இந்தியாவின் பராமரிப்புத் தளம்

16 Mar, 2020 | 04:44 PM
image

இந்­தியா தனது பாது­காப்புத் தள­பாட ஏற்­று­மதி சந்­தை­களில் ஒன்­றாக இலங்­கையை மாற்­று­வ­தற்கு திட்­ட­மிட்டு வரு­கி­றது என்­பதை கடந்தவார பத்தியில், குறிப்­பிட்­டி­ருந்தோம்.

‘இலங்­கையை குறி­வைக்கும் இந்­தியா’ என்ற தலைப்பில் எழு­தப்­பட்ட அந்தப் பத்­தியில் கூறி­யி­ருந்த விட­யங்­களை வலுப்­ப­டுத்தும் வகை­யி­லான  செய்தி ஒன்று புது­டெல்­லியிலிருந்து கிடைத்­தி­ருக்­கி­றது.

இந்­தி­யாவின் முன்­னணி பாது­காப்புத் தள­பாட உற்­பத்தி மற்றும் ஏற்­று­மதி நிறு­வ­ன­மான, ஹிந்­துஸ்தான் ஏரோ­நொட்­டிக்கல் நிறு­வனம் (HAL) தனது பரா­ம­ரிப்பு தளங்­களை (maintenance bases) இலங்கை உள்­ளிட்ட நான்கு நாடு­களில் நிறுவத் திட்­ட­மிட்­டுள்­ளது என்­பதே அந்தச் செய்தி.

இலங்கை, மலே­ஷியா, வியட்நாம், இந்­தோ­னே­ஷியா ஆகிய நான்கு நாடு­க­ளையும் தான், இந்­தி­யாவின் அர­சுத்­துறை நிறு­வ­ன­மான HAL இப்­போது குறி வைத்­தி­ருக்­கி­றது.

இந்த நிறு­வனம் கொழும்பில் கடந்த மாதம் இந்­திய தூத­ர­கத்தின் பாது­காப்பு பிரி­வினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட, பாது­காப்பு உற்­பத்தி நிறு­வ­னங்­களில் கண்­காட்சி மற்றும் கருத்­த­ரங்கில் பங்கேற்­க­வில்லை.

அது ஆச்­ச­ரி­ய­மான விட­ய­மாக கடந்த வாரம் இந்தப் பத்­தியில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.

இந்­தி­யாவின் விமான தயா­ரிப்பு துறையில் முக்­கிய நிறு­வ­ன­மாக  இருக்கும் HAL, இலங்கை விமா­னப் ­ப­டையின் தேவை­களை நிறை­வேற்றக் கூடிய பாது­காப்புத் தள­பா­டங்­களை உற்­பத்தி செய்­கி­றது.

இவ்­வா­றான நிறு­வனம், எதற்­காக கொழும்பு கண்­காட்­சியை தவிர்த்­தது என்ற கேள்வி பர­வ­லா­கவே இருந்­தது.

இந்­த­நி­லையில் தான், HAL நிறு­வனம் ஆயுத தள­பாட விற்­ப­னைக்கு அப்பால், இலங்கை உள்­ளிட்ட நாடு­களில் விநி­யோக  அல்­லது பரா­ம­ரிப்புத் தளங்­களை நிறு­வு­கின்ற திட்­டத்தைக் கொண்­டி­ருக்­கி­றது என்­பது இப்­போது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது. HAL நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவப் பணிப்­பா­ளரும் தலை­வ­ரு­மான ஆர். மாதவன், இதனை உறுதி செய்­தி­ருக்­கிறார்.

இலங்கை உள்­ளிட்ட நான்கு நாடு­களில், விநி­யோக தளங்­களை அமைப்பது குறித்து தமது நிறு­வனம் ஆராய்ந்து கொண்­டி­ருப்­ப­தாக அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இந்த நான்கு நாடு­களும் ரஷ்­யாவில் தயா­ரிக்­கப்­பட்ட இரா­ணுவ விமா­னங்கள், ஹெலி­கொப்­டர்­களைப் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருப்­பவை. அந்த விமா­னங்கள் தற்­போது மோச­மான நிலையில், பாவ­னையில் இருந்து அகற்ற வேண்­டிய நிலையில் இருக்கின்­றன.

இந்த நாடு­க­ளுக்கு இந்­திய தயாரிப்பாக போர் விமானம் மற்றும் ஹெலி­கொப்­டர்­களை விற்க வாய்ப்­புள்­ளது என்­பதை, அவர் மறைக்­காமல் கூறி­யி­ருக்­கிறார்.

HAL நிறு­வனம்  ‘தேஜஸ்’ போர் விமானம், ‘ருத்ரா’ தாக்­குதல் ஹெலி­கொப்டர், ‘துருவ்’ இலகு போக்­கு­வ­ரத்து ஹெலி­கொப்டர் ஆகி­ய­ன­வற்றை தயாரித்து வரு­கி­றது.

இந்த விமா­னங்கள், ஹெலி­களை தென்­கி­ழக்­கா­சிய, மேற்­கா­சிய, நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்யும் திட்­டத்தை இந்­திய அர­சாங்கம் கொண்­டி­ருக்­கி­றது.

அடுத்த ஐந்து ஆண்­டு­களில் 5 பில்­லியன் டொலர் பாது­காப்பு ஏற்­று­மதி இலக்கை எட்ட வேண்டும் என்றும், அதற்­காக  இந்­தி­யாவின் முக்­கிய இரா­ணுவ தள­பாட உற்­பத்­தி­யா­ளர்கள் கடு­மை­யாக உழைக்க வேண்டும் என்றும் கடந்த மாதம் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி கூறி­யி­ருந்தார்.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் தான், மலே­ஷியா, வியட்நாம், இந்­தோ­னே­ஷியா மற்றும் இலங்­கையில் பரா­ம­ரிப்பு வச­தி­களை உரு­வாக்­கு­வது குறித்து ஆலோ­சித்து வரு­கிறோம் என  தெரி­வித்­தி­ருக்­கிறார் HAL நிறு­வ­னத்தின் தலைவர் ஆர்.மாதவன்.

இந்த நான்கு நாடு­களில் பரா­ம­ரிப்பு வச­தி­களை அமைப்­பதில்,  HAL  நிறுவனம் கவனம் செலுத்தி வரு­கி­றது. ஆயுத தள­பா­டங்­களை விற்­பனை செய்­வ­தற்கும் விற்­ப­னைக்கு பிந்­தைய சேவை­களை உறுதி செய்­வ­தற்கும் இத்­த­கைய வச­திகள் முக்­கி­ய­மா­ன­தாகும்.

குறிப்­பாக, தேஜஸ் போர் விமா­னங்­களை விற்­பனை செய்­வ­தி­லேயே HAL  நிறு­வனம் ஆர்வம் கொண்­டுள்­ளது.

இலங்கை விமா­னப்­ப­டை­யிடம் உள்ள பெரும்­பா­லான கிபிர், மிக் போர் விமா­னங்கள் காலா­வ­தி­யாகி விட்ட நிலையில், பாகிஸ்­தா­னிடமிருந்து, விமா­னப்­ப­டைக்கு ஜே.எவ்-17 போர் விமா­னங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு முற்­பட்­டது,  இந்­தி­யாவே அந்த கொள்­வ­னவை தடுத்­தி­ருந்­தது.

அத்­துடன் இலங்­கைக்கு தேஜஸ் போர் விமா­னங்­களை வழங்கத் தயா­ராக இருப்­ப­தா­கவும் இந்­தியா அறி­வித்திருந்தது.

இது­தொ­டர்­பான உத்­தி­யோ­க ­பூர்வ­மற்ற பேச்­சுக்கள் நடத்­தப்­பட்ட போதும், இன்­னமும் இறு­தி­யான முடிவு எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இந்­த­ நி­லையில் தான், தேஜஸ் போர் விமானம் போன்ற தமது உற்­பத்­தி­யான போர்த் தள­பா­டங்­களை பரா­ம­ரிப்­ப­தற்­கான தளத்தை இலங்­கையில் அமைக்கும் திட்­டத்தைக் கொண்­டி­ருக்­கி­றது இந்­தியா.

இதன் மூலம், தேஜஸ் போர் விமானம் போன்ற தமது தயா­ரிப்­பு­களை இலங்­கைக்கு விற்கப் போவது பெரும்­பாலும் உறு­தி­யாகி விட்­டது.

