கொரோனா இராணுவ ஆட்சிக்கு வித்திடுமா ?

16 Mar, 2020 | 04:13 PM
image

பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனுத் தாக்கல் தொடங்கி விட்ட போதும், அந்தச் செய்­தி­களை விட மக்­க­ளிடம் கூடுதல் கவ­னத்தைப் பெற்­றி­ருப்­பது கொரோனா வைரஸ் தான்.

கடந்த வியா­ழக்­கி­ழமை 22 மாவட்டச் செய­ல­கங்­களில் அர­சியல் கட்­சி­களும், சுயேட்சைக் குழுக்­களும் வேட்­பு­ம­னுக்­களைத் தாக்கல் செய்ய ஆரம்­பித்து விட்­டன.

வழக்­கத்தில், வேட்­பு­மனுத் தாக்கல் தொடங்­கினால், ஊட­கங்­களில் அது­பற்­றிய செய்­தி­களே முதன்மை பெற்­றி­ருக்கும், எந்தக் கட்சி எந்த இடத்தில், எந்தக் கட்­சியில் எந்­தெந்த வேட்­பா­ளர்கள் என்ற விலா­வா­ரி­யான செய்­தி­க­ளுக்கு ஊட­கங்கள் முக்­கி­யத்­துவம் கொடுக்கும்.

வாச­கர்­களும், அத்­த­கைய செய்­தி­களை தேடிப்­பி­டித்து வாசிப்­பதில் ஆர்வம் காட்­டு­வார்கள்.

ஆனால், கடந்­த­வாரம் நடுப்­ப­குதி வரையில்  முத­லா­வது கொரோனா நோயாளி இனங்­கா­ணப்­படும் வரைக்கும் தான், தேர்தல் செய்­தி­களின் மீது மக்கள் ஆர்வம் காட்­டி­னார்கள்.

எந்தக் கட்சி எந்தக் கூட்டில், எந்த அணி எந்தச் சின்­னத்தில் என்ற விப­ரங்­களை தேடிக் கொண்­டி­ருந்த மக்­க­ளுக்கு, வேட்­பு­மனுத் தாக்கல் தொடங்­கிய பின்னர், அது­பற்றித் தேடும் ஆர்வம் அடி­யோடு குறைந்து விட்­டது.

வேட்­பு­மனுத் தாக்கல் தொடங்­கிய அதே நாளில் தான்,  பாட­சா­லை­களை 5 வாரங்­க­ளுக்கு மூடு­வ­தற்கு அர­சாங்கம் திடீர் முடிவை எடுத்­தது.

கொழும்பு ஆனந்தா கல்­லூ­ரியில் தொடங்­கிய பீதி­யினால் அர­சாங்­கமும் அவ­சர அவ­ச­ர­மாக பாட­சா­லை­களை மூட உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தது.  அர­சாங்­கத்தின் இந்த முடிவு நாடு முழு­வதும் கொரோனா பீதியை தலை­வி­ரித்­தாடச் செய்­தி­ருக்­கி­றது.

ஒரு பக்­கத்தில் வதந்­தி­க­ளையும், பொய்­யான தக­வல்­க­ளையும் சமூக ஊட­கங்­களும் பரப்­பு­வ­தா­கவும், அவற்றை நம்ப வேண்டாம் என்றும் கூறிக் கொண்டே அர­சாங்கம்,  பாட­சா­லைகள், கல்வி நிலைங்­களை மூடு­வ­தற்கு உத்­த­ர­விட்­டது, மக்கள் மத்­தியில் பீதியை மேலும் அதி­க­ரிக்கச் செய்­தி­ருக்­கி­றது.

இதற்குப் பின்னர் தான், வர்த்­தக நிலை­யங்­களை மக்கள் முற்­று­கை­யிட்டு முண்­டி­ய­டித்து பொருட்­களை கொள்­வ­னவு செய்ய ஆரம்­பித்­தனர்.

வளர்ச்­சி­ய­டைந்த மேற்கு நாடு­களில் கூட, இவ்­வா­றான நிலை இருக்கும் போது, மூன்று தசாப்த காலப் போரின் போது, எத்­த­னையோ ஊட­ரங்குச் சட்­டங்கள், பொருட்­களை பதுக்­குதல், தட்­டுப்­பாடு, விலை­யேற்­றங்கள், கள்ளச் சந்தை எல்­லா­வற்­றையும் பார்த்து விட்ட இலங்கை மக்கள், குறிப்­பாக தமிழ் மக்கள் மட்டும் எவ்­வாறு விதி­வி­லக்­காக இருக்க முடியும்?

