கொரோ­னாவிலிருந்து மீள்­வ­தற்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­ வேண்டும்

Published By: Daya

18 Mar, 2020 | 03:14 PM
image

நாட்டில்  கொரோனா வைரஸ் தொற்­றுக்குள்­ளா­ன­வர்­களின் எண்­ணிக்கை தொடர்ச்­சி­யாக  அதி­க­ரித்து வரு­கின்­றது.  வைரஸ் தொற்­றினை  தடுப்­ப­தற்­கான   நட­வ­டிக்­கை­களை  அர­சாங்கம்  முடுக்­கி­விட்­டுள்­ள ­போ­திலும்  தொற்­றா­ளர்­களின் எண்­ணிக்கை தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்து வரு­வது  தடுப்பு  நட­வ­டிக்­கை­களை இன்னும் தீவி­ர­மாக்­க­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது.  

நேற்று இரவுவரை 43 பேர் கொரோனா வைரஸ் தாக்­கத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 204 பேர் வரையில்  தொடர்ச்­சி­யான மருத்­துவக் கண்­கா­ணிப்பில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். 2500க்கும் மேற்­பட்ட வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்கள் தற்­கா­லிக முகாம்­களில் மருத்­துவ  கண்­கா­ணிப்பில்  வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

கொரோனா வைரஸ் பர­வ­லா­னது இலங்­கையில் அதி­க­ரிப்­பதை  கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு  பல்­வேறு தரப்­பி­னரும் யோச­னை­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.   இந்த விவ­காரம் தொடர்பில் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம்  யோச­னை­களை  முன்­வைத்­தி­ருக்­கின்­றது.   நாட்­டி­லுள்ள அனைத்து துறை­மு­கங்கள் மற்றும் விமான நிலை­யங்­களின் செயற்­பா­டு­களை  இடை­நி­றுத்தல், இவ்­வாரம்  முழு­வதும்  பொது­வி­டு­மு­றை­யாக  பிர­க­ட­னப்­ப­டுத்தல், அரச மற்றும் தனியார்  துறை  சுகாதார  சேவை ஊழி­யர்­க­ளுக்கு  முறை­யான தொற்­று­ த­டுப்பு காப்பு வச­தி­களைப்   பெற்­றுக்­கொ­டுத்தல்,  அநா­வ­சி­ய­மாக மக்கள் ஒன்­று­கூ­டு­வதை தடுத்தல்,  அனைத்துப் பிர­தே­சங்­க­ளுக்­கு­மான   கண்­கா­ணிப்பு செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒழுங்­க­மைக்­கப்­பட்ட  வலு­வான கட்­ட­மைப்பு முறைமையை உரு­வாக்­குதல்,   அரச வைத்­தி­ய­சா­லை­க­ளி­லுள்ள  அனைத்து  அவ­ச­ர­மற்ற  சுகா­தார சேவை வழங்­கல்­க­ளையும் பிற்­போடுதல் போன்ற யோச­னை­களை   அரச  வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் அர­சாங்­கத்­திற்கு முன்­வைத்­துள்­ளது.

இலங்­கைக்குள்  வைரஸ் தொற்று ஏற்­ப­டு­வ­தற்கு  வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்­களே கார­ண­மாக  அமைந்­துள்­ளனர்.  முத­லா­வது  கொரோனா தொற்று நோயாளி சீனா­வி­லி­ருந்து இலங்­கைக்கு சுற்­றுலா வந்த  பெண்­ம­ணி­யாவார்.  அதனைத் தொடர்ந்து இத்­தா­லி­யி­லி­ருந்து  வந்­த­வர்­க­ளி­னா­லேயே   கொரோனா தொற்று   முதன்­மு­த­லாக   இலங்­கைக்கு பர­வி­யமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இத்­தா­லிய சுற்­றுலா  பய­ணி­க­ளுக்கு வழி­காட்­டி­யாக   செயற்­பட்ட நபரே   முதன்­மு­த­லாக அடை­யாளம் காணப்­பட்­டி­ருந்தார். அதனைத் தொடர்ந்து  கொரோனா தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­களின் எண்­ணிக்கை தொடர்ச்­சி­யாக   அதி­க­ரித்து வரு­கின்­றது.  

