மூடப்பட்டது தாஜ்மஹால்!

Published By: Vishnu

17 Mar, 2020 | 11:22 AM
image

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மூடப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காதல் சின்னமான தாஜ்மஹாலை பார்வையிடுவதற்காக நாளாந்தம் பல்லாயிரக் கணக்கானோர் வருவதாக தெரிவித்துள்ள இந்திய கலாசார அமைச்சகம், அதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தாஜ்மஹாலை தற்காலிகமாக மூடுவது அவசியமானதாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிடுவதற்காக நாளொன்றுக்கு சுமார் 70,000 பேர் வரை அங்கு செல்கின்றனர்.

இந்தியாவில் இதுவரை 114 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் இருவர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இந்தியாவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று தொடர்பான சோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்திய அரசாங்கம் மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பல முக்கிய தலங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரிய கட்டிடங்கள் என்பவற்றையும் மூடியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08