உணவு பழக்­க­வ­ழக்­கங்­களின் மாற்­றத்­தாலும், அதன் எண்­ணிக்கை உயர்­வாலும் வியாதி மற்றும் பாதிப்­பு­களின் எண்­ணிக்­கையும் உயர்ந்து வரு­கி­றது. இயற்கை உணவைத் தவிர்த்து தற்­போது ஏரா­ள­மா­ன­வர்கள் செயற்கை முறையில் வண்ணம் மற்றும் சுவை­யூட்­டப்­பட்ட உணவுப் பொருட்­க­ளையும், துரித உணவு வகை­க­ளையும், ஜங்க் ஃபுட் எனப்­படும் பாக்­கற்­று­களில் அடைக்­கப்­பட்ட பதப்­ப­டுத்­தப்­பட்ட உணவு பொருட்க­ளையும் சாப்­பிட தொடங்­கி­விட்­டார்கள்.

இதனால் அசிட் பிரச்சினை அல்சர், ஜீ ஆர்டி எனப்­படும் பாதிப்பு ஆகி­யவை ஏற்­ப­டு­கி­றது. அல்சர் பாதிப்பை கண்­ட­றி­யா­மலோ அல்­லது அலட்­சி­யப்­ப­டுத்­தியோ இருக்கும் போது அது நாள்­பட்ட அல்­ச­ராக மாறி­ய­துடன் இல்­லாமல் புற்­று­நோ­யையும் உரு­வாக்­கி­வி­டு­கி­றது. இத­னையும் எண்­டாஸ்­கோப்பி மூலம் கண்­ட­றிந்து தொடர் மற்றும் கூட்டு சிகிச்­சையின் மூலம் தீர்வு காணலாம். எண்­டாஸ்­கோப்பி என்ற கரு­வியின் அறி­முகம் மற்றும் செயல்­பாட்­டிற்கு பின் இந்த துறை அப­ரி­மி­த­மான வளர்ச்­சியை பெற்று வரு­கி­றது. முன்­பெல்லாம் வயிற்றில் ஏதேனும் பிரச்­சினை என்றால் சத்­திர சிகிச்சை செய்து தான் என்­ன­வென்று கண்­ட­றி­ய­வேண்­டி­ய­தி­ருக்கும். தற்­போது பெருங்­குடல் பகுதி மற்றும் சிறு­குடல் பகுதி என தனித்­த­னி­யாக எண்­டாஸ்­கோப்பி மூலம் பார்த்து சிக்கல் என்ன என்­பதை துல்­லி­ய­மாக கண்­ட­றிய முடி­கி­றது” என்று இத்­து­றையில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு வரும் நவீன சிகிச்­சைகள் குறித்து எம்­முடன் இயல்­பாக பேசு­கிறார் டொக்டர் A.C.அருண். இவர் மது­ரையில் உள்ள வேலம்மாள் மருத்­து­வ­மனை மற்றும் மருத்துவ கல்­லூ­ரியில் பேரா­சி­ரி­ய­ரா­கவும், அனு­பவம் வாய்ந்த மருத்­து­வ­ரா­கவும் பணி­யாற்­றி­வ­ரு­கிறார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பசி எடுக்கும் போது சாப்­பி­டு­வது ஒரு பழக்கம். அதே போல் காலை மதியம் இரவு ஆகிய நேரங்­களில் உணவு சாப்­பி­டு­வதை தவிர்க்­க­கூ­டாது என்­கி­றார்கள். எந்த நேரங்­களில் எம்­மா­தி­ரி­யான உணவை எடுத்துக் கொள்­ள­வேண்டும்? எதனை தவிர்க்­க­வேண்டும்?

காலையில் எட்டு மணிக்கு முன்னர் காலை உணவும், மதியம் இரண்டு மணிக்கு முன்னர் மதிய உண­வையும், இரவு எட்டு மணிக்கு முன்னர் இரவு உண­வையும் சாப்­பி­ட­வேண்டும். இது தான் உட­லியல் அமைப்பில் இயங்கும் சக்­க­ரத்­திற்­கான தேவைப்­படும் விசயம். அதே போல் இரவு உறங்­கு­வ­தற்கு இரண்டு மணி நேரம் முன்னர் நாம் சாப்­பிட்டு முடித்­து­வி­ட­வேண்டும். அல்­லது சாப்­பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்கச் செல்­ல­வேண்டும். அதே சம­யத்தில் அகால வேளையில் பின்­னி­ரவில் உணவு சாப்­பி­டக்­கூ­டாது. அதனால் எம்­மு­டைய உட­லியல் சக்­க­ரத்தின் இயக்­கத்­திற்கு இந்த நேரந்­த­வ­றாமை இருக்­க­வேண்டும். இதனை நாம் முறிக்கும் போதோ அல்­லது அலட்­சி­யப்­ப­டுத்தும் போதோ என்­ன­வாகும் என்றால், உடலில் அமி­லங்­களின் உற்­பத்தி மற்றும் செயல்­பா­டு­களில் சமச்­சீ­ரற்­றத்­தன்மை தோன்றுவதற்கு வாய்ப்பு ஏற்­பட்டு அல்சர் என்ற பாதிப்பை உரு­வாக்கும். அதேபோல் இரவு வேளையில் அதி­க­ளவில் சாப்­பி­டு­வதை தவிர்க்­க­வேண்டும்.

