கொரோனா வைரஸ் ” மனிதத்துக்கு எதிரான எதிரி ”: உலக சுகாதார ஸ்தாபனம்

Published By: Digital Desk 3

19 Mar, 2020 | 03:50 PM
image

கொரோனா வைரஸ் “ மனிதத்துக்கு எதிரான எதிரி ”  என்றும் அதை எதிர்த்துப் போராட வேண்டும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வுஹான் நகரில் உருவான கொவிட்-19  எனப்படும் கொரோனா வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. அந்தார்ட்டிகா தவிர்த்து அனைத்து கண்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது

இதுதொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்  கெப்ரேயஸ் கூறும்போது, ''கொரோனா வைரஸ் தொற்றால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித குலத்துக்கு எதிராக, முன்னெப்போதும் இல்லாத பொதுவான எதிரி- மனிதத்துக்கு எதிரான எதிரி உருவாகி உள்ளது.

இதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். உங்கள் சமூகத்தினர் பாதிக்கவில்லை என்று எண்ணாதீர்கள். எப்போதும் விழிப்புணர்வுடன், தயாராக இருங்கள்.

உலக சுகாதார மையம் அனைத்து மாகாணத் தலைவர்கள், சுகாதார அமைச்சர்கள், மருத்துவமனைகளுடன் பேசிவருகிறது. சந்தேகப்படும் ஒவ்வொரு நபரையும் பரிசோதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

தனிமைப்படுத்தல், பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல், கண்டுபிடித்தல் ஆகியவற்றின் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

சமூகத்தில் இடைவெளியைப் பராமரியுங்கள். இவற்றைச் செய்யாத பட்சத்தில் கொரோனா சங்கிலி தொடர்ந்துகொண்டே இருக்கும். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட இரண்டு மாதத்துக்குள் தடுப்பூசி முயற்சி தொடங்கப்பட்டது உண்மையிலேயே வியக்கத்தக்க சாதனை '' என்று டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02