தேர்­த­லுக்கு செல­வாகும் செல­வி­னங்­க­ளையும் கொரோனாவை கட்­டுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைக்கு செல­விட தயா­ர் - சஜித்

16 Mar, 2020 | 01:21 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மக்­களின் உயிர் பாது­காப்­பை­விட அர­சாங்கம் எப்­படி­யா­வது தேர்­தலில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெற்­றுக்­கொள்ளும் நோக்­கிலே செயற்­பட்டு வரு­கின்­றது. பொறுப்பு வாய்ந்த எதிர்க்­கட்சி என்­ற­வ­கையில் தேர்­த­லுக்கு செல­வாகும் அனைத்து செல­வி­னங்­க­ளையும் கொரோனா வைரஸை கட்­டுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைக்கு செல­விட தயா­ராக இருக்­கின்றோம்.

அத்­துடன் நாட்டின் தற்­போ­தைய நிலையில் தேர்­த­லொன்­றுக்குச் செல்­வது எப்­படி சாத்­தி­ய­மாகும் என்­பதை அர­சாங்கம் அறி­விக்க வேண்டும் என்று ஐக்­கிய மக்கள் சக்தி அமைப்பின் தலை­வரும் முன்னாள் எதிர்க்­கட்சி தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தாச கோரிக்கை விடுத்தார்.

ஐக்­கிய மக்கள் சக்தி காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

கொரோனா வைரஸ் சீனாவில் தாக்கம் செலுத்­தும்­போதே அது தொடர்பில் கவ­னம்­செ­லுத்தி, எமது நாட்­டுக்கு பாதிப்பு ஏற்­ப­டா­த­வ­கையில் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என 5வாரங்­க­ளுக்கு முன்­னரே பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்பி, அர­சாங்­கத்­துக்கு அறி­வு­றுத்­தினேன். ஆனால் அது தொடர்பில் அர­சாங்கம் கண்­டு­கொள்­ள­வில்லை. எமது கோரிக்­கையை அர­சாங்கம் அன்று செயற்­ப­டுத்தி இருந்தால் நாட்­டுக்கு இந்­த­ளவு வைரஸ் பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்­காது.

அத்­துடன் வெளி­நாட்டில் இருந்து வரும் எமது பிர­ஜை­களை தொற்­றுநோய் இருக்­கி­றதா என பரீட்­சிக்கும் தடுப்பு மையங்­க­ளுக்கு அனுப்பி குறிப்­பிட்ட நாட்­க­ளுக்கு அவர்­களை அவ­தா­னிக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்­றது. ஆனால் சீன மக்­களை அவ்­வா­றான பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­து­வ­தில்லை. இது பாரிய பிரச்­சி­னை­யாகும். சீன பிர­ஜை­க­ளுக்கு நோய் தொற்று இல்லை என்­ப­தற்கு என்ன உத்­த­ர­வாதம் இருக்­கின்­றது. அர­சியல் தேவை­காக இவ்­வாறு செயற்­ப­டக்­கூ­டாது.

அத்­துடன் சர்­வ­தேச மட்­டத்தில் கொரோனா வைரஸ் வியா­பித்­து­வரும் நிலை­யிலே பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­த­லுக்கு செல்ல நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. நாங்கள் தேர்­த­லுக்கு செல்ல எந்த அச்­சமும் இல்லை. என்­றாலும் இரண்டு வாரங்­க­ளுக்கு தேர்தல் பிர­சா­ரங்கள், 5பேருக்கு அதி­க­மா­ன­வர்கள் ஒன்­று­கூடல் என்­ப­வற்­றுக்கு அர­சாங்கம் தடை­களை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. மக்கள் ஒன்­று­கூ­டல்­களை தடுத்­தி­ருப்­பதை நாங்கள் வர­வேற்­கின்றோம். அதனால் நாங்கள் எமது பிர­சார நட­வைக்­கை­களை இரண்டு வாரங்­க­ளுக்கு ஒத்­தி­வைத்­துள்ளோம். இவ்­வா­றான நிலையில் எம்மால் முடிந்த ஒத்­து­ழைப்பை நிபந்­த­னை­யின்றி அர­சாங்­கத்­துக்கு வழங்க நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம். அதே­போன்று தேர்­த­லுக்கு செல­வாகும் நிதியை வைரஸ் பாதிப்­புக்கு ஆளா­கு­வோ­ருக்கு செல­வி­டவும் தயா­ராக இருக்­கின்றோம்.