இலங்­கை­யிடம் வேறு எந்த HAL நிறு­வ­னத்தின் போர் விமா­னங்­களும் கிடை­யாது. எனவே, இலங்­கையில் பராமரிப்புத் தளத்தை, அமைக்க வேண்­டிய தேவை HAL  நிறு­வ­னத்­துக்குக்  கிடை­யாது.

முதலில் பரா­ம­ரிப்புத் தளத்தை அமைத்து விட்டு, இலங்­கைக்கு போர் விமா­னங்­களை விற்­கலாம் என்று போடப்­படும் கணக்கு எந்­த­ள­வுக்கு சரியா­ன­தெனக் கூற முடி­யாது.

அதே­வேளை, இலங்­கையில் தமது பரா­ம­ரிப்புத் தளத்தை, அமைப்­ப­தற்கு இந்­தியா மட்டும் தான் முற்­ப­டு­கி­றது என்­றில்லை.

ஏற்­க­னவே, திரு­கோ­ண­மலை சீனக்­கு­டாவில், விமா­னங்­களைப் பழு­து­பார்க்கும், புதுப்­பிக்கும் பரா­ம­ரிப்பு தளம் ஒன்றை அமைக்க சீனா முற்பட்டிருந்­தது.

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் பத­வியிலிருந்த போது சீனா மேற்­கொண்ட அந்த முயற்­சியை இந்­தியா தான் தடுத்து நிறுத்­தி­யது.

இலங்கை விமா­னப்­ப­டையில் சீனப் போர் விமா­னங்கள் அதி­க­ளவில் இருக்கும் நிலையில், இலங்­கையில் பரா­ம­ரிப்பு தளத்தை அமைக்கும் அந்த நாட்டின் முடிவு அர்த்­த­மு­டை­ய­தாக இருந்­தது.

அது­போ­லவே, வவு­னியா விமா­னப்­படைத் தளத்தில் விமானப் பரா­ம­ரிப்பு தளம் ஒன்றை அமைக்க ரஷ்­யாவும் விருப்பம் வெளி­யிட்­டி­ருந்­தது. அதற்கு இந்­தியா எதிர்ப்பு தெரி­விக்கா விட்டாலும், இலங்கை அர­சாங்கம் அனு­மதி அளிக்­க­வில்லை.

இலங்கை விமா­னப்­ப­டை­யிடம் ரஷ்ய விமா­னங்கள் பல இருக்கும் நிலையில், அந்த நாடு விமானப் பரா­ம­ரிப்பு தளத்தை அமைக்க முற்­பட்­ட­திலும் ஆச்­ச­ரி­ய­மில்லை.

ஆனால் இந்­தியத் தயா­ரிப்பு விமா­னங்கள் எதுவும் இலங்­கையில் பயன்­பாட்டில் இல்­லாத நிலையில், இலங்­கையில் பரா­ம­ரிப்புத் தளத்தை அமைக்க இந்­திய நிறு­வனம் முற்படுகிறது.

இதற்கு இலங்­கையின் தற்­போ­தைய அர­சாங்கம் எந்­த­ள­வுக்கு சாத­க­மான பதிலைக் கொடுக்கும் என்று தெரியவில்லை.

ஆனால், இலங்கை விமானப் படைக்கு போர் விமானங்களும் தேவைப்படுகிறது. இந்தியாவின் தயவும், உதவிகளும் தேவைப் படுகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் இந்தியாவின் கோரிக்கைக்கு கொழும்பு தலைசாய்க்க வேண்டிய நிலை வரலாம்.

எவ்வாறாயினும், இலங்கையில் பராமரிப்புத் தளத்தை இந்தியா அமைத்துக் கொண்டால், அது மெல்ல மெல்ல இந்தியாவின் பாதுகாப்பு தளபாடங்களின் பயன்பாட்டு வலைக்குள் இலங்கையைக் கொண்டு வந்து விடும்.

இந்தியா விரிக்கின்ற இந்த வலை, கொழும்பின் தற்போதைய அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தக்  கூடியதாக இருப்பினும், அதிலிருந்து தப்பிக்க வேறெந்த வழியும் இருப்பதாக தெரியவில்லை.

- சுபத்ரா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13