சவூதி - ரஷ்ய எரிபொருள் விலைப்போர்

16 Mar, 2020 | 04:51 PM
image

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக உலகின் பெரிய எரி­பொருள் உற்­பத்தி நாடு­க­ளான சவூதி அரே­பி­யாவும் ரஷ்­யாவும் எரி­பொருள் உற்­பத்தி மற்றும் அதன் விலை தொடர்­பாக சுமு­க­மாக ஒத்­து­ழைத்­தன. இவர்­களின் ஒத்­து­ழைப்பு அமெ­ரிக்­கா­விலும் கன­டா­விலும் உள்ள ஷெல் வாயு உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு எதி­ரா­ன­தா­கவே அமைந்­தி­ருந்­தது. ஷெல் வாயு உற்­பத்தி செலவு மசகு எண்ணெய் உற்­பத்தி செல­விலும் பார்க்க அதி­க­மா­ன­தா­கவே இருக்­கின்­றது. கடந்த பத்து ஆண்­டு­க­ளாக ஷெல் வாயு உற்­பத்தி செலவை குறைப்­பதில் வெற்றி காணப்­பட்­டுள்­ளது.

ஒபெக்கும் ஒபெக்+உம்

2016ஆம் ஆண்டு 14 உறுப்பு நாடு­களைக் கொண்ட Organization of Petroleum Exporting Countries எனப்­படும் எரி­பொருள் உற்­பத்தி நாடு­களின் கூட்­ட­மைப்பு ஏனைய 3 எரி­பொருள் உற்­பத்தி நாடு­க­ளையும் இணைத்து ஒபெக்+ என்ற ஒரு கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யது. முதலில் ஒபெக்+ நாடுகள் ஆறு­மா­தங்கள் எரி­பொருள் உற்­பத்­தியைக் குறைப்­ப­தற்கு இணங்­கின.

அந்த இணக்கம் மார்ச் மாதம் வரை தொடர்ந்­தது. ஒபெக் நாடுகள் உலக எரி­பொருள் உற்­பத்­தியில் மூன்றில் ஒரு பகு­தியை செய்­கி­றது. ஐக்­கிய அமெ­ரிக்கா, ஐக்­கிய இராச்­சியம், சீனா, நோர்வே, கனடா ஆகிய முக்­கிய எரி­பொருள் உற்­பத்தி நாடுகள் இந்த இரு கூட்­ட­மைப்­பிலும் இல்லை. ஒபெக்+ நாடுகள் 2018 ஒக்­டோ­பரில் இணங்­கிய எரி­பொருள் உற்­பத்தி குறைப்பு உடன்­பாடு எதிர்­வரும் 31ஆம் திக­தி­யுடன் முடி­வ­டை­கின்­றது. அந்த உடன்­பாட்டில் ஒத்துக் கொள்­ளப்­பட்­ட­திலும் பார்க்க ரஷ்யா நாள் ஒன்­றுக்கு 250,000 பீப்பாய் மசகு எண்­ணெயை உற்­பத்தி செய்­தது. சவூதி அரே­பி­யாவும் தனது உற்­பத்­தியை ஒத்துக் கொள்­ளப்­பட்­ட­திலும் பார்க்க அதி­க­ரித்­தி­ருந்­தது. ஆனால் சவூதி எரி­பொருள் உற்­பத்தி நிலைகள் மீது 2019இல் செய்­யப்­பட்ட ஏவு­கணைத் தாக்­கு­தலால் அதன் உற்­பத்தி குறைந்­தி­ருந்­தது.

தொற்று நோயால் பாதிப்­ப­டைந்த எரி­பொருள் பாவனை

கொரோனா நச்­சுக்­கி­ருமி உல­கெங்கும் பரவத் தொடங்­கி­யதால் உல­கெங்கும் மக்­க­ளது பய­ணங்கள் பெரு­ம­ளவு குறைந்­த­துடன் பல உற்­பத்­தி­களும் பாதிப்­ப­டைந்­தன. இதனால் உலகில் எரி­பொருள் பாவனை குறைந்து எரி­பொருள் விலையும் வீழ்ச்­சி­ய­டைந்­தது. இதனால் சவூதி அரே­பியா எரி­பொருள் உற்­பத்­தியை குறைக்கும் பொருட்டு எரி­பொருள் உற்­பத்தி நாடு­களின் கூட்­ட­மைப்­பான ஒபெக்­கையும் ரஷ்யா உள்­ளிட்ட மற்ற நாடு­க­ளையும் கொண்ட ஒபெக்+ இன் மாநாட்டை கடந்த 06ஆம் திகதி வியன்­னாவில் உள்ள ஒபெக்கின் தலை­மை­ய­கத்தில் கூட்­டி­யது. உலக எரி­பொருள் உற்­பத்­தியை 1.5வீத குறைக்கும் முன்­மொ­ழிவை சவூதி அரே­பியா முன்­வைத்­தது. மாநாட்டில் சவூதி அரே­பி­யாவின் அணு­கு­முறை மிரட்­ட­லுடன் கூடி­ய­தாக இருந்­தது என அறி­யப்­பட்­டுள்­ளது. ஆனால் சவூ­தியின் அணு­கு­முறை படு­தோல்­வியை சந்­தித்­தது. ரஷ்யா எரி­பொருள் உற்­பத்­தியை குறைக்க மறுத்து கூட்­டத்தில் இருந்து வெளி­யே­றி­யது.

ரஷ்யா மூன்று கார­ணங்­க­ளுக்­காக மறுத்­தது. முத­லா­வது தனது எரி­பொருள் விற்­பனை குறை­வதை ரஷ்யா விரும்­ப­வில்லை. இரண்­டா­வது அமெ­ரிக்­கா­விலும் கன­டா­விலும் உள்ள ஷெல் எரி­வாயு உற்­பத்தி நிறு­வ­னங்கள் எரி­பொருள் விலை அதி­க­ரிக்­கப்­ப­டு­வதால் தலை நிமிர்­வதை ரஷ்யா விரும்­ப­வில்லை. மூன்­றா­வது ரஷ்யா தன்­னிடம் எரி­பொருள் வாங்கும் நாடு­களை இழக்க விரும்­ப­வில்லை. உலக எரி­பொருள் பாவனை எந்­த­ளவு குறையும் என்­பது பற்றி சரி­யான தகவல் இல்­லாமல் தன்னால் உற்­பத்திக் குறைப்பை செய்ய முடி­யாது என்ற ரஷ்யா எதிர்­வரும் ஏப்ரல் முதலாம் திக­தி­யி­லி­ருந்து மூன்று மாதங்­க­ளுக்கு மட்டும் எரி­பொருள் உற்­பத்­தியைக் குறைக்க தயார் என்­றது. அது போதாது என்­றது சவூதி அரே­பியா.  2014ஆம் ஆண்டு இதே போன்ற முரண்­பாடு சவூ­திக்கும் ரஷ்­யா­வுக்கும் இடையில் ஏற்­பட்­ட­போது ஒரு பீப்பாய் மசகு எண்­ணெயின் விலை அமெ­ரிக்க டொலர் 30இலும் குறைந்­தது. 2020 மார்ச்­சிலும் அதே நடந்­தது. ஆனால் இனி வரும் மாதங்­களில் எரி­பொருள் விலை $20வரை வீழ்ச்­சி­ய­டை­யலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ரஷ்­யாவின் எரி­பொருள் பொரு­ளா­தாரம்

ஒரு பீப்பாய் மசகு எண்­ணெயை தரையில் உற்­பத்தி செய்ய ரஷ்­யாவில்  40 அமெ­ரிக்க டொலர் செல­வா­கின்­றது. அதே வேளையில் கட­லுக்­க­டியில் 42 அமெ­ரிக்க டொலர்  செல­வா­கின்­றது. இந்த செலவு உள்­நாட்டு வரி­க­ளையும் உள்­ள­டக்­கி­யது. வரி­க­ளின்­றிய உற்­பத்திச் செலவு 30 அமெ­ரிக்க டொல­ராகும். 2014ஆம் ஆண்டு ரஷ்யா உக்­ரேனின் ஒரு பகு­தி­யாக இருந்த கிறி­மி­யாவைத் தன்­னுடன் இணைத்­த­மைக்கு எதி­ராக வட அமெ­ரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்­பிய நாடுகள் ரஷ்­யா­வுக்கு எதி­ராக விதித்­துள்ள பொரு­ளா­தாரத் தடைக்குப் பின்னர் ரஷ்யா தனது பொரு­ளா­தா­ரத்தை உறு­திப்­ப­டுத்­து­வதில் அதிக கவனம் செலுத்­து­கின்­றது. ரஷ்­யாவின் தேசிய வரு­மா­னத்தில் 60 வீதத்­துக்கு மேல் எரி­பொருள் ஏற்­று­ம­தியால் கிடைக்­கின்­றது. அமெ­ரிக்கா அதை ரஷ்­யாவின் வலு­வின்மைப் புள்­ளி­யாக இலக்கு வைத்து பொரு­ளா­தாரத் தாக்­குதல் நடத்­தலாம் என்ற எண்­ணத்தில் ரஷ்யா தனது எரி­பொருள் ஏற்­று­மதி கொள்­வ­னவு செய்யும் நாடு­களை அதி­க­ரிப்­ப­திலும் அவற்­றுடன் நீண்­ட­கால அடிப்­ப­டையில் ஒப்­பந்­தங்­களை செய்­வ­திலும் விநி­யோக வச­தி­களை புதி­தாக உரு­வாக்­கு­வ­திலும் 2014இல் இருந்து ஈடு­பட்டு வரு­கின்­றது. தன்­னிடம் கொள்­வ­னவு செய்­ப­வர்­களை இழக்க விரும்­பாத ரஷ்யா தனது உற்­பத்­தியைக் குறைக்க முடி­யாத நிலையில் இருக்­கின்­றது. ஜேர்­மனி உள்­ளிட்ட மேற்கு நாடு­க­ளுக்கு எரி­பொருள் விநி­யோ­கிக்க போல்ரிக் கட­லி­னூ­டாக ஒரு குழாய் கட்­ட­மைப்பை ரஷ்யா உரு­வாக்கி வரு­கின்­றது. இத்­திட்­டத்தில் ஜேர்­மனி ஈடு­ப­டு­வதை அமெ­ரிக்கா கடு­மை­யாக எதிர்ப்­ப­துடன் அத்­திட்­டத்தில் பங்கு பெறும் நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக பொரு­ளா­தாரத் தடை­யையும் விதித்­துள்­ளது. இதே போல சீனா­வுக்கும் ரஷ்யா குழாய் மூல­மாக எரி­பொருள் விநி­யோகம் செய்­ய­வி­ருக்­கின்­றது. வளை குடா நாடு­களில் இருந்து மேற்கு ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு சிரி­யா­வூ­டாக குழாய் மூலம் எரி­பொருள் விநி­யோ­கிக்கும் திட்டம் முன் வைக்­கப்­பட்­ட­போது ரஷ்­யாவின் தூண்­டு­தலால் சிரிய ஜனா­தி­பதி பஷார் அல் அசாத் எதிர்த்தார். அதனால் அவரைப் பத­வியில் இருந்து அகற்ற எடுத்த முயற்­சி­களை ரஷ்யா முறி­ய­டித்­துள்­ளது. சிரி­யா­வி­னூ­டாக மேற்கு ஐரோப்­பா­வுக்கு எரி­பொருள் விநி­யோ­கிக்கும் திட்டம் மேற்கு ஐரோப்­பிய நாடுகள் ரஷ்­யாவில் எரி­பொருள் கொள்­வ­ன­வுக்கு தங்­கி­யி­ருப்­பதைக் குறைக்­கவே.

