ஒன்றிணைந்து செயற்படுவோம் : பாராளுமன்றத்தை கூட்டுங்கள் - எரான்

22 Mar, 2020 | 03:41 PM
image

(ஆர். விதுஷா )

நாட்டு மக்களுக்கு முதலிடம் கொடுத்து அரசியல் வேறுபாடுகளை மறந்து  கொரோனா  வைரஸ் தாக்கத்தை இல்லாதொழிப்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய  நேரம் வந்துள்ளதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான  எரான்  விக்ரமரத்ன, பாராளுமன்றத்தை    உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவேற்றம் செய்து இருக்கும் எரான், மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

நோய் நிலைமை என்பது இன மத பேதங்கள் இன்றி அனைவருக்கும் பொதுவானதாகும். ஆகவே அதனை முறியடிப்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியமானதாகும்.

அதனைக் கருத்திற்கொண்டு இந்த வைரஸ் பரவலுக்கு எதிராகப் போராடுவது தொடர்பில் ஒன்றிணைந்து தீர்மானம் எடுப்பதற்காக பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கேட்டுக்கொள்கின்றேன் .

இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து எமது நாட்டை காப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய தயாராக இருக்கின்றோம் .

ஆகவே நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில்  அனைவரும் சுகாதார அதிகாரிகளுடைய அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட வேண்டியது  அவசியமானதாகும்.

அத்துடன் நாட்டு மக்களின் நலனுக்காக சேவையாற்றும் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09