பாட­சா­லைகள் மூடப்­பட்டு, தனியார் கல்வி நிலை­யங்­களும் மூடப்­பட்டு விட்ட நிலையில், இலங்­கையும் இப்­போது கொரோனா பாதித்த நாடு­களில் ஒன்று போன்ற தோற்றம் உரு­வாக்­கப்­பட்டு விட்­டது.

இது போதா­தென்று, இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா கூட, இரா­ணுவம் மேற்­கொள்ளும் கொரோனா தடுப்பு மற்றும் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கையை, இரா­ணு­வத்தின் இரண்­டா­வது மனி­தா­பி­மான போர் நட­வ­டிக்கை என்று வர்­ணித்­தி­ருக்­கிறார். இது நிலை­மையின் தீவி­ரத்தை உணர்த்­து­வ­தாக உள்­ளது.

பாட­சா­லை­களை மூடி­யது ஒரு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை தான் என்று அர­சாங்கம் கூறி­னாலும், தேர்தல் வேளையில் தேர்தல் நலனை கருத்திற் கொண்டு எடுக்­கப்­பட்ட முடி­வா­கவே இது தென்­ப­டு­கி­றது.

ஏனென்றால், பாட­சா­லை­களில் பரவக் கூடிய வதந்­தி­களும் பதற்­றங்­களும் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக மக்கள் திரும்பக் கூடிய நிலை­மையை ஏற்­ப­டுத்தும். அவ்­வா­றான நிலை ஏற்­பட்டால், அர­சாங்­கத்தின் தேர்தல் வெற்­றியைப் பாதிக்கக் கூடிய ஆபத்து இருக்கும்.

தேர்தல் வெற்­றியைக் கருத்திற் கொண்டே, அர­சாங்கம் இந்த முடிவை எடுத்­தி­ருந்­ததே தவிர, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை என கூறு­வது ஏமாற்று வேலை தான்.

கொரோனா வைரஸ் இலங்­கை­யர்கள் மத்­தி­யிலும் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நிலையில், முக்­கி­ய­மான சவால் ஒன்று எழுந்­தி­ருக்­கி­றது.

அடுத்த மாதம், 25ஆம் திகதி நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்ள பொதுத் தேர்தல் நடக்­குமா, தேர்­தலை நடத்த முடி­யுமா என்­பதே இப்­போது சிக்­க­லான கேள்­வி­யாக தெரி­கி­றது.

ஏனென்றால், அடுத்­த­டுத்த நாட்­களில், அடுத்­த­டுத்த வாரங்­களில் நிலை­மைகள் எப்­ப­டி­யி­ருக்கும் என்­பதை அனு­மா­னிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கொரோனா உல­கெங்கும் பரவி வரும் வேகமும், இலங்­கை­யிலும் பரவக் கூடிய சாத்­தி­யங்­களும், கணிக்க முடி­யாத ஒரு நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

பாட­சா­லை­களை மூடும் முடிவை அர­சாங்கம் எடுக்கும் வரை, அத்­த­கைய கணிப்பு யாரி­டத்­திலும் இருக்­க­வில்லை. அந்­த­ள­வுக்கு பார­தூ­ர­மான நிலை தோன்­றி­யி­ருக்­க­வில்லை.

கொரோ­னா­வினால் பலர் உயி­ரி­ழந்த பிரித்­தா­னியா இந்தப் பத்­தியை எழுதும் வரை பாட­சா­லை­களை மூட­வில்லை. பிரான்ஸ் கூட கடந்த வெள்­ளிக்­கி­ழமை தான் பாட­சா­லை­களை மூட உத்­த­ர­விட்­டது. ஐரோப்­பிய நாடு­களின் அள­வுக்கு இலங்­கையில் கொரோனா வைரஸ் ஆபத்து இல்­லாத போதும், பாட­சா­லைகள் மூடப்­பட்­டது தேர்தல் கால முன்­னெச்­ச­ரிக்கை தான்.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் ஏப்ரல் 25ஆம் திகதி பாரா­ளு­மன்றத் தேர்தல் நடக்­குமா என்ற கேள்­விக்கு சரி­யான பதிலை அளிக்க முடி­யாத சூழலே உள்­ளது.

ஏனென்றால், தேர்­தலில் பொதுக்­கூட்­டங்­களும், வீடு வீடாகச் சென்று நடத்தும் பிர­சா­ரங்­களும் முக்­கி­ய­மா­னவை. (3ஆம் பக்கம் பார்க்க)

கொரோனா...... (தொடர்ச்சி)

தற்­போ­தைய சூழ்­நி­லையில், பொதுக்­கூட்­டங்­க­ளுக்கு மக்கள் செல்லப் போவ­தில்லை. இதனால் தேர்தல் பிர­சா­ரங்­களை கட்­சி­களால் முன்­னெ­டுக்க முடி­யாமல் போகும்.

