ஊழல் மோசடிக்காரர்களுக்கு எமது அணியில் இடமில்லை - மத்தும பண்டார விசேட செவ்வி

Published By: Digital Desk 3

19 Mar, 2020 | 01:26 PM
image

ஊழல் மோச­டிக்­கா­ரர்­களை எமது கூட்­ட­ணியில் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சிக்­காக எமது வாயில்கள் திறந்தே இருக்கும் என்று ஐக்­கிய மக்கள் சக்­தியின் பொதுச்­செ­ய­லா­ள­ரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்­தும பண்­டார வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வி­யின்­போது குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு:

கேள்வி:- தாய்க் கட்­சி­யான ஐ.தே.கவை உங்­க­ளு­டைய கூட்டில் இணைப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­னவா?

பதில்:- வெவ்­வேறு நபர்கள் பல்­வேறு யோச­னை­களை முன்­வைத்த வண்­ண­முள்­ளனர். ஐ.தே.கவை எமது அணிக்குள் உள்­வாங்க வேண்டும் என்ற அடிப்­ப­டை­யிலும் சில முயற்­சி­களை சிலர் மேற்­கொண்டு வரு­கின்­றார்கள்.

 எது எவ்­வா­றா­யினும் சஜித் பிரே­ம­தாஸ தலை­மை­யி­லான எமது ஐக்­கிய மக்கள் சக்­தி­யா­னது பொதுத்­தேர்­லுக்கு முகங்­கொ­டுப்­ப­தற்­கான சகல பூர்­வாங்க ஏற்­பா­டு­க­ளையும் பூர்த்தி செய்­துள்­ளது.

பங்­காளிக் கட்­சி­க­ளு­ட­னான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம், மக்கள் சந்­திப்பு போன்ற பல்­வேறு நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டா­கி­விட்­டது. அவ்வா­றான நிலையில் பரந்துபட்ட கூட்ட­ணி­யுடன் ஐக்­கிய தேசியக் கட்சி இணைந்து பணி­யாற்ற அழைப்பு விடுத்­துள்ளோம்.

கேள்வி:- நீங்கள் பகி­ரங்க அழைப்­பினை விடுத்­தி­ருந்­தாலும் நிபந்­த­னைகள் இடு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- அவ்­வா­றில்லை. நாம் புதிய அர­சியல் கலா­சா­ரத்­துடன் கொள்­கை­ரீ­தி­யாக ஒருங்­கி­ணை­வு­ட­னேயே பய­ணத்­தினை ஆரம்­பித்­துள்ளோம். ஆகவே ஊழல் மோசடி குற்­றச்­சாட்­டுகள், சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களை உள்­ளீர்க்க முடி­யாது என்ற நிலைப்­பாட்டில் இறுக்­க­மாக இருக்­கின்றோம்.

கேள்வி:- சஜித் பிரே­ம­தாஸ தலைமையில் பொதுத்­தேர்­தலை முன்­னெ­டுப்­ப­தற்­கான பேச்­சுக்கள் முன்­னெடுக்­கப்­பட்­ட­போது சின்னம் தொடர்பில் கவனம் செலுத்­த­வில்­லையா? இறுதித் தருணம் வரையில் அவ்­வி­டயம் நீடித்து தற்­போது முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தல்­லவா?

பதில்:- நாங்­களும் ஐக்­கிய தேசியக் கட்சியில் நீண்­ட­கால உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கின்றோம். யாப்பு சம்­பந்­த­மான விட­யங்­களை நாங்­களும் அறிந்­துள்ளோம். அந்த யாப்பில் சின்னம் சம்­பந்­த­மான சட்ட ஏற்­பா­டுகள் எவையும் முன்னர் காணப்­ப­ட­வில்லை. அவ்­வா­றான நிலையில் திடீ­ரென்றே அது­ கு­றித்த சட்ட ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

கூட்­டணி குறித்து பேச்­சுக்கள் அனைத்தும் நிறை­வ­டைந்த பின்னர் தான் சின்னம் சம்­பந்­த­மான விட­யத்­தினை வெளிப்­ப­டுத்­தி­னார்கள். ஆகவே பொதுச்­சின்னம் தொடர்பில் நாம் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டி­ருந்தோம். எனினும் அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

கேள்வி:- பழ­மை­வாய்ந்த அர­சியல் கட்­சி­களில் ஒன்­றாக இருக்கும் ஐ.தே.கவி­லி­ருந்து தாங்கள் உள்­ளிட்ட அணி­யொன்று வெளி­யே­றி­யி­ருப்­ப­தா­னது அக்­கட்­சிக்கு பின்­ன­டை­வு­க­ளையே ஏற்­ப­டுத்தும் என்­பதை உண­ர­வில்­லையா?

