மருத்துவமனையில் இடமின்மையால் தேவாலயத்திற்குள் பிரதே பெட்டிகள்- இத்தாலியில் செய்தியாளரின் நேரடி அனுபவம்

21 Mar, 2020 | 09:39 AM
image

ஸ்கை நியுஸ்  - ஸ்டுவார்ட் ரம்சாய்

பிரேத அறையின் உதவியாளர் தன்னை பின்தொடர்ந்து வருமாறு தெரிவித்தார்.

பிரதே பெட்டிகள் நிரம்பியிருந்த அறையை நாங்கள் கடந்து சென்றோம்,அந்த அறையின் மூலையில் இன்னொரு கதவு காணப்பட்டது உதவியாளர் உள்ளே கிறிஸ்தவ தேவாலயம் போல காணப்பட்ட பகுதியை சென்று பார்க்குமாறு சைகை செய்தார்.

எனக்கு முதலில் விளங்கவில்லை ஆனால் நான் திரும்பிப்பார்த்தவேளை வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரதே பெட்டிகளை எதிர்கொண்டேன்.

லொம்பார்டியின் கிரெமோனா மருத்துவமனையில் பெருமளவானவர்கள் உயிரிழந்துள்ளதால் அவர்கள் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை உடல்களை சேமிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.

அங்கிருந்தே உடல்களை எடுத்து செல்கின்றனர்.

உயிரிழந்தவர்களிற்கு குடும்பத்தவர்களினால் இறுதி அஞ்சலி செலுத்த முடியாத மரியாதை செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதே இதற்கு காரணம்.

அனைவரும் தனியாக இறக்கின்றார்கள் என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படும்விடயமாக காணப்படுகின்றது

நோயாளர்கள் தங்கள் இறுதி தருணங்களில் எப்படி அச்சத்துடனும் கவலையுடனும் காணப்பட்டார்கள் என விபரிக்கும்போது மருத்துவர்களும் நோயாளிகளும் தங்கள் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொள்கின்றனர்.

நோயாளிகளிற்கான அன்பும் ஆதரவும் மருத்துவ பணியாளர்களிடமிருந்து மாத்திரம் கிடைக்கின்றது-

அவர்கள் நோயாளிகளை பாதுகாக்க முயல்கின்றனர் ஆனால் அனேக தருணங்களில் தோல்வியடைகின்றனர்.

இந்த விடயம் குறித்த தகவல்களை பெறமுயன்றவேளை நான் உண்மையாக மிகவும் மனவேதனைக்கு உட்பட்டேன்,எனது குடும்பமும் பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்தேன்.

அவர்களும் தனித்து மரணிக்கலாம் நானே அல்லது வேறு எவருமோ எதனையும் செய்ய முடியாது.

கிறிஸ்தவ தேவலாயத்தில் காணப்பட்ட உடல்கள் அனைத்தும் அருகில் உள்ள மருத்துவமனையின் ஐசியூவை சேர்ந்தவை.

அந்த மருத்துவமனை வீழ்ச்சிகாணும் நிலையில் உள்ளது.

வைரஸ் எங்களை மிஞ்சும்போது இதுவே இடம்பெறும் லொம்பார்டியில் இதுவே இடம்பெறுகின்றது.

நாங்கள் ஐசியு வோட்களை கடந்த சென்றவேளை அனைத்து கட்டில்களிலும் உடல்அசைவற்ற குழாய்கள் டிரிப்கள் சுவாசகருவிகள் பொருத்தப்பட்ட பலர் காணப்பட்டனர்.இதய துடிப்பை கண்காணிக்கும் மொனிட்டர்கள் மற்றும் பொருத்தப்பட்டுள்ள குழாய்களின் சத்தத்தை மாத்திரம் கேட்க முடிந்தது.

இந்த நோயாளிகள் அனைவரும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர் அவர்கள் அனேகமாக உயிர் பிழைக்க மாட்டார்கள் அவர்கள் எதிர்கொள்ளும் கசப்பான யதார்த்தம் இது.

மருத்துபணியாளர்களிடம் அவர்களை உயிர் பிழைக்க வைப்பதற்கான சிகிச்சகைள் எதுவுமில்லை அவர்கள் தங்களால் முடிந்ததை செய்து அவர்களை காப்பாற்ற முயல்கின்றனர்.

ஒரு வோர்ட்டில் மருத்துவர்களும் தாதிமாரும் நோயாளி ஒருவரை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

அந்த நோயாளி அசைவற்றவராக காணப்படுகின்றார்,

மருத்துவர்கள் தாதிமார்களின்  கவனிப்பு இல்லாவிட்டால் அவர் உயிரிழந்துவிடுவார் என்பது  தெரிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54