சீனாவில் விமானத்திலான அவசரகால நிலைமைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் முகமாக விமானத்தில் சேவையாற்றவுள்ள பணியாளர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. 

செங்டு ஈஸ்ட் ஸ்டார் எயார்லைன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மேற்படி பெண்களுக்கு செங்டு சிவில் விமான அக்கடமியில் இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதை படத்தில் காணலாம். 

மேற்படி பயிற்சியில் பங்கேற்ற சுமார் 20 பெண்கள் பாரிய மரக்குற்றிகளைத் தூக்குதல், மண் சகதியினூடாக பயணித்தல் உள்ளடங்கலான பயிற்சிகளில் ஈடுபட்டனர். 

மேற்படி பயிற்சியானது வன்முறையில் ஈடுபடும் பயணிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு விமானப் பணிப்பெண்களுக்கும் ஏனைய பெண் உத்தியோகத்தர்களுக்கும் உதவும் எனத் தெரிவிக்கப்படுகிறது.