தமது பிள்­ளை­களால் கைவி­டப்­பட்டு நிர்க்­க­திக்­குள்­ளாகும் முதி­ய­வர்­களின் உரி­மை­களை பாது­காப்­ப­தற்­கென புதி­யதோர் யாப்பு உரு­வாக்­கப்­ப­டு­மென சமூக வலு­வூட்டல் மற்றும் நலன்­புரி அமைச்சர் எஸ்.பி திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்ற முதி­யோர்­க­ளுக்­கான விசேட நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உறை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், ஐக்­கிய நாடு­களின் முதியோர் பாது­காப்பு தொடர்­பான விசேட வேலைத்­திட்­டத்தில் நாமும் இணைத்­துக்­கொள்­ளப்பட்டுள்ளோம்.

மேலும் எமது நாட்­டி­னது முதி­யோர்­களின் எண்­ணிக்­ககை கடந்த காலத்­தை­விட வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளது. இதற்கு பிர­தான காரணம் மக்­க­ளி­னது ஆயுட்­காலம் அதி­க­ரித்­த­மையே ஆகும். குறிப்­பாக இலங்­கையில் கடந்த 1952 ஆம் ஆண்­ட­ளவில் சரா­சரி மனி­த­னது ஆயுட்­கா­ல­மா­னது 52 வய­தா­கவே காணப்­பட்­டது. எனினும் அது 60,65 வயது மட்­டத்தை கடந்து தற்­போது 70 ஆக அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் இலங்­கையை பொறுத்­த­மட்டில் நூற்­றுக்கு 99 வீத­மான முதி­ய­வர்கள் தங்­க­ளது பிள்­ளை­க­ளி­டத்தில் தங்கி வாழ்­ப­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர் .இதில் பலர் சூழ்­நிலை கார­ண­மாக தனித்து விடப்­ப­டு­கின்­றனர். இவ்­வாறு தனித்து விடப்­ப­டு­ப­வர்­களின் பாது­காப்பு, சுகா­தாரம் மற்றும் அவர்­க­ளுக்­கான இருப்­பி­டத்தை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுப்­பது அவ­சி­ய­மா­கின்­றது.இதற்­கென இலங்­கையில் 300க்கும் மேற்­பட்ட முதியோர் இல்­லங்கள் செயற்­பட்டு வரு­கின்­றன. மேலும் வேலை நிமித்தம் புலம்­பெ­யர்ந்­துள்ள பிள்­ளை­களால் தங்­க­ளது பெற்­றோர்­க­ளுக்கு பணம் அனுப்­பப்­பட்­டாலும் அவர்­களின் நலன் பாது­காப்பு தொடர்­பான கார­ணங்­களால் பலர் பெரிதும் முதியோர் இல்­லத்­தினை நாடு­கின்­றனர். இந்­நி­லையில் பெரும்­பா­லான முதி­ய­வர்­களை குறைந்த பட்ச சேவை­யா­ளர்­களே கவ­னிக்­கின்­றனர். இவர்­க­ளது ஊதி­யமும் ் வெறும் பத்தாயிரம் ரூபாயிற்கும் குறைவாகவே இருக்கின்றது. இதற்காக திவிநெகும மற்றும் சமுர்த்தி நலன்புரி அமைப்புகளில் பெறப்படும் நிதியினைக்கொண்டு முதியோர் இல்லங்களில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யவுள்ளோம்.