உயிரிழந்த கைதிகள் இருவரில் ஒருவருக்கு தலையில் துப்பாக்கிச் சூடு ; 6 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை

Published By: Vishnu

22 Mar, 2020 | 11:02 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அநுராதபுரம்  சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற குழப்ப நிலையின் போது கொல்லப்பட்ட இரு கைதிகளில் ஒருவர், தலையை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக  அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார்.

இந்நிலையில் அநுராதபுரம்  சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மை, வன்முறை, தீ வைப்பு சம்பவங்கள் இன்று காலையாகும் போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அநுராதபுரம் பொலிஸாரால் சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பணிப்பாளர்  பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன கூறினார்.

மொத்தமாக குறித்த வன்முறை, அமைதியின்மையின் போது 8 கைதிகள் காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் இருவரே உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய,  ஏனைய 6 பேரும்  சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் சிகிச்சை பெற்று வருவதாக சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் சிறைச்சாலையின் பாதுகாப்பை பொலிஸார் தற்போது உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24