இந்தியாவில் இருந்து 1,200 யாத்திரிகர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

Published By: Digital Desk 3

17 Mar, 2020 | 04:55 PM
image

இந்தியாவில் இருந்து 22 சுற்றுலாக் குழுக்களைச் சேர்ந்த 1,200 இலங்கை பௌத்த யாத்திரிகர்களை திரும்ப அழைத்து வருவதற்காக இலங்கை தூதரக அலுவலகத்துடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடில்லியில் உள்ள உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையில் உள்ள துணை உயர் ஸ்தானிகராலயம், வெளிவிவகார  மற்றும் புத்தசாசன அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து, தற்போது இந்தியாவில் உள்ள இலங்கை பௌத்த யாத்திரிகர்கள் விரைவாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை திறம்பட ஒருங்கிணைந்து செய்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொவிட் -19 வேகமாகப் பரவி வருவதால் ஏற்பட்டுள்ள பயணங்கள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இராஜதந்திர பணிகள் சேகரித்த தகவல்களின்படி, தற்போது இந்தியாவில் 22 சுற்றுலா குழுக்களைச் சேர்ந்த சுமார் 1,200 இலங்கை பௌத்த யாத்திரிகர்கள் உள்ளனர். இம்மாதம் 09 ஆம் திகதி அன்று இலங்கை அரசாங்கம் தம்பதீவ யாத்திரைகளை நிறுத்துவதற்கு முன்பு இந்த யாத்திரிகர்கள் இந்தியா வந்திருந்தனர் ”என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வட இந்தியாவில் உள்ள பௌத்த யாத்திரை தளங்களில் உள்ள இலங்கை பௌத்த பிக்குகளுடனும், சுற்றுப்பயணக் குழுக்களுடனும் இராஜதந்திர பணிகள் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளன. சுற்றுப்பயணக் குழுக்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திரும்பும் பயண ஏற்பாடுகளை விரைவுபடுத்துமாறு கோரப்பட்டுள்ளன.

இந்த யாத்திரிகர்களில் பெரும்பாலானோர் வரும் சில நாட்களில் புது டில்லி மற்றும் சென்னை வழியாக திரும்ப உள்ளனர். டிக்கெட்டுகளை மறுசீரமைக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடனான கலந்துரையாடல்கள் உட்பட, திரும்பும் பயணிகளுக்கு பயணங்கள் வசதி செய்கின்றன, ”என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18