தற்­போ­தைய நிலையில் காலை மற்றும் மதி­ய­ வே­ளை­களில் சரி­யாக சாப்­பி­டாமல் இரவு வேளையில் ஆற அமர அதி­க­ளவில் சாப்­பி­டு­கி­றார்கள். இதன் கார­ண­மா­கவும் நம்­மு­டைய உடலில் அமி­லங்­களின் உற்­பத்தி பாதிப்­ப­டை­கி­றது. இதன் மூலம் நம் உடலின் எடை அதி­க­ரிப்­பிற்கு நாமே கார­ண­மாகி விடு­கிறோம். இரவு நேரங்­க­ழித்து தான் உணவை சாப்­பி­ட­முடியும் என்ற நிலையில் இருப்­ப­வர்கள், மாலை வேளையில் சிறி­த­ளவு சத்­தான நொறுக்கு தீனி­களை சாப்­பி­டு­வதில் தவ­றில்லை.

நெஞ்­செ­ரிச்சல் என்­பது எதன் அறி­கு­றி­யாக எடுத்துக் கொள்­ள­வேண்டும்?

அல்சர் பாதிப்­பிற்கும், இதய பாதிப்­பிற்கும் ஒரே அறி­கு­றி­யாக இருப்­பது நெஞ்­செ­ரிச்சல். இதனால் தான் ஏரா­ள­மா­ன­வர்­க­ளுக்கு என்ன பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்­கி­றது என்­பதில் குழப்பம் ஏற்­ப­டு­கின்­றன. மேலும் சில­ருக்கு நெஞ்­ச­டைப்­பது போன்ற உணர்வு இருக்கும். இவை சாதா­ரண வாய்வு தொல்லை என்று கருதி பெரும்­பாலானோர் மருந்­து­க­டை­களில் இதற்­கான மருந்­து­களை கேட்டு வாங்கி சாப்­பிட்டு நிவா­ரணம் தேடிக் கொள்­கி­றார்கள். ஆனால் இது தவறு. நெஞ்­செ­ரிச்சல், நெஞ்­ச­டைப்பு, நெஞ்சில் சிறிய வலி ஆகி­யவை தோன்­றினால் உட­ன­டி­யாக ஒரு மருத்­துவ பரி­சோ­தனை செய்து கொள்வது தான் சரி­யான தீர்வு. நாமே அவதானிப்­பதை விட பரி­சோ­த­னைகள் மூலம் கண்­ட­றிந்து அதற்­கு­ரிய சிகிச்சை மேற்­கொள்­வது தான் இதய பாதிப்பு மற்றும் அல்சர் பாதிப்­பி­லி­ருந்து தற்­காத்து கொள்ளும் சிறந்த வழி­முறை.

ஃபேட்டி லீவர் இருப்­ப­வர்கள் எம்­மா­தி­ரி­யான விழிப்­பு­ணர்­வுடன் இருக்­க­வேண்டும்?

உடல் எடை அதி­க­மாக இருப்­ப­வர்களுக்கு அதா­வது உடற்­ப­ருமன் என்ற குறிப்பிட்­ட­வர்­க­ளுக்­குத்தான் இந்த ஃபேட்டி லீவர் (Fatty Liver) பொது­வா­ன­தாக காணப்­ப­டு­கி­றது. அதா­வது உடலில் கூடு­த­லாக இருக்கும் கொழுப்பு சத்­துகள் கல்­லீ­ர­லிற்கு சென்று சேர்ந்து தேக்­க­ம­டை­வ­தைத்தான் ஃபேட்டி லீவர் என்­பார்கள். இதன் கார­ண­மாக கல்­லீ­ரலின் செயல்­பாடு இயல்­பான அளவை விட குறை­வாக இருக்­கி­றது. இதனால் செரி­மா­னத்­தி­றனும் பாதிக்­கப்­ப­டு­கி­றது. அதே போல் செரி­மா­னத்­திற்கு பேரு­தவிப் புரியும் கணை­யத்­திலும், அதன் செயல்­பா­டான இன்­சுலின் சுரப்­பிலும் பாதிப்­புகள் ஏற்­ப­டலாம். இந்த கணையம் மது அருந்­து­வதால் அதி­க­ள­விற்கு பாதிப்­பிற்­குள்­ளா­கி­றது. அதேபோல் செரி­மா­னத்­திற்கு பித்­தப்­பையும் தன்­னா­லான பங்­க­ளிப்பை அளிக்­கி­றது. இதன் இயல்பும் கெட்டு போவதால் செரி­மா­னத்தில் சிக்கல் ஏற்­ப­டு­கி­றது. அதனால் கல்­லீரல், குடல், கணையம், பித்­தப்பை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பு ஏற்­பட்­டாலும் கூட செரி­மா­னத்தில் பிரச்­சினை ஏற்­ப­டு­கி­றது. அதனால் ஜீர­ணத்தில் ஏதேனும் பிரச்­சினை என்றால் இந்த நான்கு உறுப்­பு­க­ளிலும் மருத் துவர்கள் பரி­சோ­தனை நடத்­து­மாறு அறி­வுறுத் துவார்கள்.

