தேர்தலை ஒத்தி வைத்தமை வரவேற்கத்தக்கது :  சஜித் பிரேமதாச

Published By: R. Kalaichelvan

19 Mar, 2020 | 07:47 PM
image

(செ.தேன்மொழி)

கொரோனாவைரஸ் பரவிலின் காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் அச்சத்தில் இருக்கின்ற நிலையில் , பொதுத் தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதை வரவேற்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச , தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் மக்களுக்கு அரசாங்கம் நிவாரணப் பொதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

தேர்தலை பிற்போட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நன்றித் தெரிவிப்பதற்காக இன்று சஜித் பிரேமதாச ஆணைக்குழுவிற்கு வருகைத்தந்திருந்தார். இதன்போது ஏடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனாவைரஸ் பரவிலின் காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் அச்சத்தில் இருக்கின்ற நிலையில் , பொதுத் தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதை வரவேற்பதுடன் , நாட்டு மக்களின் நலன் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தியதற்காக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த தீர்மானம் முன்னரே எடுக்கப்பட்டிருந்க வேண்டும். இருந்தபோதிலும் தேர்தல் ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. மக்களுக்கான பலத்தைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். கனடா  பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ அந்நாட்டு மக்களுக்கு நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு நிவாரணப் பொதியொன்றை பெற்றுக் கொடுத்துள்ளார். இதேப் போன்ற நிவாரணப் பொதிகள் எம் நாட்டு மக்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

தற்போது ரைவல் பரவல் காரணமாக தொற்று நீக்கம் மற்றும் ஆட்புலக்கங்களை குறைத்தல் , ஊரடங்குச் சட்டம் என்பன அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலைமைகளில் , இந்த இடைப்பட்டக் காலத்திற்குள் மக்களுக்கான நிவாரணப் பொதிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

உலகச் சந்தையில் எரிபொருள் விலை பாரிய இளவில் குறைந்துள்ள போதிலும் அரசாங்கம் மேலும் ஒரு வருடத்திற்கு எரிபொரள் விலையை குறைக்கபோவதில்லை என்று அறிவித்திருக்கின்றது. ஏன் இவ்வாறான அறிவிப்பை விடுத்துள்ளது என்பது தொடர்பில் எமக்கு ஒன்றும் புரியவில்லை.தேர்தல் ஈணைக்குழுவும் தேர்தலை பிற்போட்டுள்ள நிலையில் உடனனே பாராளுமன்றத்தை கூட்டி , நாட்டில் ஏபட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்துரையாடி மக்களுக்கான விசேட நிவாரணம் பொதியைப் n பற்றுக் கொடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும். இதற்கான நாங்கள் எமது முழு ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க தயாராகவுள்ளோம்.

இதேவேளை வைரஸ் பரவலை தடுப்பதற்காக அனைத்து தரப்பினர் மநாடு ஒன்றை நடத்த வேண்டும். கட்சி ,இன,மத, மொழி என்ற பேதமின்றி அனைவரும் இந்த மநாட்டில் கலந்துக் கொண்டு , தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து எமது நாட்டையும் , நாட்டு மக்களையும் பாதுகாத்துக் கொள்ளவது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும். வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்த ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் காலதாமதமாகவே தீர்மானங்களை எடுக்கின்றோம். இவ்வறான நிலையிலே அரசியல் மற்றும் தேர்தல் செயற்பாடுகளை புறந்தள்ளி நாட்டு மக்களின் நலன் தொடர்பிலே நாம் அக்கறைக் கொள்ள வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38