சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலானது கொரோனா தொற்று தொடர்பில் சீனாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த பல வாரங்களில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் பேர் வரை புதிய கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டு வந்திருந்தினர்.
இதனால் சீன அரசாங்கம் பல மாதங்களாக நாட்டின் பல பகுதிகளை தனிமைப்படுத்தியும், பயணக் கட்டுப்பாடுகள் என்பவற்றையும் விதித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரிதும் போரடி வந்தது.
இந் நிலையில் அண்மைய நாட்களில் சீனாவில் புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது தொடர்ச்சியாக குறைவடைந்து வந்த நிலையிலேயே நேற்றைய தினம் அங்கு ஒருவர் கூட புதிய கொரோனா தொற்று நோயாளராக அடையாளம் காணப்படவில்லை.
இருப்பினும் வெளிநாடுகளிலிருந்து வந்தோரில் 34 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்றைய தினம் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் சீனாவில் நேற்றைய தினம் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக சீனாவில் தற்போது 3,245 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 80,928 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை கடந்த வாரங்களில் கொரோனா வைரஸின் தாக்கமானது ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
குறிப்பாக நேற்று புதன்கிழமை மாத்திரம் இத்தாலியில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் ஒரே நாளில் இவ்வளவு பெருந்தொகையானவர்கள் உயிரிழந்தது இதுவே முதல் தடவை.
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பின்படி இதுவரை உலகளாவிய ரீதியில் மொத்தம் 215,000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 8,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM