யாழுக்கு வந்து போதனையில் ஈடுபட்ட மதபோதகருக்கு கொரோனா உறுதி - வடக்கு ஆளுநர்

22 Mar, 2020 | 05:18 PM
image

சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த மதபோதகருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது வெளிஉறவு அமைச்சின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ளது என வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். 

மேற்படி சுவிஸ் நாட்டில் இருந்து இந்த மாதம் பத்தாம் திகதி காலை வருகை தந்த அறுபத்தொரு வயதுடைய சுவிஸ் பிரஜையான மதபோதகர் சிவராஐ்போல் சற்குணராஐா   குறிப்பாக யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் விசேட ஆராதனை நிகழ்விலும் வேறு சில நிகழ்வுகளிலும் பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இம்மாதம் பதினாறாம் திகதி மீண்டும் தனது நாட்டுக்கு சென்ற பின்னர் அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 தற்பொழுது சுவிஸ்சிலாந்தின் பேண்நகரில் உள்ள இன்செல்ஸ்பிற்றல் பல்கலைக்கழக வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கான சிகிச்சையினை அவர் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்குறித்த போதகரின் தலைமையில் நடைபெற்ற ஆராதனை நிகழ்வுகளில் பங்கெடுத்த அனைவரும் தங்கள் வீடுகளில் உடனடியா தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதுடன் தங்களது விபரங்களை அருகில் உள்ள பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தங்களுடையதும் தங்களைச் சார்ந்தவர்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மிக அவசியமானதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11