உடற்­ப­ரு­ம­னுக்­காக மேற்­கொள்­ளப்­படும் பேரி­யாட்ரிக் சத்­திர சிகிச்­சையால் ஏதேனும் பின்­வி­ளை­வுகள் இருக்­கி­றதா?

உடல் எடையை குறைப்­ப­தற்­காக மருத்­து­வர்கள் வயிற்றின் கொள்­ளளவை குறைப்­ப­தற்­காக பேரி­யாட்ரிக் சர்­ஜேரி என்ற ஒரு சத்­திர சிகிச்­சையை மேற்­கொள்­வார்கள்.

இதனால் பலன் உண்டு. பின்­வி­ளை­வுகள் மிகவும் குறைவு. இவ்­வித சிகிச்­சையை அனை­வ­ருக்கும் பொது­வா­ன­தாக கரு­த­மு­டி­யாது. ஒவ்­வொ­ருவ ருக்கும் அவரின் உயரம் மற்றும் உடல் எடையை வைத்து இதை தீர்­மா­னிக்க முடி­கி­றது. உணவு பழக்க வழக்­கங்­களால் உடல் எடையை மாற்­றி­ய­மைக்க முடியவில்லை என்­றாலோ அல்­லது அவர்­களின் உடல் எடை மருத்துவ பரிந்­து­ரைக்கு அப்பால் அதா­வது 40 கிலோ­விற்கு மேலி­ருந்தால் மட்­டுமே இந்த சிகிச்சை மேற்­கொள்­ளப்படுகி­றது. அத்து டன் இன்­சு­வைஸ்ட் புரோட்­டோ­காலின் அடிப்­ப­டையில் தான் இதனை பரிந்­து­ரைக்க முடியும்.

பைல்ஸ் எனப்­படும் மூலம் தோன்­று­வ­தற்கும் உணவு பழக்­கத்­திற்கும் தொடர்­புண்டா?

நிச்­ச­ய­மாக. பைல்ஸ் வரு­வ­தற்கு நாம் அதி­க­ளவில் மைதா மாவால் செய்­யப்­படும் உணவு பொருளை சாப்­பி­டு­வ­தே காரணமாகும். உதா­ர­ண­மாக பரோட்­டாவை தொடர்ந்து சாப்­பி­டு­ப­வர்­க­ளுக்கு மூல நோயின் பாதிப்பு ஏற்­படும்.மலச்­சிக்கல் பிரச்­சி­னைக்கு தீர்வு காணாமல் அதனை தொடர்ந்து அலட்­சியப்படுத்தி வரு­வதன் காரண மாகவும் மூல நோய் பாதிக்கும்.இயற்கை உணவு தவிர்த்த வேறு வகை­யான உண­வு­வ­கைகள் கூட மலச்­சிக்­க­லுக்கு காரணமாகின்­றன. மூலத்தால் பாதிக்­கப்­பட்ட நோயாளி ஒருவருக்கு மலத்­து­வா­ரத்தின் வழி­யாக இரத்த கசி­வுடன் மலம் வெளி­யே­றினால் அதனை உட­ன­டி­யாக கண்காணித்து அரு­கி­லுள்ள மருத்­து­வர்­களை சந்­தித்து ஆலோ­சனைப் பெற வேண்டும். ஏனெனில் இத்தகையோருக்கு சத்திர சிகிச்சை அவசிய மாகலாம்.

பெண்கள் பித்தப்பை கற்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான தீர்வு என்ன?

75 சதவீதத்திற்கும் மேலான பெண்கள் பித்தப்பை கற்களால் பாதிக்கப்படுகிறார்கள். பித்தப்பையில் உள்ள கற்களை நவீன கருவிகளைக் கொண்டு லேப்ராஸ்கோப்பி மூலம் அகற்றுகிறோம். ஒரு சிலருக்கு பித்தப்பையையும் அவர்களின் உடல் நலம் கருதி அகற்றுகிறோம்.

எண்டாஸ்கோப்பி மூலம் அல்ட்ரா சவுண்ட் மற்றும் ஸ்கேன் வசதிகள் பொருத்தப்பட்டுஅங்கிருக்கும் கற்கள் அகற்றப் படுகின்றன. ஹோர்மோன் பிரச்சினை, இரத் தத்தில் உள்ள கொழுப்புகள் என இரண்டு கார ணங்களை கூறலாம். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்: 0091 8489411000.

தொகுப்பு: அனுஷா