14 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டம் தெல்லிப்பழை மகாஜனா, கிண்ணியா மத்திய கல்லூரி சம்பியனாகின

Published By: R. Kalaichelvan

17 Mar, 2020 | 09:01 PM
image

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் நடத்திய 11ஆவது அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சமபோஷ கிண்ண (14 வயதின் கீழ்) கால்பந்தாட்டப் போட்டிகளில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியும் கிண்ணியா மத்திய கல்லூரியும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்தன.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பொலன்னறுவை பெந்திவௌ மகா வித்தியாலய அணியை 4 - 3 என்ற பெனல்டி அடிப்படையில் மகாஜனா அணி வெற்றிகொண்டு சம்பினானது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி 1 - 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததை அடுத்து சம்பியன் அணி பெனல்டி முறையில் தீர்மானிக்கப்பட்டது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் மகாஜனா கல்லூரி இதே வயதுப் பிரிவில் முதல் தடவையாக சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் ரிதிகம, கவிசிகமுவ மத்திய கல்லூரியை 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் மகாஜனா இலகுவாக வெற்றிகொண்டிருந்தது.

இதேவேளை, ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியை 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டு கிண்ணியா மத்திய கல்லூரி சம்பியனானது. இதற்கு முன்னோடியாக நடைபெற்ற அரை இறுதியில் கண்டி சில்வெஸ்டர் கல்லூரியை 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் கிண்ணியா மத்திய கல்லூரி வெற்றிகொண்டிருந்தது.

பெண்கள் பிரிவில் மகாஜனா கல்லூரியின் ஜே. லயன்சிகா சிறந்த வீராங்கனையாகவும் வை. ரேன்சனா சிறந்த கோல்காப்பாளராவும் தெரிவாகினர்.

ஆண்கள் பிரிவில் கிண்ணியா மத்திய கல்லூரியின் கே. எம். கிப்னி சிறந்த விரராகவும் நௌஷாத் மஹ்றூப் சிறந்த கோல்காப்பாளராகவும் தெரிவாகினர்.

அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட இருபாலாருக்குமான சமபோஷ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றியதுடன் 32 பிரதேசங்களில் நடத்தப்பட்ட ஆண்களுக்கான போட்டிகளில் சம்பியனான 32 பாடசாலைகளும் 28 பிரதேசங்களில் நடத்தப்பட்ட பெண்களுக்கான போட்டிகளில் சம்பியனான 28 பாடசாலைகளும் தேசிய மட்ட இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றிருந்தன. 

சம்பியன் அணிகள் விபரம்

மகாஜனா: ஐ. கீர்த்திகா (அணித் தலைவி), ஜே. லயன்சிகா, எஸ். ஹம்ஷியா, ரீ. சஸ்மி, எ. சர்மிகா, எ. தனுசியா, ரீ. தாரணிகா, யூ. சகீனா, எம். துஸ்மிகா, ஜே. ஜான்சி, எஸ். ரம்மியா, ஆர். தீபிகா, வை. ரேன்சனா, ஈ. ரக்ஷயா, ஜே. தேவரகா, ஆ. கோமிகா, வை. உமாசங்கவி, எம். தபீனா, எஸ். டொசாகா, எஸ். ரஜிதரணி. பயிற்றுநர்: எஸ். சாந்தகுமார், பொறுப்பாசிரியை: எஸ். லோஜினி.

கிண்ணியா மத்தி: கே.எம். கிபினி, எம். இம்தாத், எப். சலாஹி, என்.எம். சப்ராஸ், எம். முபீன், கெ.எம். சராப், என். மஹ்றூஸ், எம். மிஷால், எஸ்.எம். பசீத், எம். ரினாஸ், என். ரிவ்கி, ஏ. பாதிஹ், எம். நஜீஹ், எஸ். ஹனிப், எம். ஆசிக், டி.எம். உதய், எம்.எம்இ இன்பாஸ், எப்.எம். ரபுனான். பயிற்றுநர்: என்.ஜே.எம். ஆசிக், பொறுப்பாசிரியர்: எச்.எம். இப்ஹாம்.   (என்.வீ.ஏ.) ஆகியோர் இறுதிச் சுற்றில் பங்குப்பெற்ற தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20