எதிர்­வரும் டிசம்பர் 08 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள கல்விப் பொதுத் ­த­ரா­தர (சாதா­ரண தரப்) பரீட்­சைக்கு ஆறு இலட்­சத்து 64 ஆயிரத்து 537 மாணவர்கள் தோற்­ற­வுள்­ள­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் டபிள்யூ.எம்.ஜே.புஸ்­ப­கு­மார தெரி­வித்தார்.

இவர்களுள் நான்கு இலட்­சத்து 3 ஆயிரத்து 442 பேர் பாட­சாலை விண்­ணப்­ப­தா­ரிகள் எனவும் இரண்டு இலட்­சத்து 60 ஆயிரத்து 895 பேர் தனியார் பரீட்­சார்த்­திகள் எனவும் பரீட்­சைகள் ஆணை­யாளர் மேலும் தெரி­வித்தார். இம்­முறை 4,670 பரீட்சை மத்­திய நிலை­யங்களை அமைக்க எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ள­தோடு கடந்த வருடம் 4,279 பரீட்சை மத்­திய நிலை­யங்­களே இயங்­கி­ய­தா­கவும் தெரி­வித்த அவர் இந்­த­முறை ஆறு இலட்­சத்து 64ஆயிரத்து537 பேர் பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்­ள­தோடு, கடந்த வருடம் ஐந்து இலட்­சத்து 70ஆயிரத்து 409 பேரே (சாதா­ரண தரப்) பரீட்­சை­க­ளுக்கு தோற்­றி­யி­ருந்­தனர் எனவும் அவர் தெரி­வித்தார். இதன்­படி கடந்த வரு­டத்­துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 87,128 பரீட்சார்த்திகள் மேலதிகமாக தோற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.