அதே­வேளை, தேர்தல் நடத்­தப்­பட்டால், வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் கொரோனா, வைரஸ் பர­வு­வதை தடுப்­ப­தற்­கான போதிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யுமா என்ற கேள்­வியும் உள்­ளது.

இவற்றைத் தாண்டி தேர்­தலை நடத்­தி­னாலும், வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிக்க வரு­வார்­களா என்ற கேள்வி  உள்­ளது.

இந்­த­நி­லையில் தான், தேர்­தலை ஒத்­தி­வைப்­ப­தற்­கான வாய்ப்­புகள் குறித்து அர­சாங்கத் தரப்பில் இருந்து, தேர்தல் ஆணைக்­கு­ழு­வுடன் கலந்­து­ரை­யா­டல்கள் நடத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக பேச்­சுக்கள் அடி­ப­டு­கின்­றன.

தேர்தல் சட்­டங்­களின் படி, பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு, 55 நாட்­க­ளுக்குப் பின்­னரும், 66 நாட்­க­ளுக்கு முன்­னரும் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும்.

இலங்­கையின் தேர்தல் சட்­டங்­க­ளின்­படி, ஏப்ரல் 25ஆம் திகதி நடக்­க­வுள்ள தேர்­தலை ஒத்­தி­வைப்­ப­தற்கு  வாய்ப்­புகள் குறைவு. அதற்­கான சட்ட ஏற்­பா­டுகள் இல்­லாத நிலையில் ஒத்­தி­வைப்பு முடிவு எடுக்­கப்­பட்டால் அது அர­சி­ய­ல­மைப்பு நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்தும்.

2018 ஒக்­டோபர் அர­சியல் குழப்­பத்தைப் போன்­ற­தொரு நிலை­மைக்கும் அது கார­ண­மாக அமை­யலாம்.

தேர்தல் ஒத்­தி­வைப்பு முடிவு எடுக்­கப்­ப­டு­வது தேர்தல் சட்­டங்­களில் இருந்து விலகும் நட­வ­டிக்­கை­யாக பார்க்­கப்­படும் என்றும், தேர்தல் முடி­வு­களை சவா­லுக்கு உட்­ப­டுத்தும் வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும், சட்ட நிபு­ணர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில், கொரோனா விவ­கா­ரத்தில் அங்கும் விலக முடி­யாமல் இங்கும் விலக முடி­யாமல் 'ஆப்­பி­ழுத்த குரங்கு போல' சிக்கிப் போயி­ருக்­கி­றது. எந்த முடிவை எடுத்­தாலும், அது அர­சாங்­கத்­துக்கு ஆபத்தைக் கொடுக்கும்.

தேர்­தலை நடத்­தி­னாலும் சிக்கல் தேர்­தலை நடத்­தாமல் ஒத்­தி­வைத்­தாலும் சிக்கல். இந்த நிலையில் அர­சாங்கம் எந்த முடிவை எடுக்கப் போகி­றது என்ற கேள்­விக்கு உட­ன­டி­யாக எந்த அனு­மா­னத்­தையும் முன்­வைப்­பது கடினம்.

அதே­வேளை, தேர்­தலை நடத்­து­வது அர­சாங்­கத்­துக்குப் பாத­க­மா­ன­தாக அமையும் என்று கரு­தி­னாலோ, கொரோனா ஆபத்து அதி­க­ரித்­தாலோ, சட்­ட­திட்­டங்­களைப் புறக்கணித்துச் செயற்படுவதற்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தயங்கமாட்டார்.

தேர்தலை ஒத்திவைப்பதற்கு அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து, ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள முற்படுவாரா? அதன் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா? என்ற  கேள்விகள் இருக்கின்றன.

அவ்வாறான வாய்ப்புகள் இல்லாவிட்டால், அரசியலமைப்பை இடைநிறுத்தி, இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்குக் கூட, ஜனாதிபதி தயக்கம் காண்பிக்கமாட்டார்.

இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகருவதாக குற்றச்சாட்டுகள், கூறப்பட்டு வந்த நிலையில், தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதி அவ்வாறானதொரு முடிவை எடுக்கும் வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது.

ஆக மொத்தத்தில் கொரோனா இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்தானதாகவே அமையும்.

- ஹரிகரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13