கொரோனா போன்ற நெருக்கடிகளின் போது சமூக ஊடகங்களிலிருந்து பயன்பெறுவது எப்படி ?

17 Mar, 2020 | 12:14 PM
image

உலகின் எங்கோ ஒரு பகு­தியில் வசிப்­பவர் உல­கெங்கும் உள்­ள­வர்­க­ளோடு தொடர்­பு­கொள்ள சமூக வலைத்­த­ளங்கள் பயன்­ப­டு­கின்­றன. புதிய உற­வு­க­ளையும், நட்­பு­க­ளையும் உரு­வாக்கிக் கொள்­ளவும் பழை­ய­ன­வை­களை புதுப்­பித்துக் கொள்­ளவும், தக்­க­வைத்­துக் ­கொள்ளவும் சமூக வலைத்­த­ளங்கள் பெரும் பய­ன­ளிக்­கின்­றன.

சமூக வலைத்­த­ளங்­களின் பயன்­பாட்டில் நன்­மை­களும், தீமை­களும் கலந்தே இருக்­கின்­றன. இதன் நன்­மை­களை நாம் எப்­படி நமது வாழ்­வுக்கும், தொழி­லுக்கும் பயன்­ப­டுத்திக் கொள்­வது என்­கின்ற பார்வை மட்­டுமே நம்மை முன்­னோக்கி நகர்த்தும்.

உலகம் கொரோ­னாவால் பாரிய நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்ள நிலையில் பேஸ்புக் போன்ற சமூக ஊட­கங்கள் மூல­மாக மக்­க­ளுக்கு என்ன செய்ய முடியும் என்று இந்த கட்டுரையில் ஆரா­ய­வுள்ளோம்.

சீனாவின் வுஹான் நகரில் கடந்­தாண்டின் இறு­தியில் மெல்­ல­மெல்ல ஆரம்­பித்து இன்று சீனாவைத் தாண்டி பல நாடு­க­ளிலும் விஸ்­வ­ரூபம் எடுத்­துள்ள கொரோனா பற்­றிய செய்­திகள் உலக செய்தி நிறு­வ­னங்­களை ஆக்­கி­ர­மித்­துள்­ளது. இதில் பேஸ்புக் போன்ற சமூக ஊட­கங்­களும் விதி­வி­லக்­கல்ல.

1918 ஆம் ஆண்டு முதல் 1920ஆம் ஆண்டு வரை உலக மக்­களில் சுமார் 50 மில்­லியன் (5 கோடி) பேரை  பலி­கொண்ட ஸ்பானிஸ் புளு (ஸ்பானிய காய்ச்சல்) போன்ற பல உல­க­ளா­விய ரீதியில் பாரிய அளவில் பர­விய Pandemic  தொற்­று­நோய்­களை வர­லாறு பதி­வு­ செய்­துள்ளது. இவற்றால் ஏற்­பட்ட உயி­ரி­ழப்புக்களும் ஏராளம்.

2002 இல் SARSசார்ஸ், 2012 இல் MERSமேர்ஸ் போன்ற கொரோனா வைரஸ் வர்க்­கத்தை சேர்ந்த தொற்­று­நோய்கள்  உலகை கவ­லையில் ஆழ்த்தி ஒரு சில நாடு­களைப் பிராந்­தி­யங்­களை முடக்­கிய போதும் தற்­போ­தைய கொரோனா வைரஸ் Covid 1  போன்று உலகில் 100க்கும் அதி­க­மான நாடு­களில் பரவி வியா­பித்து முழு­மை­யாக நாடு­க­ளையே முடக்கும் அவலம் அண்­மைக்­கா­லத்தில் ஏற்­பட்­ட­தில்லை. இதனால் தான் கடந்த புதன்­கி­ழ­மை­யன்று தற்போ­தைய கொரோனா வைரஸை உல­களாவிய ரீதி­யாக எல்­லைகள் தாண்­டிப்­ ப­ரவும் இதற்கு முன் கண்­டி­ராக தொற்­றுநோய் என உலக சுகா­தார ஸ்தாபனம் உத்­தி­யோக பூர்வ­மாக அறிவித்­துள்­ளது.

2002 இல் பேஸ்புக் போன்ற சமூக வலைத்­த­ளங்கள் இருக்­க­வில்லை. 2012 இல் பேஸ்புக் இருந்­த­போதும் இந்­த­ள­விற்கு பெரும் வீச்­சு­டை ய­தாக இருக்­க­வில்லை.

நாள்­தோறும் பல மில்­லி­யன்­களால் வியா­பித்­து­வரும் பேஸ்புக் அதனை அடிக்­கடி பயன்­ப­டுத்தும் 250 கோடிப்­பா­வ­னை­யா­ளர்­களை தற்­போது கொண்­டி­ருக்­கின்ற நிலையில் கொரோனா போன்ற உல­க­ளா­விய தொற்­று நோய் தொடர்­பான தக­வல்கள் அதி­க­மாக பகிரப்­படும் தள­மாக மாறி­விட்­டுள்­ளது.

பய­னுள்ள தக­வல்கள் மக்­க­ளுக்கு சென்ற­டைவது நன்­மை­யான போதும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்­த­ளங்­களில் தக­வல்கள் உறு­தி­செய்­யப்­ப­டாத நிலையில் பல சந்­தர்ப்­பங்­களில் பகிர்ந்து கொள்­ளப்­ப­டு­கின்­றமை சீரற்ற தகவல் தொற்று Infodemic என்ற பேர­பா­யத்­திற்கு வழி­ய­மைக்கும் என எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா தொற்­றுக்கு இலக்­கா­னாலும் அதனால் இறக்கும் சாத்­தியம் சுமார் 2 சத­வீ­த­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. பெரும்­பாலும் நலி­வு­டைய உடல்­நி­லையைக் கொண்­டுள்ள முதி­ய­வர்­களே இறக்­கின்­றனர் என ஆரம்ப ஆய்வுகள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்­நிலையில் கொரோ­னாவை கட்­டுப்­ப­டுத்த முடியும் அத­னை­யிட்டு அச்சம் கொள்ளத் தேவை­யில்லை என உலக சுகா­தார ஸ்தாபனம் அர­சாங்­கங்கள் கூறி­னாலும் சமூக ஊட­கங்கள் மூலம் பரப்­பப்­படும் வதந்­தி­களும் போலிச் செய்­தி­களும் மக்­களை தேவை­யற்ற அதிர்ச்­சிக்கும் அச்­சத்­திற்கும் ஆளாக்கி விட்­டுள்­ளன.

சீனாவில் கொரோனா நோயா­ளி­களை நாயை இழுத்துச் செல்­வது போன்றும் கட்­டுக்­கட்­டாக சுட்­டுக்­கொல்­வதும் போன்று சமூக ஊட­கங்­களில் பரப்­பப்­படும் போலித்­த­க­வல்­களை உண்மை என நம்பி மக்கள் தமது சக நண்­பர்கள் அய­ல­வர்கள் சாதா­ர­ண­மாக தும்­மி­னாலே வெறுத்­தொ­துக்கி விலகிச் செல்லும் நிலை ஏற்­பட்டு வரு­கின்­றமை கவ­லைக்­கி­ட­மா­னது.

இந்த நெருக்­கடி வேளையில் உங்­க­ளுக்கு கிடைக்­கக்­கூ­டிய கைகளை சரி­வரக் கழு­வு­வது எப்­படி? போன்ற சாதா­ர­ண­மான தகவல் முதற்­கொண்டு அடுத்து இரண்டு வாரங்­களில் இத்­தா­லியின் நிலை­மையை இங்­கி­லாந்து சந்­திக்கும் போன்ற நிபு­ணர்­களின் எச்­ச­ரிக்கை தக­வல்கள் வரை பல தக­வல்கள் கிடைக்­கின்­றன. இவை எமக்கு மிகவும் பய­னுள்­ள­தாகும். வானொலி, தொலைக்­காட்சி செய்­தி­களில் இவை ஒலி ஒளி­ப­ரப்­பப்­பட்­டாலும் அதி­க­மாக நாம் சமூக ஊட­கங்­க­ளி­லேயே நேரத்தைக் கழிப்­பதால் அவற்­றி­லேயே இவற்றை பார்க்­கின்றோம். அதே­நே­ரத்தில் கொரோனா வந்த நோயா­ளிகள் அங்­குள்­ளனர் இங்­குள்­ளனர் போன்ற  உறு­தி­செய்­யப்­ப­டாத தக­வல்கள் சமூக ஊட­கங்கள் ஊடாக சாதா­ரண மக்­களை சென்­ற­டையும் போது பதற்­ற­நிலை உரு­வா­வ­தற்கு அதிக வாய்ப்­புக்கள் உள்­ளன.

இந்த நிலையில் பேஸ்­புக்கை தினமும் பார்க்கும் நீங்கள் அதனை நல்ல முறையில் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக பின்­வரும் விட­யங்­களை கவ­னத்தில் கொள்­ளுங்கள். சர்­வ­தேச ரீதியில் நம்­பத்­த­குந்த பி.பி.சி, அல்­ஜ­ஸீரா,  சி.என்.என் போன்ற செய்­திஸ்­தாப­னங்­களின் பேஸ்புக் பக்கங்­களை லைக் பண்ணி See First என்ற தெரிவை மேற்­கொள்­ளுங்கள். அது போன்றே வீர­கே­சரி, நியூஸ் பெஸ்ற் போன்ற உள்ளூர் செய்­திஸ்­தா­ப­னங்­களின் பேஸ்புக் பக்­கங்­களை லைக் பண்ணி  சீ பெஸ்ற் தெரிவை அழுத்தி வைத்துக் கொள்­ளுங்கள். இதனைத் தவிர அடிக்­கடி நம்­ப­க­ர­மான செய்­தி­களைப் பகிரும் வைத்­தி­யர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் போன்­ற­வர்­களின் பேஸ்புக் பக்­கங்­க­ளையும் லைக் பண்ணி சீ பெஸ்ற் தெரிவை அழுத்தி வைத்­துக்­கொள்­ளுங்கள். நீங்கள் இதன்­மூலம் ஆயி­ரக்­க­ணக்­கான நண்­பர்­களைக் கொண்­டி­ருந்­தாலும் இதன் மூல­மாக பேஸ்புக்  கணக்கை லொகின் செய்­த­வுடன் நீங்கள் முதலில் பார்க்கும் பக்­கங்கள்  நம்­பத்­தக்க தக­வல்­களால் நிறைந்­தி­ருக்கும். இதன் மூலம் தேவை­யற்ற பதற்­றத்தை தணிக்க முடியும்.

இத­னைத்­த­விர  உங்­க­ளுக்கு கொரோ­னாவைப் பற்­றிய சந்­தேகம் இருந்தால் நீங்கள் உங்கள் கேள்­வியை பகி­ரங்­க­மாக பதி­விட்டு உங்கள் நண்பர் வட்­டா­ரத்­தி­லுள்ள வைத்­தி­யர்கள் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பதில்­களை பெற்றுக் ­கொள்­ள­மு­டியும். உதா­ர­ண­மாக வெப்பவலய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குப்பிடிக்க மாட்டாது என கருத்துக்கள் உலவுகின்றதே இதுபற்றி உங்கள் நிலைப்பாடு யாதென  பேஸ்புக்கில் பதிவிட்டபோது சில வைத்தியர்கள் கொரோனா வெப்பவலயத்திலும் பரவும் சாத்தியம் உள்ளது என கூறியிருந்தனர்.

 இவ்வாறு தெளிவுகளைப் பெற பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியும். அநேகர் பயன்படுத்துவதனால் பேஸ்புக் பற்றி இங்கு குறிப்பிட்டிருந்தேன். ஆனால் (Twitter) டுவிட்டரில் இதைவிடவும் சிறப்பான முறையில் தகவல்களைப் பெற்றுக்கொண்டு நெருக்கடி வேளையில் அவதானமாக செயற்படமுடியும். அடுத்த வாரத்தில் டுவிட்டரை பற்றிப் பார்ப்போம்.

- அருண் ஆரோக்கியநாதன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04