பதில்:- ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தொடர்ச்­சி­யாக பின்­ன­டை­வு­களே ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. 2005ஆம் ஆண்­டி­லி­ருந்து 2015வரை­யி­லான காலப்­ப­கு­தியில் ஒரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரைக் கூட கட்­சி­யி­லி­ருந்து தெரிவு செய்ய முடி­யாத நிலை­மையே நீடித்து வந்­தி­ருந்­தது. இந்த நிலைமை 2019 இல் தான் மாற்­ற­ம­டைந்­தி­ருக்­கின்­றது.

இருப்­பினும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மைப்­ப­த­வி­யினை விட்­டுக்­கொ­டுப்­ப­தற்கு அவர் (ரணில் விக்­கி­ர­ம­சிங்க) தயா­ராக இல்லை.

2025 இல் நடை­பெறும் தேர்­தலில் கூட அவரால் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்க முடி­யாத நிலைமை தான் காணப்­ப­டு­கின்­றது. அதனை அவர் புரிந்­து­கொண்­டி­ருக்­கின்­ற­போதும் தலைமைப் பத­வியை பற்றிப் பிடித்­தி­ருக்­கின்­றமை ஏன் என்ற கேள்வி தான் எமக்கு உள்­ளது.

ஒழுக்­க­மிக்க அர­சியல் தலை­வ­ராக இருந்தால் பத­வியை அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு விட்­டுக்­கொ­டுத்து கட்­சியை பாது­காக்க வேண்டும். ஆனால் கட்­சியை குத்­த­கைக்கு கொடுத்து தலைமைப் பொறுப்பில் நீடிக்கும் நிலை­மையே இங்­குள்­ளது. எமது அணியில் 95சத­வீ­த­மான ஐ.தே.கவின் உறுப்­பி­னர்கள் உள்­ளனர்.

கேள்வி:- யானை சின்­னத்­துக்கு பதி­லாக ஐக்­கிய மக்கள் சக்தி புதிய சின்­னத்தில் பய­ணிப்­ப­தா­னது வாக்­கு­வங்­கியில் சரி­வினை ஏற்­ப­டுத்­தாது என்­கின்­றீர்­களா?

பதில்:- கடந்த தேர்­தல்­களை ஆழ­மாக உற்று நோக்­கு­கின்­ற­போது பொது­மக்கள் சின்­னத்­துக்கு அளிக்கும் முக்­கி­யத்­து­வத்­திலும் பார்க்க, நபர்­க­ளுக்கும் கொள்­கை­க­ளுக்­குமே அதி­க­ளவு முக்­கி­யத்­துவம் அளிக்­கின்­றார்கள் என்­பது பிர­தி­ப­லிக்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி:- ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐ.தே.க அணியில் உள்ள சிலர் சுய­ந­லத்­துக்­கா­கவும் ராஜபக் ஷவி­ன­ருக்கு உத­வி­ய­ளிப்­ப­தா­கவும் உங்­க­ளது அணி­யினர் குற்றம் சாட்­டி­னாலும் அத்­த­ரப்­பினர் அதே குற்­றச்­சாட்­டு­களை பரஸ்­பரம் உங்கள் தரப்பின் மீது சுமத்­து­கின்­றார்­களே?

பதில்:- நாங்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்­கா­ரர்கள். நாம் ராஜபக் ஷவி­ன­ருடன் இணை­ய­வில்லை. கட்­சிக்குள் இருந்து போரா­டினோம். தற்­போதும் கட்­சியின் எதிர்­கா­லத்­துக்­கா­கவும் அதனை பாது­காப்­பாக மீட்­ப­தற்­கா­க­வுமே போரா­டிக்­கொண்­டிக்­கின்றோம். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­யுடன் ஏற்­பட்ட பிரச்­சி­னையால் தற்­போது வரையில் 65 உறுப்­பி­னர்கள் வெளி­யே­றி­யுள்­ளார்கள். தற்­போ­தைய நிலைமை நீடித்தால் மேலும் பலர் அதி­ருப்தி அடையும் நிலை­மையே வெகு­வாக அதி­க­ரிக்கும். அதன் கார­ணத்­தி­னா­லேயே நாம் புதிய அணியை உரு­வாக்­க­வேண்­டிய நிலை­மைக்குள் தள்­ளப்­பட்டோம். மேலும் தற்­போ­துள்ள அணியில் உள்­ள­வர்­களை ஆராய்ந்தால் யார் யார் ராஜபக் ஷவி­ன­ருடன் ஒப்­பந்­தங்­களை செய்­தார்கள். பேச்­சுக்­களை நடத்­தி­னார்கள் ஆத­ர­வாக செயற்­பட்­டார்கள் என்­பதை நாம் கூறு­வதை விடவும் பொது­மக்கள் நன்­க­றிந்­துள்­ளனர்.

