கொரோனாவிற்கெதிராக அமெரிக்காவில் பரிசோதிக்கப்பட்ட தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

Published By: J.G.Stephan

18 Mar, 2020 | 04:11 PM
image

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் தற்போது அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மனிதர்கள் மீது கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை பரிசோதித்துப் பார்க்கும் பணிகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக நேற்று பெண்மணியொருவருக்கு குறித்த தடுப்பூசி ஏற்றப்பட்டு பரிசோதனை மேற்ககொள்ளப்பட்டது. 

இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை உருவாக்காது. ஆனால் கொரோனா வைரஸின் மரபணு குறியீட்டைப் பிரதி எடுத்து இந்த புதிய தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது.

இத்தடுப்பு மருந்தும், இதேபோல உலகின் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டு வரும் ஏனைய தடுப்பு மருந்துகளும், கொரோனா வைரஸை குணப்படுத்துமா என்பதை அறிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சியாட்டில் நகரைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 43 வயது பெண்மணியிடம், இந்த புதிய கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

``கொரோனை வைரஸை தடுக்க என்னால் முடிந்த ஒரு உதவியைச் செய்துள்ளேன்`` என அந்த பெண்மணி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08