பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லிலி­ருந்து முழு­மை­யாக வில­கிய பஷீர்

Published By: Robert

21 Jun, 2016 | 09:22 AM
image

பிர­தி­நி­தித்­துவ அர­சிய­லிலி­ருந்து முழு­மை­யாக வில­கிக்­கொள்­வ­துடன் உயிர்­பி­ரியும் வரை முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் அங்­கத்­த­வ­ரா­கவே இருப்பேன் என்று அக்­கட்­சியின் தவி­சா­ளரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் சேகு­தாவூத் அறி­வித்­துள்ளார்.

இன்­றைய முஸ்லிம் அர­சியல் பிர­மு­கர்கள் அனை­வரும் சமு­தாய ஈடேற்றம் பற்றி சிந்­திக்­காது பத­வி­க­ளையும், சலு­கை­க­ளையும் சௌக­ரி­யங்­க­ளையும் குறி­வைத்து அர­சி­யலில் ஈடு­ப­டு­கின்­றனர். இதனால் எனது தனிப்­பட்ட அர­சியல் நம்­ப­கத்­தன்­மையை காத்­துக்­கொள்ளும் வகையில் பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலில் இனி­யொ­ரு­போதும் ஈடு­ப­டு­வ­தில்­லை­யென்ற கடி­ன­மான முடி­வுக்க வந்­துள்ளேன் என்றும் அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:-

கடந்த 27 வரு­ட­கா­ல­மாக செயல்­பட்­டு­வந்த பிர­தி­நி­தித்­துவ அர­சியல் முறை­மையில் இருந்து இன்று தொடக்கம் முழு­வ­து­மாக விலகிக் கொள்ளும் எனது தீர்க்­க­மான தீர்­மா­னத்தை இலங்­கைவாழ் மக்கள் அனை­வ­ருக்கும் இவ்­வ­றிக்கை மூலம் தெரி­வித்துக் கொள்­கிறேன்.

நாடா­ளு­மன்றம், மாகா­ண­சபை உள்­ளிட்ட எந்­த­வொரு தேர்­த­லிலும் இனி­வரும் காலத்தில் ஒரு வேட்­பா­ள­ராக பங்­கு­பற்றப் போவ­தில்லை என்றும், எந்­த­வொரு கட்­சியின் தேசி­யப்­பட்­டி­ய­லிலோ, அல்­லது எதிர்­கா­லத்தில் தேர்தல் சட்­டங்­களில் ஏற்­படும் மாற்­றங்­க­ளினால் வரும் வேறு ஏதேனும் முறை­யிலோ பாரா­ளு­மன்­றத்­திற்கோ மாகா­ண­ச­பைக்கோ மக்கள் பிர­தி­நி­தி­யாக செல்­லப்­போ­வ­தில்லை என்­ப­தையும் பகி­ரங்­க­மாக அறி­யத்­த­ரு­கிறேன்.

1981ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்­டு­வ­ரை­யான 13 வரு­ட­காலம் ஈரோஸின் அங்­கத்­த­வ­ராக செயல்­பட்டேன். 1994ஆம் ஆண்டு தொடக்கம் நிகழும் காலம்­வரை 22 வரு­டங்கள் தொடர்ந்­தேர்ச்­சி­யாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உறுப்­பி­ன­ராக உள்ளேன். மரணம் வரை இக்­கட்­சியின் அங்­கத்­த­வ­ரா­கவே இருக்கும் விருப்­பையும் கொண்­டுள்ளேன்.

1989, 1994, 2000, 2001, 2004, 2010 ஆகிய ஆண்­டு­களில் நடை­பெற்ற ஆறு பாரா­ளு­மன்றத் தேர்­தல்­க­ளிலும் 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகா­ணத்­திற்குத் தனி­யாக நடந்த முத­லா­வது மாகா­ண­சபைத் தேர்­த­லிலும் போட்­டி­யிட்­டுள்ளேன். 1989ஆம் ஆண்­டுக்கும் 2015ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக, பிரதி அமைச்­ச­ராக, அமைச்­ச­ரவை அந்­தஸ்­தற்ற அமைச்­ச­ராக, அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ராக, கிழக்கு மாகாண எதிர்­கட்சித் தலை­வ­ராக பல தரப்­பட்ட பொறுப்­பு­களில் செயற்­பட்­டி­ருக்­கிறேன்.

