எப்பாவெல பொஸ்பேட் தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினால் தொழிற்சாலையின் ஒரு பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

தீ விபத்தால் தொழிற்சாலையின் விநியோக பிரிவு, கணக்காய்வு பிரிவு மற்றும் ஆவண காப்பகங்கள் பிரிவு முழுமையாக சாம்பலாகியுள்ளன.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போது சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை