அனுராதபுரம் சிறை அரசியல் கைதிகள் தொடர்பில் உறவுகள் கலங்கத் தேவையில்லை -டக்ளஸ்

21 Mar, 2020 | 10:02 PM
image

அனுராதபுரம் அரசியல் கைதிகள் தொடர்பாக அவர்களின் உறவினர்கள் கலங்கத் தேவையில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

அனுராதாபுரம் சிறைச்சாலையில் இன்று(21.03.2020) குழப்ப நிலை ஏற்பட்டதை தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகளும் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்பு கொண்ட அமைச்சர், அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரிசயல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் அரசியல் கைதிகளின் தற்போதைய நிலை தொடர்பிலும் கேட்டறிந்தார்.

இதன்போது அரசியல் கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திய சிறைச்சாலை அதிகாரிகள்,அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் அமைச்சருக்கு விளக்கமளித்தனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அங்கு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் கைதி ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் 3 கைதிகள் காயமடைந்துள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, சம்பவம் தொடர்பில் அறிந்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு தங்கள் உறவுகளின் நிலை தொடர்பில் அறிந்துகொள்ள ஆர்வம் செலுத்தி வருகின்ற நிலையில் ஏற்கனவே அமைச்சரினால் மேற்குறித்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19