கொழும்பு, காலி முகத்திடலில் பகிரங்கமாக கஞ்சா போதைப்பொருளை புகைப்பிடித்துக் கொண்டிருந்த 20 இளைஞர்கள் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை இன்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, ஒவ்வொருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

குறித்த நபர்களில் 16 வயதுடைய சிறுவன் ஒருவனும் இருந்துள்ளதோடு குறித்த சிறுவனுக்கு 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.