மன்னாரில் 11 குடும்பங்கள் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் - வைத்திய அதிகாரி 

22 Mar, 2020 | 05:26 PM
image

மடு மற்றும் நானாட்டான் பிரதேசங்களில் பதினொரு குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போதகரின் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்னும் சந்தேகத்தில் குறித்த 11 குடும்பங்களும்  அவர்களது வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த போதகர் கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்  முன்னெடுத்த ஆராதனையில்  கலந்து கொண்டவர்களை தேடும் நடவடிக்கையில் மன்னார் பொலிஸாரும் சுகாதார துறையினரும்  ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆராதனையில் குறித்த குடும்பங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக சுகாதார  துறையினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில்  நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட  மடுக்கரை மற்றும் அச்சங்குளம் கிராமங்களில் 5 குடும்பங்களையும் , மடுப்பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட தேக்கம் கிராமத்தில் 6 குடும்பங்களையும் அவர்களது வீட்டிலேயே  தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர்கள்  குறித்த ஆராதனையில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த 11 குடும்பத்தினரும் அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான மருத்துவம், சுகாதாரம் , உலர் உணவு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15