என்­றாலும் அர­சாங்கம் நாட்டின் நிலை­மையை கருத்­திற்­கொண்டு பிர­சார நட­வ­டிக்­கை­களை இரண்­டு­வா­ரங்­க­ளுக்கு தடை­செய்­தி­ருக்­கின்ற போதும் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு தாக்கல் செய்­வ­தற்­கான இறுதி திகதி எதிர்­வரும் 19 என அறி­வித்­தி­ருக்­கின்­றது. வேட்­பு­மனு தாக்­கல்­செய்ய 5 பேர் கொண்­ட­குழு, வரப்­போ­வ­தில்லை. அதே­போன்று மக்­களை சந்­தித்து பிர­சாரம் செய்­யாமல் தேர்தல் ஒன்­றுக்கு முகம்­கொ­டுப்­பது சாத்­தி­ய­மில்லை. இவ்­வா­றான நிலையில் அர­சாங்கம் எப்­ப­டி­யா­வது பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெற்­றுக்­கொள்ளும் முயற்­சி­யையே மேற்­கொண்டு வரு­கின்­றது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்­கத்தில் நியூ­சி­லாந்தில் 6பேர் பாதிக்­கப்­பட்­ட­துடன் அந்த நாடு அவ­ச­ர­கால நிலை­மையை பிர­க­டனம் செய்­தி­ருக்­கின்­றது. ஆனால் எமது நாட்டில் இது­வரை 10பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்டும் அர­சாங்கம் எந்த தீர்­மா­னத்­தையும் எடுக்­காமல் இருக்­கின்­றது. வைரஸை கட்­டுப்­ப­டுத்த அர­சாங்­கத்­திடம் முறை­யான வேலைத்­திட்டம் இல்லை. இந்த நிலைமை தீவி­ர­ம­டைந்தால் அதற்கு முகம்­கொ­டுக்க தேவை­யான முகக்­க­வ­சங்கள், மருந்­து­வ­கைகள் போது­மா­ன­ளவு வைப்பில் இல்லை. அத­னால்தான் அனைத்து தரப்­பி­னரும் கலந்­து­ரை­யாடி முறை­யான வேலைத்­திட்­டத்தை மேற்­கொள்­ளவே பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­மாறு கோரி­யி­ருந்தேன். ஆனால் இதற்கு முறை­யான பதி­ல­ளிக்­காமல் வைரஸை பயன்­ப­டுத்தி சஜித் பிரே­ம­தாச அர­சியல் செய்­வ­தாக அர­சாங்க தரப்­பினர் விமர்­சிக்­கின்­றனர்.

நாட்டு மக்­களின் உயிரை பண­யம்­வைத்து அர­சியல் இலா­பம்­தேட எமக்கு எந்த தேவையும் இல்லை. அர­சாங்­கத்தின் தற்­போ­தைய இய­லா­மையை பயன்­டுத்­திக்­கொண்டு தேர்­த­லுக்கு செல்­வதால் எதிர்க்­கட்­சிக்கு அதன் நன்மை அதிகம். என்­றாலும் நாங்கள் அவ்­வாறு சிந்­திக்­க­வில்லை.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச நாடுகள் பலவற்றில் தேர்தல்களை பிற்படுத்தி இருக்கின்றன. இங்கிலாந்தில் இடம்பெற இருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மே மாதம்வரை பிற்போடப்பட்டுள்ளது. அதேபோன்று ஜோர்ஜியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னேற்பாடாக இடம்பெறும் ஆரம்ப தேர்தல் நடவடிக்கைகளை மார்ச் 3ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 19 வரை பிற்போட்டு இருக்கின்றனர். அதனால் மூன்றில் இரண்டைவிட மக்களின் உயிர் முக்கியம் என்பதை உணர்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19