நகரசபை தலைவருக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல்

Published By: Digital Desk 4

19 Mar, 2020 | 11:35 AM
image

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு படி அமைக்கும் பணி வவுனியா நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதன் முன்னோட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக நகரசபை தவிசாளர் இ.கௌதமன், உபதவிசாளர் சு.குமாரசாமி, நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் இன்று காலை 10.45 மணியளவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையடிக்கு விஐயம் செய்திருந்தனர்.

இதன்போது தேர்தல் பணிகளிற்காக மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் நகரசபை தவிசாளரிடம் இவ்விடத்திற்கு ஏன் வருகின்றீர்கள், வாகனம் இவ்விடத்தில் நிறுத்த வேண்டாமென தெரிவித்ததுடன் முரண்பட்டுள்ளார்.

இதனால் தவிசாளர் மற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இடையில் சற்று நேரம் கடுமையான முரண்பாடு ஏற்பட்டது. 

தான் நகரசபை தவிசாளர் என குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு தெரிவித்தும் முறையற்ற விதத்தில் அவர் நடந்தகொண்டதாக தவிசாளர் இதன்போது தெரிவித்தார். 

இதனால் குறித்த பகுதியில் சற்றுநேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01