ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் கைதானோர் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு

Published By: J.G.Stephan

21 Mar, 2020 | 02:49 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் கைதானோரின் எண்னிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.
  

உகண, பண்டாரகம, தம்புள்ளை, வலஸ்முல்லை, நல்லதண்ணி, அம்பாறை, பண்டாரவளை, ஹப்புத்தளை, தங்காலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.



உகண பொலிஸ் பிரிவில் மூவரிடம் இருந்து கஞ்சா ஒரு கிராமும், ஹெரோயின் 40 மில்லிகிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது. பண்டாரகம பொலிஸ் பிரிவில் ஊரடங்கின் போது பாதையில் சுற்றித் திரிந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.  முற்பகல் 10.45 மணியளவில் அட்டுலுகம பகுதியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பமான ஊரடங்கு சட்டமானது பல பகுதிகளிலும் உரிய முறையில் கடைப்பிடிக்கப்படுவதாக கூறிய பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன, அவற்றை மீறுவோர் கைது செய்யப்படுவர் என தெரிவித்தார்.

 நேற்று இரவு 8.15 மணியளவில்  ஊரடங்கு அமுலில் உள்ள போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 27 வயதான இளைஞர் ஒருவர் தங்காலையில் கைது செய்யப்பட்டார்.

 நேற்று இரவு 10.15 மணியளவில்  பண்டாரவளை பொலிஸ் பிரிவில் மதுபானம் அருந்திக்கொண்டும் விளையாட்டு மைதானத்திலும் இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் 18 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். இதேவேளை  இன்று முற்பகல் 9.30 மணியளவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் லொறியொன்றில்  பயணித்துக்கொன்டிருந்த 55 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளையில்  ஊரடங்கு அமுலில் இருந்த போது உணவகம் ஒன்றினை திறந்து வைத்திருந்த  35 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கட்டுநாயக்கவில்  நள்ளிரவு 12.00 மணிக்கு பாதையில் சுற்றித் திருந்த 43,44 வயதுகளை உடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இதேவேளை நேற்று இரவு 8.50 மணிக்கு அம்பாறையில் ஊரடங்கின் போது பாதையில் சுற்றிய 43 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 நல்லதண்னி பொலிஸ் பிரிவில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியில் காரில் பயணித்துக்கொண்டிருந்த 36,47 வயதுகளை உடைய கொலன்னாவ மற்றும் மஸ்கெலிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 வலஸ்முல்லை பொலிஸ் பிரிவில்  ஊரடங்கு அமுலில் இருந்த போது நேற்று இரவு 10.30 மணியளவில் இரு டிப்பர்களில் மணல் கொண்டு சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  

டிப்பர் வண்டிகளும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன. கைதானோர் 22 முதல் 29 வயதுகளுக்குட்பட்டோர் ஆவர்.

 இதேவேளை தம்புள்ளை பொலிஸ் பிரிவில் புகாகல பகுதியில்  இரு முச்சக்கர வண்டிகள், 3 மோட்டார் சைக்கிள்களில், ஊரடங்கின் போது தேவையற்ற விதமாக நடமாடிய 9 பேர் இன்று முற்பகல் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 



முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51