பல உலக நாடுகள் மூடி தனிமைப்படுத்த நடவடிக்கை ! கொரோனாவின் உயிரிழப்பு, பாதிப்புக்கள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு !

Published By: Vishnu

17 Mar, 2020 | 10:24 AM
image

உலக சுகாதார ஸ்தாபனம் 168,019 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும், 6,610 பேர் அதனால் உயிரிழந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதேவளை கொரோனா தொற்று தொடர்பில் கண்காணிக்கும் அமெரிக்காவின் ஜோன்ஸ் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், இதுவரை 181,500 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும், 7,100 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதேவளை சுமார் 79,000 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனா: 

கொரோனா பரவலின் மையமான சீனாவில் நேற்று திங்கட்கிழமை 21 கொரோனா தொற்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவர். அதேநேரம் 13 உயிரிழப்பு சம்பவங்களும் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் இதுவரை 3,226 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80,881 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதேவளை 68,679 பூர குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியும் உள்ளனர்.

உலகநாடுகள் பல மூடி தனிமைப்படுத்தல் நடவடிக்கை:

உலகெங்கிலும் உள்ள நாடுகள் தனது எல்லைகளை மூடியுள்ளதுடன் பயணம் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு கட்டுப்பாடுகளை விதிததுள்ளன.

மேலும் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளன, குடிமக்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அல்லது வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளன.

அமெரிக்கா:

அமெரிக்காவில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 4,400 ஐ கடந்துள்ளது. அது மாத்திரமல்லாது குறைந்தது 86 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதேவளை 10 க்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதை தவிர்க்குமாறும் வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது. 

மேலும் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க மாநிலங்களும் நகரங்களும் கட்டாய மூடல்களையும் அறிவித்துள்ளன.

ஆசியா:

ஹொங்கொங் வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளின் பிராந்தியத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நீண்டகால கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளன.

மலேசியா நாடு தழுவிய இயக்கக் கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது, 

அதன்படி குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும், அனைத்து மத, விளையாட்டு, சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளுக்கும் தடை விதித்துள்ளது.

அதேநேரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் திங்களன்று நாட்டின் பல பாகங்களை பூட்டிய நிலையில் வைத்துள்ளது. அனைத்து பொது போக்குவரத்து மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளில் இருக்குமாறும் அவுறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பா:

ஐரோப்பிய ஆணையகம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு தற்காலிக கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜேர்மனி, ஸ்பெய்ன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஹங்கேரி ஆகியவை தங்களல் நில எல்லைகளை மூடிவிட்டன. அதே நேரத்தில் 47 மில்லியன் குடியிருப்பாளர்களை கொண்ட ஸ்பெய்ன் தனது பிரஜைகளை வீடுகளை விடடு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளும் தமது பிரஜைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. 

இங்கிலாந்து ஏனையவர்களுடனான அனைத்து அத்தியாவசிய தொடர்புகளையும் நிறுத்தி, தேவையற்ற அனைத்து பயணங்களையும் நிறுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35