(க.கிஷாந்தன்)

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை ரஞ்ஜுராவ என்னும் இடத்தில் நடு வீதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது. இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் உயிராபத்துக்கள் எதுவும் இல்லை என கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பகுதியில் இருந்து மொரட்டுவை பகுதியை நோக்கி சென்ற இந்த கார் கினிகத்தேனை ரஞ்ஜுராவ பகுதியில் வைத்து திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது. 

எனினும் இந்த கார் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது. இந்த விபத்து காரணமாக பல மணி நேரம் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.