இலங்கை- அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் “எச்.எம்.ஏ.எஸ் பேர்த்” அவுஸ்திரேலிய போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி பயிற்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் நாடுதிரும்பவுள்ளது

மத்திய கிழக்கு கடற்பகுதியில் ரோந்து பணிகளை முடித்துக்கொண்டு “எச்.எம்.ஏ.எஸ் பேர்த்” அவுஸ்திரேலிய போர்க்கப்பல் கடற்படையின் போர் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நல்லெண்ண அடிப்படியில் விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள இந்த போர்கப்பல் இலங்கையின் கடற்படை கலாசாரத்தின் அடிப்படியில் வரவேற்கப்பட்டது. அதேபோல் நேற்று இலங்கைக்கு வந்த இந்த போர் மீட்புக்கப்பலின் கட்டளைத்தளபதி இலங்கை கடற்படை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் இலங்கையில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் இந்த காலகட்டத்தில் இலங்கையின் கடற்படையுடன் அவுஸ்திரேலியா கடற்படையினர் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 இதே வேலை கடந்த மாதம் “பங்காபந்து” எனும் பங்களாதேஷ் போர்க்கப்பலும், “எப்.என்.எஸ் “எகோநிட்” எனும் பிரான்ஸ் போர்க்கப்பலும்,  “ப்ளூ ரிட்ச்” எனும் அமெரிக்க போர்க்கப்பலும், “எப்ரோன்” எனும் ரஸ்சிய போர்க்கப்பலும், “எச்.டி.எம்.எஸ் பட்டனி” எனும் தாய்லாந்து கடற்படை கப்பல், “எச்.எம்.எஸ் டிபென்டர்” எனும் பிரித்தானிய கடற்படையின் போர்க்கப்பல், “விக்கிரமாதித்தியா” எனும் இந்திய போர்க்கப்பல் என ஐந்து சர்வதேச போர்க்கப்பல்கள் இந்த ஆண்டின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.