அமைதியான முறையில் ஆலயங்களில் வழிபடுவோம்- சர்வதேச இந்து இளைஞர் பேரவை

Published By: Daya

17 Mar, 2020 | 09:34 AM
image

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகாரணமாக அனைத்து இந்துமத வழிபாட்டுத்தலங்களிலும் அமைதியான முறையில் அடியவர்கள் வழிபடலாம் எனவும் நித்திய கைங்கர்யங்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்த தேவை இல்லை எனவும் நைமித்திய பூஜைகளை சற்றே ஆடம்பரமில்லாது அமைதியாக செய்து கொள்ளவும் என சர்வதேச இந்து இளைஞர் பேரவையின்  தலைவர் சிவஸ்ரீ.ஜெ.மயூரக்குருக்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இன்று உலகநாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸானது பல மனித உயிர்களை காவுகொண்டுள்ளதுடன் மிக வேகமாகப் பரவியும் வருகின்றது. அதனைக் கட்டுப்படுத்த பல உலக நாடுகள் திணறிவருகின்றது. ஆனால் அவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதை நாம் அனைவரும் அறிவோம். 

வைத்தியதுறையும், அரசாங்கமும் பரவாமல் இருக்க பல வழிகளை எமக்கு தெரிவித்துள்ளனர். எனவே அவற்றை செய்ய வேண்டியது அனைவரது கடமையாகும். அதனால் இந்த நோய்த்தாக்கத்தில் இருந்து நாம் அனைவரும் காக்கப்படவேண்டுமேயானால் சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு தொடுகைகள் மற்றும் சுவாசங்கள் மூலம் பரவுவதால் பலர் ஓரிடத்தில் சேரும்போது அதனுடைய பரம்பல் பரவலடையும் எனவே அப்படியான சந்தர்ப்பங்களை அனைவரும் தவிர்த்துக்கொள்வோம். 

இது அனைவரது உயிர்சார்ந்த நடவடிக்கையாகும். அதனால் நாம் ஆலயங்களில் தற்காலிகமாக அதிகமாக கூடுவதனை தவிர்கலாம். பொது நன்மைகள் கருதி அவற்றை குறைத்துக்கொள்வதில் எந்த இடையூறுகளும் ஏற்படப்போவதில்லை. 

வழமையான வழிபாடுகளுக்கும் எந்த குந்தகமும் ஏற்படப்போவதில்லை. எனவே வைத்தியர்களின் ஆலோசனைப்படி அவற்றை மேற்கொள்வதுடன் அனைத்து சுகாதாரத் தொண்டர்களுக்கும், வைத்தியர்களுக்கும் பூரண ஆதரவினை வழங்கி அவர்களின் செயற்பாடுகள் சிறப்பாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 

தேவை ஏற்படும் போது சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் அனைத்து இளைஞர்களும் உறுப்பினர்களும் களத்தில் இறங்கி வேலைசெய்யவும் தயாராக உள்ளனர். எனவே ஆலயம் சார்ந்தோர்கள் இதனை நடைமுறைப்படுத்துமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59