சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களில் பற்றாக்குறை

Published By: Priyatharshan

20 Mar, 2020 | 03:27 PM
image

(நா.தனுஜா)

வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு அவசியமாக உரிய பாதுகாப்பு உபகரணங்களுக்கான பற்றாக்குறையொன்று ஏற்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. 

தற்போதைய நெருக்கடிமிக்க சூழ்நிலையில் இத்தகைய பற்றாக்குறை ஏற்படுவது வரவேற்கத்தக்க விடயமல்ல என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்திருக்கிறது.

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்காகத் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் வலியுறுத்தி கொரோனா வைரஸ் பரவலைக் கட:டுப்படுத்தும் தேசிய செயற்திட்டத்திற்குப் பொறுப்பாக இயங்கிவரும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முதலில் உயர் எச்சரிக்கைப் பிரதேசங்களுக்கு ஊடரங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை பெரிதும் வரவேற்கிறோம். 

அதேவேளை இந்த உயர் எச்சரிக்கைப் பிரதேசங்களிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் தொடர்பான விபரங்களைக் கண்டறிவது மிகவும் அவசியமானதாகும்.

அத்தோடு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். அதன்படி அத்தியாவசிய காரணங்கள் தவிர்த்து ஒட்டுமொத்த நாட்டிலும் பொதுமக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு அவசியமாக உரிய பாதுகாப்பு உபகரணங்களுக்கான பற்றாக்குறையொன்று ஏற்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. தற்போதைய நெருக்கடிமிக்க சூழ்நிலையில் இத்தகைய பற்றாக்குறை ஏற்படுவது திருப்திகரமான விடயமொன்றல்ல.

நோய்நிலைமையின் தீவிரத்தை அதிகப்படுத்தும் வாய்ப்பு (சுவாசக்கோளாறு) காணப்படுவதனால் புகைப்பிடித்தலைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தோடு நாட்டிலுள்ள அனைத்து மதுபானச்சாலைகளையும் மூடுவதும் தற்போதைய தருணத்தில் மிகவும் அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், சுகாதார சேவையாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதற்குமான அவசிய உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியை நாடுவது சிறந்ததாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50