முதன் முதலில் 1989ஆம் ஆண்டு ஈழப் புரட்சி அமைப்பின் சுயேச்­சைக்­குழு மூலம் கிடைத்த தேசி­யப்­பட்­டி­யலின் ஊடாக பாரா­ளு­மன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்றேன். 2000, 2001, 2004ஆம் ஆண்­டு­களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசியப் பட்­டியல் மூலம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரானேன். 2010 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மட்­டக்­க­ளப்பு மாவட்ட மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தேன்.

1989 ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரையும் பின்னர் 2000ஆம் ஆண்­டி­லி­ருந்து 2001ஆம் ஆண்டு வரையும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும், 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை பிர­தி­ய­மைச்­ச­ரா­கவும், 2007ஆம் ஆண்டில் 10 மாதங்கள் மட்டும் அமைச்­ச­ரவை அந்­தஸ்­தற்ற அமைச்­ச­ரா­கவும், 2010இலி­ருந்து மூன்று வரு­டங்கள் மீண்டும் பிர­தி­ய­மைச்­ச­ரா­கவும், 2013இலி­ருந்து 2015 வரை அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளேன்.

தமிழ்த்­தே­சிய அர­சி­ய­லுக்­குள்­ளி­ருந்து 1990களில் வட­கி­ழக்கில் வாழும் முஸ்­லிம்கள் மீது நிகழ்த்­தப்­பட்ட வன்­மு­றை­களின் கார­ண­மாக முஸ்­லிம்­க­ளுக்­காகத் தனித்துக் குரல் கொடுக்கும் அவ­சி­யத்­தினை உணர்ந்தேன். இத­ன­டிப்­ப­டையில் பெருந்­த­லைவர் அஷ்­ரஃபின் வேண்­டு­கோளை ஏற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸில் இணைந்து முஸ்லிம் தேசிய அடை­யாள அர­சி­ய­லுக்குள் நுழைந்தேன். நான் அர­சி­யலில் பிர­வே­சித்த ஆரம்ப காலத்­தி­லி­ருந்து இன்று வரை தமிழ் முஸ்லிம் சிறு­பான்மை இனங்­க­ளுக்­கி­டையில் ஒரு பால­மாகச் செயற்­பட்­டுள்ளேன் என்ற மனத்­தி­ருப்தி எனக்­கி­ருக்­கி­றது.

சம­கால அர­சியல் சூழலில் முஸ்லிம் தேசிய அடை­யாள அர­சியல், தனது இனத்தின் பிர­தான அர­சியல் அபி­லா­சையை பலி­கொ­டுக்கும் அள­வுக்கு பெரும் நெருக்­க­டி­களைச் சந்­திக்கத் துவங்­கி­யி­ருக்­கி­றது. இவ்­வா­றான ஒரு கட்­டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் இருப்பும், இதன் தலை­மை­களின் நம்­ப­கத்­தன்­மையும் உறு­திப்­பாடும் இவை­போல இக்­கட்­சியின் உயிர்ப்பும், துடிப்பும், தூய்­மையும் பாது­காத்துப் பேணப்­ப­ட­வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மாகும்.

