கொடுக்க முடி­யாது உள்­ளது.

எனினும் இப்­பொது வரையில் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் எல்லை நிர்­ணய வேலைகள் முடி­வுக்கு வந்­துள்­ளன. இன்னும் எட்டு மாவட்­டங்­களின் எல்லை நிர்­ணய பணிகள் மட்­டுமே உள்­ளன. அவற்றை விரைவில் முடிக்க நாம் முயற்­சித்து வரு­கின்றோம். எவ்­வாறு இருப்­பினும் இன்னும் சில தினங்­களில் முழு­மைப்­ப­டுத்த முடியும் என நம்­பு­கின்றோம். கால அவ­காசம் தேவைப்­ப­டு­கின்­றது. அனை­வரும் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.

பழைய முறை­மையில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்­தக்­கூ­டாது என அனைத்து கட்­சி­களும் தெரி­விக்­கின்­றன. ஆனால் உட­ன­டி­யாக தேர்­தலை நடத்த வேண்டும் எனவும் கூறு­கின்­றனர். புதிய முறை­மையில் தேர்­தலை நடத்தி மக்­களின் பூர­ண­மான பங்­க­ளிப்பை பெற்­றுக்­கொள்ள வேண்டும் எனின் அதற்­கான கால அவ­கா­சத்­தையும் எமக்கு கொடுக்க வேண்டும்.

நாம் கட்சி சார்ந்து இந்த வேலை­களை செய்ய முடி­யாது. அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ அணி­யி­ன­ருக்கு அஞ்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அஞ்­சியும் நாம் தேர்­தலை பிற்­போ­ட­வில்லை. மஹிந்த ராஜபக் ஷவை தோற்­க­டித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் இந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை வெற்­றி­கொள்­வது கடி­ன­மான காரியம் அல்ல. எனினும் நாம் மக்­களின் முழு­மை­யான பங்­க­ளிப்பை கருத்தில் கொண்டு செயற்­ப­டு­கின்றோம்.

வடக்­கிலும் கிழக்­கிலும் இரா­ணுவ முகாம்கள் அகற்­றப்­பட்­டுள்­ளன. அதேபோல் புதிய குடி­யேற்ற திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­முள்­ளன. குறிப்­பாக வடக்கில் பலா­லி­யிலும், கிழக்கில் சம்பூர் பகு­தி­யிலும் புதிய குடி­யேற்ற நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொண்­டுள்­ளது. அகவே அதற்­க­மைய புதிய எல்லை நிர்­ணய முறைமை அவ­சி­ய­மா­கின்­றது. ஆகவே வடக்கு கிழக்கை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களின் ஆலோ­ச­னை­க­ளையும் அதேபோல் பூகோள அமை­வு­களின் அடிப்­ப­டையிலும் இந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடியும்.

அதேபோல் அர­நா­யக பகு­தியில் ஏற்­பட்ட அனர்த்தம் கார­ண­மாக மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். மக்கள் குடி­யேறக் கூடாது என புதி­தாக சில பகு­தி­க­ளையும் அர­சாங்கம் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஆகவே இந்த விட­யத்தில் அர­சாங்­கத்தின் இறுதி தீர்மானம் அறி­விக்­கப்­படும் வரையில் காத்­தி­ருக்க வேண்டும். இறு­தி­யாக மக்கள் குடி­ய­மர்த்­தப்­பட்­ட­வுடன் எல்லை நிர்­ணய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க முடியும்.

எனினும் வில்­பத்து வனப்பகுதியில் நிலைமைகள் அவ்வாறு இல்லை. இங்கு சட்டவிரோத குடியேற்றமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில பகுதிகளில் மக்கள் ஆரம்பத்தில் இருந்தே வாழ்கின்றனர்.எனவே சட்டவிரோத குடியேற்றம் என கூறும் பகுதிகளில் எல்லை நிர்­ணயம் செய்யப்படாது. அது தவிர்ந்து ஏனைய பகுதிகளை கருத்தில் கொண்டு செயற்படுவோம். எவ்வாறு இருப்பினும் தேர்தல் நடத்துவது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்­றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32