உல­க­ளா­வி­ய­ ரீ­தியில் கொரோனா வைரஸ் தொற்று   பர­வி­ய­தை­ய­டுத்து அதற்­கான தடுப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்­பிலும்    விழிப்­பு­ணர்வு செயற்­பாடு குறித்தும் அர­சாங்­க­மா­னது ஆரம்­பத்­தி­லேயே அறி­வித்­தி­ருந்­தது.   சீனாவின் வுஹான் மாகா­ணத்தில் இந்த  தொற்று அதி­க­ரித்­த­தை­ய­டுத்து விழிப்­பு­ணர்வு  நட­வ­டிக்­கைகள்  முன்­னெ­டுக்­கப்­பட்­டன.   சீனா சுற்­றுலா பய­ணிக்கு கொரோனா தொற்று இருப்­பது  கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து   சுகா­தார பாது­காப்பு நட­வ­டிக்­கை­களும்  தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

ஆனால் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்கள் தொடர்பில்  உரிய வகை­யி­லான  கட்­டுப்­பாடுகள் விதிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.   விமான நிலை­யத்தில்  கொரோனா தொற்று சோதனை  சாதா­ர­ண­மாக செய்­யப்­பட்­ட­போ­திலும் அதில் தீவிர கவனம்  செலுத்­தப்­ப­ட­வில்லை.  கடந்த இரு­வார காலங்­க­ளா­கவே  கொரோனா தொற்­றுக்­குள்­ளான நாடு­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்கள்  தற்­கா­லிக முகாம்­க­ளுக்கு அழைத்துச் செல்­லப்­பட்டு கொரோனா தொற்று பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றனர். அதற்கு முன்னர்   வருகை தந்­த­வர்கள் தொடர்பில் இத்­த­கைய பரி­சோ­த­னைகள்  மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

தற்­போது  இத்­தா­லி­யி­லி­ருந்து  வந்­த­வர்­களே  பெரும்­பாலும்  கொரோனா தொற்­றுக்குள்­ளா­கி­யுள்­ளனர். அதே­போன்று ஜேர்­ம­னியிலிருந்து   வந்த  இரு­வ­ருக்கும் இந்த தொற்று ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இவ்­வாறு   வந்­த­வர்­க­ளினால் உள்­ளூ­ரிலும்  இந்த தொற்று   பர­வி­யி­ருக்­கி­றது. எனவே   வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்­த­வர்­களை கண்­கா­ணித்து அவர்­களை தனி­மைப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்று வரு­கின்­றன.

இது குறித்து  பொலிஸார் நேற்­று ­முன்தினம் இரவு  அறி­விப்­பொன்­றினை வெளி­யிட்­டி­ருந்­தனர். மார்ச் மாதம் முதலாம் திகதி  முதல் 15ஆம் திக­திக்குள்   சீனா, இத்­தாலி, தென்­கொரியா மற்றும் ஐரோப்­பிய நாடு­க­ளி­லி­ருந்­து வந்­த­வர்கள்   தம்மை  பொலிஸில் பதிவு செய்­து­கொள்­ள­ வேண்டும் என்று  அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.   இத­னை­விட   இத்­தா­லி­யிலி­ருந்து வந்­த­வர்கள் தொடர்பில்   தொடர்ந்தும்  கண்­காணிப்­பினை மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.  

இந்த வகையில்  இத்­தாலி உள்­ளிட்ட சில நாடு­க­ளி­லி­ருந்து வந்து புத்­தளம் மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­களில்  வசித்து வரு­ப­வர்கள் அடங்­கிய 60 குடும்­பத்­தினர்  சுகா­தார அதி­கா­ரி­க­ளினால் வீட்­டுக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.   குறித்த குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்கள்  அவர்­க­ளது வீடு­க­ளி­லி­ருந்து  வெளி­யேற முடி­யா­த­வ­கையில் நீதி­மன்ற ஆணையும் பெறப்­பட்­டி­ருக்­கின்­றது.    

இத்­தாலி போன்ற நாடு­க­ளி­லி­ருந்து வந்­த­வர்கள்   இவ்­வாறு தம்மை தனி­மைப்­ப­டுத்­தாது  செயற்­பட்­ட­மை­யி­னா­லேயே   இத்­த­கைய தொற்­றுக்கள் ஏற்­பட்­டுள்­ளமை  கண்­ட­றி­யப்­பட்­ட­தை­ய­டுத்தே இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. இத­னை­விட   ஒருவர்   தனக்கு   கொரோனா தொற்று இருப்­பதை  மறைத்து செயற்­ப­டு­வா­ரே­யானால்  அதுவும் தண்­ட­னைக்­கு­ரிய  குற்­றமென்று பொலி­ஸாரால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­போன்றே  கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளான நிலையில்  அடை­யாளம் காணப்­பட்ட 11ஆவது நோயா­ள­ருக்கும் அவ­ரது மனை­விக்கும் எதி­ராக  குறித்த நோய் நிலை­மையை மறைத்­தமை மற்றும் அதற்கு உதவி ஒத்­தாசை  புரிந்­தமை என்ற குற்­றச்­சாட்­டின்­பேரில் கல்­கிசை நீதி­மன்றில்  வழக்கும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அண்­மைக்­கா­ல­மாக  வெளி­நாடு சென்று வந்­த­வர்கள் தொடர்பில்  அவ­தானம் செலுத்தி  அவர்கள் தொற்­றுக்­குள்­ளா­கி­யி­ருந்தால் அவர்­களை தனி­மைப்­ப­டுத்த அர­சாங்கம்  எடுத்­து­வரும் நட­வ­டிக்கை   பாராட்டத்தக்­க­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. இந்­த­ ந­ட­வ­டிக்­கைக்கு சகல தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்பு வழங்­க­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  