இன்­றைய முஸ்லிம் அர­சியல் பிர­மு­கர்கள் அனை­வரும் சமு­தாய ஈடேற்றம் பற்­றிய பிரக்­ஞை­யற்று பத­வி­க­ளையும், சலு­கை­க­ளையும் சௌக­ரி­யங்­க­ளையும் குறி­வைத்தே அர­சி­யலில் ஈடு­ப­டு­கி­றார்கள் என்ற விமர்­சனம் முஸ்லிம் குடிமைச் சமூ­கத்தால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. இது­மாத்­தி­ர­மன்றி எந்­த­வொரு அர­சியல் கட்­சி­யிலும் எவரும் நேர்­கோட்டை வரைய முற்­ப­டு­கின்­ற­போ­தெல்லாம் பத­வி­களை நாடிய மூன்­றாந்­தர நட­வ­டிக்­கை­க­ளாக அவை சோடித்துக் காட்­டப்­பட்டு நேரிய மாற்­றங்­க­ளுக்­கான முயற்­சிகள் தோற்­க­டிக்­கப்­ப­டு­கின்­றன. எனவே, புற­வி­மர்­ச­னங்­களை சுய­வி­மர்­ச­னங்­க­ளாக மாற்றிக் கொண்டு சோடனைக் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்குள் இருந்து விடு­பட்டு எனது தனிப்­பட்ட அர­சியல் நம்­ப­கத்­தன்­மையைக் காத்­துக்­கொள்ளும் வகையில் பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலில் இனி­யொ­ரு­போதும் ஈடு­ப­டு­வ­தில்லை என்ற கடி­ன­மான முடி­வுக்கு வந்­துள்ளேன். சம­கால முஸ்லிம் அர­சி­யலில் பத­வி­களைப் பெறும் இலக்­கு­க­ளற்ற ஒரு பாத்­தி­ரத்தின் மூலம் செய­லாற்ற முடி­வெ­டுத்­துள்ளேன். பிர­தி­நி­தித்­துவ அர­சி­யல்­வா­தி­யாக அன்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஒரு கடை­நிலை உறுப்­பி­ன­ரா­க­வேனும் இருந்து கட்­சியைத் தூய்­மைப்­ப­டுத்தும் பணியில் தீவி­ர­மான அர­சியல் செயல்­பாட்­டா­ள­னாக எனது எஞ்­சிய வாழ்நாள் நெடு­கிலும் இருக்க விரும்­பு­கிறேன். இதன் மூலம் 35 வரு­டங்கள் பல­த­ரப்­பட்ட அர­சி­ய­லிலும் நான் பெற்­றுக்­கொண்ட அனு­ப­வங்­களைப் பகிர்ந்து கொள்ளும் அரிய வாய்ப்பும் எனக்குக் கிடைக்கும் என மகிழ்­வ­டை­கிறேன்.

எனது ஒன்­றரை தசாப்­த­கால இயக்க வாழ்­விலும், கால் நூற்­றாண்டு கடந்த தேர்தல் முறை அர­சி­ய­லிலும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களும், ஒரு இயக்­கமும், ஒரு அர­சியல் கட்­சியும், பல தலை­வர்­களும் தொடர்­பு­பட்­டுள்­ளனர். இவர்கள் அனை­வ­ருக்கும் இச்­சந்­தர்ப்­பத்தில் எனது உணர்வு பூர்­மான நன்­றி­ய­றி­தலைத் தெரி­விக்கக் கட­மைப்­பட்­டுள்ளேன்.

விசே­ட­மாக ஈரோஸ் இயக்க நிறு­வுனர் மறைந்த அண்ணன் இரத்­தின சபா­பதி, இது­வரை காணா­மல்­போ­ன­வராய்க் கரு­தப்­படும் எனது அர­சியல் ஆசான் தோழர் பால­கு­மாரன் உட்­பட தோழர்கள் அனை­வ­ருக்கும், இவ்­வாறே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தேசிய ஐக்­கிய முன்­னணி ஆகிய கட்­சி­களை நிறு­விய மறைந்த தலை­வரும், முஸ்லிம் தேசிய அர­சி­யலில் எனது குரு­வு­மான மறைந்த எம்.எச்.எம்.அஷ்­ரஃப்­புக்கும், என்னை மூன்று தட­வைகள் தேசியப் பட்­டி­யலில் பாரா­ளு­மன்றம் அனுப்பி வைக்க பங்­க­ளிப்பு நல்­கிய இன்­றைய தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள், இந்நாள் உச்சபீட உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் போன்றோருக்கும் மேலும் நான் போட்டியிட்ட ஏழு தேர்தல்களிலும் எனக்கு வாக்களித்த ஆயிரக்கணக்கான மக்களுக்கும் எனது இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல எனக்கு பிரதியமைச்சர், அமைச்சர் அந்தஸ்துக்களை வழங்கிய இரண்டு தேசிய கட்சிகளின் அந்தந்தக் காலகட்டத் தலைவர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, நான் பங்குபற்றிய இயக்க அரசியலிலும் கட்சி அரசியலிலும் நான் வகித்த பாத்திரங்களின் விளைவாக மனிதர்களுக்கு அசௌகரியமோ மனப்பாதிப்போ நடந்திருக்க இயற்கையாகவே வாய்ப்புண்டு. எனவே இவ்வாறு எவருக்கேனும் நிகழ்ந்திருந்தால், அவர்கள் பெருமனது கொண்டு என்னை மன்னிக்குமாறும் வேண்டிக் கொள்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17