டிஜிட்டல் திரையை பார்ப்பதால் உண்டாகும் வறண்ட கண் பாதிப்பிற்கு  நவீன சிகிச்சை!

21 Mar, 2020 | 12:21 PM
image

இன்றைய திகதியில் பெரும்பாலனவர்கள் ணனித்திரை, அலைபேசி திரை, செல்போன் திரை என டிஜிட்டல் திரையை பார்ப்பது அதிகரித்து வருகிறது. இதனால் கண்களை இயல்பாக இமைப்பது குறைந்துவிட்டது.

இமைப்பது குறைந்துவிட்டதால் கண்களில் இயல்பாக நடைபெற வேண்டிய நீர் சுரப்பு குறைந்து, கண்கள் ண்டு, கண்களின் ஆரோக்கியத்தை சீரற்றதாக்குகிறது.

நாளடைவில் பார்வை திறன் குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது. இதனை குணப்படுத்த தற்போது ACPA எனப்படும் நவீன சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.

இது குறித்து கண் மருத்துவ நிபுணரான சந்தீப் ஜெயின் தெரிவிக்கையில்,

ண்ட கண் பாதிப்பு தொடக்க நிலையில் இருந்தால், அவர்களுக்கு அவர்களுடைய உடலிலுள்ள பிரத்யேக புரதத்தை அடிப்படையாகக்கொண்டு தயாராகும் ACPA எனப்படும் சொட்டு மருந்தை செலுத்தினால், அவர்களுக்கு ஏற்பட்ட வறண்ட கண் பாதிப்பை குணப்படுத்த இயலும்.

எம்முடைய கண்களிலிருந்து வெளியாகும் கண்ணீரில் இத்தகைய புரதங்கள் இருக்கிறது. மருத்துவ ரீதியாக விளக்கமளிக்க வேண்டுமென்றால், ஆன்ட்டி சிற்றலினேட்டட் புரத ஆன்ட்டிபயாட்டிக் (ACPA) என்ற புரதச்சத்து கண்ணீர் திரவத்தில் இருக்கிறது. இதனை பிரத்யேகமாக சுத்திகரித்து சொட்டு மருந்தாக பயன்படுத்தும்பொழுது, தொடக்கநிலையிலுள்ள வறண்ட கண் பாதிப்பிற்கு முழுமையான நிவாரணமளிக்கிறது.

அத்துடன், நாளாந்தம் டிஜிட்டல் திரையில் பார்ப்பதன் கால அவகாசத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உயரம் மற்றும் தொலைவில் வைத்து டிஜிற்றல் திரையை பார்ப்பதற்கான பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் வறண்ட கண் பாதிப்பு வராமல் தடுக்க இயலும்.” என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04