கேள்வி:- சஜித் பிரே­ம­தா­ஸவை சூழ்ந்­தி­ருப்­ப­வர்கள் தாம் அர­சியல் இலா­ப­ம­டை­வ­தற்­காக அவரை பயன்­ப­டுத்­து­வ­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- எமது தரப்பில் யாரும் சஜித் பிரே­ம­தா­ஸவை பயன்­ப­டுத்­த­வில்லை. பொது­மக்­களே அவ­ரு­டைய தலை­மைத்­து­வத்­தினை விரும்­பு­கின்­றார்கள். கிராம மட்­டங்­க­ளுக்கு சென்­ற­போது தொடர்ச்­சி­யான தோல்­வி­களைத் தழுவும் தலை­மைத்­துவம் ஐ.தே.கவுக்கு வேண்டாம் என்றே கோரி­னார்கள். தான் சார்ந்து சிந்­திக்­காது கொள்கை அடிப்­ப­டையில் நாட்­டி­னதும் எதிர்­கால சந்­த­தி­யினர் சார்ந்தும் அனைத்து இனங்­க­ளையும் உள்­வாங்கி சிந்­திக்­கின்­ற தலை­மைத்­து­வத்தின் கீழேயே நாம் ஒருங்­கி­ணைந்­துள்ளோம்.

கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­தலில் வடக்கு கிழக்கு மற்றும் மலை­யக பகு­தி­களில் பெரு­வா­ரிய மக்கள் சஜித்­ பி­ரே­ம­தா­ஸ­வினை ஆத­ரித்­தி­ருக்­கின்­றார்கள். எனினும் அவர் அம்­மக்கள் குறித்து பகி­ரங்க நிலைப்­பா­டு­களை வெளிப்­ப­டுத்த தயங்கி வரு­கின்­ற­மைக்­கான காரணம் என்ன? தென்­னி­லங்கை வாக்கு வங்­கியில் சரிவு ஏற்­படும் என்­பதால் அவ்­வாறு தயக்கம் காட்­டு­கின்­றாரா?

பதில்:- ஐக்­கிய மக்கள் சக்­தியை எடுத்துக் கொண்டால் சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் வடக்கு கிழக்கு மற்றும் மலை­யக மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பல கட்­சிகள் கைகோர்த்­துள்­ளன. அத்­துடன் பல பொது அமைப்­பு­களும் தமது ஆத­ர­வு­களை வெளி­யிட்­டுள்­ளன. சிறு­பான்மை தேசிய இனங்­களை பிர­தி­நி­தி­தித்­துவம் செய்யும் தரப்­புக்கள் அவ்­வாறு ஒன்­றி­ணைந்­துள்­ளதன் மூலம் சஜித் பிரே­ம­தா­ஸவின் மீது அதீத நம்­பிக்கை கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்பது வெளிப்படுகின்றது. ஆகவே அனைவரும் இலங்கையர்கள் என்ற அடை­யா­ளத்­துடன் இருக்க வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். அதற்­கான நிலை­மை­களை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தையே இலக்­காக கொண்­டி­ருக்­கின்றோம்.

கேள்வி:- ஐ.தே.கவும் அதன் தலைமையும் நம்பிக்கையளித்து ஏமாற்றிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளதே?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தக் குற்றச்சாட்டினை ஐக்கிய தேசியக் கட்சியின் மீது வைப்பதை விடவும் பொதுஜன பெரமுனவினர் மீதே சுமத்த வேண்டும். காரணம் அத்தரப்பினரே இந்த நாட்டில் இன, மதவாதங்களை மேலோங்கச் செய்து அனைத்து செயற்பாடுகளையும் குழப்பினார்கள். மக்களுக்கிடையிலான புரிதல்கள் ஏற்படுவதற்கு தடைகளை ஏற்படுத்தினார்கள். மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியானது படிப்படியாக தீர்வளித்தே வந்திருக்கின்றது. தற்போதும் கரிசனையுடனேயே நாமும் இருக்கின்றோம்.

- ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04