கிளிநொச்சியில் கொரோனா நோயாளர்களுக்குத் தனி சிகிச்சைப் பிரிவு தயார் ; பொது வைத்திய அதிகாரி

Published By: Digital Desk 4

17 Mar, 2020 | 03:57 PM
image

கிளிநொச்சி மவாட்டத்தில்  கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் நோயாளர்கள் இனங்காணப்பட்டால் உடனடியாக அவர்களை தங்க வைத்து சிகிச்சை வழங்கக்கூடிய வகையில் இரண்டு கட்டில்கள் கொண்ட இடமொன்று மாவட்ட பொது வைத்தியசாலையில் தயார்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி இராகுலன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரம்பலை தடுக்கும் செயற்பாடுகள் பல்வேறு மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையினால் முன்னெடுக்கக்கூடிய செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும்பொருட்டு இன்று (17-03-2020) காலை கரைச் சிப்பிரதேச சபையில் இடம்பெற்ற விசேட அமர்வின்போது கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரி,

கிளிநொச்சி வைத்தியசாலையை பொறுத்தவரையில் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். மக்களின் முழுமையான ஒத்துழைப்புக்கள் மிகமிக அவசியமாகும்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையை பொறுத்தவரையில் இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி யாராவது இனங்காணப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி உடனடியாக வைத்திய சேவைகளை வழங்கக்கூடிய வகையில் வசதிகள் இல்லாவிட்டாலும் இரண்டு கட்டில்களை கொண்ட தனிமையான இடம்தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

அதில் தங்கவைத்து யாழ்ப்பாணம் அல்லது வவுனியா வைத்தியசாலைகளுக்கு அனுப்பமுடியும். மாறாக மாவட்டத்தில் ஏனைய வைத்தியசாலைகளில் ஒன்றை தெரிவு செய்து இவ்வாறானவர்களை தங்கவைக்கும் போது வசதிகள் இன்மை மேலதிக மருத்துவ தேவைகளுக்கு மாற்றப்படும் போது சிரமங்களை ஏற்படும்என்று குறிப்பிட்ட அவர், 

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருவோர் கைகளை கழுவிவிட்டு வரக்கூடியவாறும் வைத்தியசாலையில் இருந்து வெளியில் போகும் போதும் கைகளை கழுவிவிட்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அத்துடன் நோயாளர்களை பார்வையிட வருவோர் நோயாளர்களுடன் இருத்தல் என்பவற்றை இயன்றளவு குறைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதனைவிட, மாவட்ட பொதுவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுகள் இரண்டாக பிரிக்கப்பட்டு சுவாசம் தொடர்பான நோயாளர் தனியாகவும் ஏனைய நோயாளர்கள் தனியாகவும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டுகின்றன.

எது எவ்வாறு இருப்பினும் நோய் தொற்றுக்களை தடுப்பது என்பது பொதுமக்களின் ஒத்துழைப்புக்களிலேயே தங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41