முகக்கவச பாவனை தொடர்பான முக்கிய அறிவுறுத்தல் !: வைத்தியர் கூறும் சிறப்பு ஆலோசனை

Published By: J.G.Stephan

21 Mar, 2020 | 01:40 PM
image

முகக்கவசம் அணிவோரும், அணியத் தேவை இல்லாதோரும் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவுதல் அத்தியாவசியமாகுமென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் சமுதாய மருத்துவ நிபுணருமான வைத்திய கலாநிதி இ.கேசவன் தெரிவித்தார்.

அவர் மேலும தெரிவிக்கையில், தற்பொழுது கொரோனா நோய் பரவிவருவதால் பொதுமக்கள் முகக்கவசத்தை வாங்குவதற்கு தேடித் திரிவதனை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளி அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவருடன் நேரடியாக 3 அடிக்குட்பட்ட தூரத்தில் ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளுபவர்கள் முகக்கவசம் அணிவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



கொரோனா நோயாளி இருமும்போது, தும்மும்போது இந்நோய்க்கிருமிகள் வெளியேறுவதால் கொரோனா நோயாளி முகக்கவசம் அணிவது கட்டாயம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக கொரோனா நோயாளியை அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவரை பராமரிக்கும் வைத்தியர், தாதிமார் மற்றும் சுகாதார சேவை சம்பந்தப்பட்டவர்கள் முகக்கவசம் அணிதல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நோயாளியின் உமிழ்நீர் துகள்கள் மூலமாக கொரோனா பரவும். உமிழ்நீர் துகள்கள் பெரும்பாலும் நீண்டதூரம் பயணிக்காது. எனவே நோயாளியிடமிருந்து 4 அடிக்கு அப்பால் இருப்பவர்கள் முகக்கவசம் அணியவேண்டிய அவசியம் கிடையாது.

முகக்கவசம் அணிவோரும், அணியத் தேவை இல்லாதோரும் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவுதல் அத்தியாவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53