தேர்தலை ஒத்தி வைக்குமாறு ஆணையாளரிடம்  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை 

Published By: Digital Desk 4

19 Mar, 2020 | 11:07 AM
image

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலை காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைத்து நிலைமைகள் சீரான பின்னர் நடாத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்கோரிக்கை முன்வைத்தது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் அனைத்துத் தேர்தல்களிலும் கடமையுணர்வுடன் தொழிற்படுகின்றமை தாங்கள் அறிந்தவொன்று. பெருமளவான கடமைகளை நிறைவேற்றுகின்ற பணியில் ஆசிரியர்களும், அதிபர்களும் முழுமையாக ஈடுபடுவது வழமை.

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் அவ்வாறே தொழிற்படவுள்ள நிலையில் தற்போதுள்ள அபாயகரமான சூழல் ஆசிரியர்களையும், அதிபர்களையும் அவர்களோடு இணைந்த சமூகத்தையும் பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

சமூகத்திற்கும், எதிர்காலச் சிறாருக்கும் வழிகாட்டிகளாக உள்ள இவர்கள் பாதிக்கப்படாத வகையிலும், மக்களின் நலன் சார்ந்தும், அரசியல் அந்தஸ்துகளுக்கும், போட்டிகளுக்கும் அப்பால் உலகளாவிய ரீதியல் அபாயகரமாக உருவெடுத்துள்ள உயிர்ககொல்லி “கொரோனா“ வைரஸின் தாக்கத்தில் இருந்து மனிதச் சமூகம் விடுபடும் வரை தேர்தல்களைப் பிற்போடுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

உலகளாவிய ரீதியில் பல்வேறு செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டும், கைவிடப்பட்டும் உள்ள நிலையில் நாம் எதிர்மறையாகத் தொழிற்படாது. முழுமையாக மக்கள் ஜனநாயகரீதியல் பங்கேற்கின்ற பாராளுமன்றத் தேர்தலை பிற்போடுமாறு கேட்டுக்கொள்வதோடு, முடியாதெனில் அதிபர்கள், ஆசிரியர்களை கடமைகளில் இருந்து தவிர்த்து தேர்தலை நடாத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08