உண்­மை­யி­லேயே  எமது நாட்டில் கொரோனா தொற்­றினை தடுக்­க­வேண்­டு­மானால்   இத்­த­கைய நட­வ­டிக்­கைகள்  முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.   சீனாவில்  கொரோனா தொற்று ஏற்­பட்­ட­தை­ய­டுத்து ஆரம்­பத்தில் கவ­ன­யீ­ன­மாக  அந்­நாடு செயற்­பட்­டி­ருந்­தாலும் பின்னர்  கடும் நட­வ­டிக்­கைகள்  எடுத்­த­மை­யினால்  அந்த தொற்று  தற்­போது கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

இத்­தா­லியில் கொரோனா தொற்று தொடர்பில் விழிப்­பு­ணர்­வுகள்  ஊட்­டப்­பட்­ட­போ­திலும் அங்கு மக்கள்  அந்த நடை­மு­றை­களை   கடைப்­பிடிக்­கா­மை­யி­னால்தான் அங்கு  பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் தொற்­றுக்கு  இலக்­காகி  பலி­யாகும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

 இந்த  செயற்­பா­டு­களை  நாம்  உதா­ர­ண­மாக கொண்டு   எமது நாட்டில்  வைரஸ் தொற்­றினை இல்­லா­தொ­ழிக்க அனை­வரும் ஒத்­து­ழைக்­க­வேண்­டி­யது  அவ­சி­ய­மா­க­வுள்­ளது.  

நாட்டில் கொரோனா தொற்­றினை  தடுப்­ப­தற்கு அர­சாங்கம் எடுத்­து­வரும்   நட­வ­டிக்­கைகள்   திருப்­தி­க­ர­மாக இல்லை என்று   எதி­ரணி  குற்­றஞ்­சாட்­டி­யி­ருக்­கின்­றது.  தற்­போது ஏற்­பட்­டுள்ள அச்­சு­றுத்தல் நிலை­மையை  கட்­டுப்­பாட்டின் கீழ் ­கொண்­டு­வ­ரு­வ­தற்கு நக­ரங்­களை மூடவோ, ஊர­டங்கு சட்­டத்தை   பிறப்­பிக்­கவோ   வாய்ப்பு இருப்­ப­தாக  ஐக்­கிய தேசி­யக்­கட்சி  தெரி­வித்­துள்­ளது.   தற்­போது  ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை­மையை கருத்திற்கொண்டு அர­சாங்கம் பொதுத் தேர்தல் தொடர்பில் அனைத்து கட்சித் தலை­வர்­க­ளி­டமும்   கலந்­து­ரை­யா­ட­வேண்டும் என்று   ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் செய­லாளர் அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

 இதே­போன்றே தற்­போ­தைய  நிலையைக் கருத்திற்கொண்டு  மக்­களின் நலனை முன்­னி­லைப்­ப­டுத்தி தேர்­தலை ஒத்­தி­வைக்­க­வேண்­டி­யது  அவ­சியம் என்று   தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  மற்றும்  தமிழ்  முற்­போக்கு முன்­னணி ஆகிய  கட்­சி­களும் கோரிக்கை விடுத்துள்ளன.   இந்த விடயம் தொடர்பிலும்  தேர்தல்கள் ஆணைக்குழு   ஆராய்ந்திருக்கின்றது. இன்னமும்  ஒருவாரகாலம் அவதானித்து   அதற்கான நடவடிக்கைகளை  மேற்கொள்வது தொடர்பிலும்   திட்டமிடப்பட்டிருக்கின்றது.

தற்போதைய நிலையில்  தேர்தலைவிட  மக்களின்   பாதுகாப்பு  முக்கியமானதாகும். கொரோனா தொற்றினை முற்றாக தடுத்து  மக்களின்    உயிர்களை  பாதுகாப்பதற்கு  முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் கொரோனா தொற்றிலிருந்து   மக்களைப் பாதுகாப்பதற்கான நடைமுறைகளை அரசாங்கம் பின்பற்றி வருகின்றது. அந்த நடவடிக்கைகளில்   குறைகளை காணாது அதற்கு  அரசியல் கட்சிகளின் தலைமைகள்  பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும். தற்போது மூன்று தினங்களுக்கு  பொதுவிடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மக்களை ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையிலேயே இந்த  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டு மக்கள்   சுகாதார  அமைச்சின் அறிவுறுத்தல்களை கவனத்திற்கொண்டு  செயற்படவேண்டும்.  அவ்வாறு செயற்பட்டால்தான் இந்த   கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபடமுடியும்   என்பதை  சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

(18.03.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04