கடந்த ஒக்­டோபர் மாதத்­தி­லி­ருந்து நவம்பர் மாத இறுதி வரை­யான காலப்­பகு­திக் குள் மதுபோதையில் வாகனம் செலுத்­தி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக விதிக்­கப்பட்ட தண்டப் பணத்தின் பெறு­மதி 6 லட்­சத்து 53 ஆயி­ரத்து 620 ரூபா என யாழ் பொலிஸ் நிலை­யத்தின் தலைமை பொலிஸ் பரி­சோ­தகர் யூ.கே. வூட்லர் தெரி­வித்­துள்ளார்.

குறித்த தண்­டப்­பணம் யாழ். பொலிஸ் நிலை­யத்­தினால் மட்டும் மேற்­கொள்­ளப்­பட்ட பதி­வு­களின் அடிப்­ப­டை­யி­லா­ன­தாகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

யாழ். பொலிஸ் நிலைய பொலி­ஸாரால் குடி­போ­தையில் வாகனம் செலுத்­திய குற்­றச்­சாட்டில் மேற் குறித்த காலப்­ப­கு­தியில் 59 பேருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதில் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­ட­வர்­க­ளிடம் இருந்து ௫ இலட்­சத்து 19 ஆயி­ரத்து 100 ரூபாவும் பொலி­ஸாரால் தண்டம் விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளிடம் இருந்து ஒரு லட்­சத்து 34 ஆயி­ரத்து 520 ரூபாவும் தண்­ட­மாக அற­வி­டப்­பட்­டுள்­ளது.

திருட்டு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய 10 வழக்­குகள் நீதி­மன்றில் முற்­ப­டுத்­தப்­பட்டு அவற்­றிற்­கான தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வ­ழக்­கு­க­ளுடன் தொடர்­பு­பட்ட குற்­ற­வா­ளிகள் நாவற்­குழி, சாவ­கச்­சேரி, புங்­கு­டு­தீவு, ஊர்­கா­வற்­றுறை, அரி­யாலை, பூம்­புகார், கொக்­குவில், கொழும்­புத்­துறை, குரு­நகர் ஆகிய பகு­தி­களை சேர்ந்­த­வர்­க­ளாக உள்­ளனர்.

நீதி­மன்­றத்­தினால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் 44 பேர் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் முற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.சட்­ட­வி­ரோத மண் கடத்தல் தொடர்­பாக 8 வழக்­கு­களும், சட்­ட­வி­ரோத மாடு கடத்தல், இறைச்சி வெட்­டு­த­லுடன் தொடர்­பு­டைய 3 வழக்­கு­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இத­னை­விட 12 கிலோ­விற்கும் அதி­க­மான கஞ்­சாவும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. இவற்­றுடன் தொடர்­பு­டைய இரண்டு சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

மேலும் யாழ். நகர பகு­தியில் குடி­போ­தையில் தக­ராறு புரிந்த 72 பேரை கைது செய்து நீதி­மன்றில் முற்­ப­டுத்­தி­யுள்ளோம்.

அத்­துடன் டெங்கு பர­வக்­கூ­டிய வகையில் சுற்­றுப்­புறச் சூழலை வைத்­தி­ருந்­த­வர்­களும் மற்றும் வேறு பிரச்­சி­னை­க­ளுடன் தொடர்­பு­பட்ட குற்­றச்­சாட்டில் 19 பேரிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எனவே, மேற்கூறப்பட்ட அனைத்து வழக்குகளும் கடந்த ஒக்ரோபர் மாதம் தொடக்கம் நவம்பர் மாத இறுதிவரை யாழ். பொலிஸ் நிலையத்தால் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையிலான தக-வல்களாகும் என்றார்.