சைப்ரஸ் நாட்டில் ட்ரூடோஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட  காட்டுத்தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் கிரீஸ், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல்  நாடுகள் இணைந்துள்ளன.

ட்ரூடோஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட  காட்டுத்தீயானது, பலமான காற்று மற்றும் அதிக வெப்ப நிலை காரணமாக, மேலும் வலுவடைந்துள்ளது.

இந்த தீயினால் உண்டான சேதமானது, நாட்டின் கிராமப்புற சமூகத்தினருக்கு ஒரு மிகப்பெரிய சோகம் என்று சைப்ரஸ் நாட்டின் அதிபரான நிகோஸ் அனாஸ்டேசியாடஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த 49 வயதுடைய தீயணைப்பு வீரர் அவரது தண்ணீர் ஊர்தி ஒரு மலைமுகட்டிலிருந்து விழுந்ததால் உயிரிழந்துள்ளார்.