சினம் கொண்­டெ­ழுந்த சவூதி

உற்­பத்திக் குறைப்­புக்கு ரஷ்யா மறுத்­ததால் சினம் கொண்ட சவூதி தனது நாளாந்த எரி­பொருள் உற்­பத்­தியை 13 மில்­லியன் பீப்­பாய்­க­ளாக உயர்த்­துவேன் என சூளு­ரைத்­துள்­ளது. அதனால் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 20வீதம் குறைக்­கப்­படும். சவூதி உற்­பத்­தியை அதி­க­ரிப்­பதன் மூலம் ரஷ்­யாவை பழி­வாங்­கு­வ­துடன் வட அமெ­ரிக்க ஷேல் நிறு­வ­னங்­க­ளையும் அடக்­கு­கின்­றது. இதனால் சவூதி எரி­பொருள் உற்­பத்தி நிறு­வ­ன­மான அரம்­கோவின் பங்­குகள் 9வீத வீழ்ச்­சி­ய­டைந்­தன. ஈரா­னையும் இது கடு­மை­யாக பாதிக்கும். ஈரான் சினம் கொண்டு சவூ­திக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கலாம். சவூதி எரி­பொருள் உற்­பத்தி நிலைகள் மீது தனது ஆத­ர­வுடன் இயங்கும் போரா­ளிகள் மூலம் ஏவு­கணைத் தாக்­கு­தலை செய்­யலாம் அல்­லது ஹோமஸ் நீரி­ணை­யூ­டான எரி­பொருள் விநி­யோ­கத்தை தடுக்க முய­லலாம்.

தற்­போது ரஷ்­யா­வி­ட­மி­ருந்து எரி­பொ­ருளை வாங்கும் வட­மேற்கு ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு சவூதி அரே­பியா குறைந்த விலையில் எரி­பொருள் விற்­பனை செய்ய முன்­வந்­துள்­ளது. சவூதி அரே­பியா குறைந்த செலவில் மசகு எண்ணெய் உற்­பத்தி செய்யும் நாடாகும். தம்மால் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 17 அமெ­ரிக்க டொலர் வரை தாக்குப் பிடிக்க முடியும் என அது மார் தட்­டு­கின்­றது. சவூதி அரே­பி­யாவின் உற்­பத்தி அதி­க­ரிப்பு எரி­பொருள் விலைப் போர் எனக் கரு­தப்­ப­டு­கின்­றது.

இவ்­வ­ருட ஆரம்­பத்தின் முதல் இரண்டு மாதங்­களில் உலக எரி­பொருள் பாவனை 2.5மில்­லியன் பீப்­பாய்­களால் குறைந்­துள்­ளது. உலக எரி­பொருள் முக­வ­ரகம் இவ்­வ­ரு­டத்தில் நாளாந்த எரி­பொருள் பாவனை 90,000 பீப்­பாய்­களால் குறையும் என எதிர்வு கூறி­யுள்­ளது. இதை ரஷ்யா எப்­படி எதிர்­கொள்ளப் போகின்­றது என்­பதைப் பார்க்க வேண்டும். ரஷ்­யாவின் இப்­போ­தைய பாதீடு எரி­பொருள் விலை 42 அமெ­ரிக்க டொலர் என்ற அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ரஷ்யா எரி­பொருள் விநி­யோ­கிக்கும் நாடு­க­ளுக்கு குறைந்த விலையில் எரி­பொருள் விநி­யோ­கிக்கப் போவ­தா­கவும் சவூதி அரே­பியா சொல்­லி­யுள்­ளது. ரஷ்­யா­விடம் இருக்கும் 150 பில்­லியன் டொலர் நிதியம் எரி­பொருள் வரு­மானக் குறைப்பை அடுத்த ஆறு முதல் பத்து ஆண்­டுகள் வரை ரஷ்­யாவால் தாக்குப் பிடிக்க முடியும் என்கின்றது ரஷ்யா.

     சவூதி அரேபியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் இளவரசர் முஹம்மது பின் சல்மான் எழுந்தமானமாக முடிவுகளை எடுத்து செயற்படுபவர் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. மற்ற அரச குடும்பத்தினரைக் கைது செய்தல், யேமன் மீது செய்யும் கொடூர தாக்குதல், துருக்கியில் ஊடகவியலாளர் கொலை போன்றவற்றில் அவரது நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. இவர் எடுத்த ஒரு அவசர முடிவில் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பும் தவறான முடிவு என பலரும் கருதுகின்றனர். உலகின் முக்கிய எரிபொருள் கொள்வனவாளர்களாகிய மேற்கு ஐரோப்பாவும் சீனாவும் ரஷ்யாவுக்கு அண்மையில் இருப்பது சவூதிக்கு சாதகமான ஒன்று. இளவரசரின் உற்பத்தி அதிகரிப்பு நகர்வு பிழையாகிப் போனால் அவர் குடும்பத்தில் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி வரும்.

- வேல் தர்மா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41