தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மக்கள் அம்பலப்படுத்துவார்கள் - சிவாஜிலிங்கம்

Published By: Digital Desk 4

16 Mar, 2020 | 01:16 PM
image

 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் அம்பலப்படுத்துவார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என்பதை நாங்கள் நம்புகின்றோம் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

 தமிழத்தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற குழப்பங்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உருவாகியிருக்கின்ற குழப்பங்கள் சாதாரண குழப்பங்கள் அல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையே இருக்கின்ற ஒரு முன்னாள் பாராளு மன்ற உறுப்பினரை தங்களுடைய பட்டியலில் உறுப்பினர் எனக்கூறியும் அந்தக் கட்சி வெட்கம் மானம் இல்லாமல் தொடர்ந்தும் அந்தக் கூட்டணியுடன் அங்கம் வகிக்கின்றது என்பதைப் பார்த்தால் என்ன நோக்கத்திற்காக இவர்கள் செயற்படுகின்றார்கள் என்பது வெளிப்படுகின்றது. 

ஆகக் குறைந்தது கட்சிகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புக்கூட்டத்தில் இருந்து ரெலோ தலைவர் வெளியேறி ஊடகங்கள் மூலம் பதில் கூறிகின்றோம் எனக் கூறி வெளியேறியிருக்கலாம். அவ்வாறு செய்யாது வெறும் கண்டனங்களைத் தெரிவிப்பது பிரயோசனம் இல்லை சுயமரியாதையை அடகு வைத்து அரசியல் செய்கிறார்கள்.

இது மட்டுமன்றி வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மகளிர்கள் சம்பந்தமாக ஏனையவர்கள் சம்பந்தமாக கட்சிக்குள்ளேயே பிரச்சினைகள் வெளிப்படுத்தப்படுகின்றுது தேர்தல் நியமனக்ககுழு என்று ஒன்றை வைத்துக்கொண்டு அதற்குப் புறம்பமாக சிலர் செயற்படுகின்றார்கள். 

இத்தகைய சூழலில் இன்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அதுமட்டுமன்றி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, நிலமீட்பு, காணாமல் போன விவகாரங்கள் இடைக்கால தீர்வு போன்ற விடையங்களில் நல்லாட்சி அரசாங்கத்தில் மூன்று தடவைகள்குறிப்பாக இரண்டு தடவைகள் நம்பிக்கை இல்லாப் பிரேரரனை ஒரு தடவை நம்பிக்கை கூறும் பிரேரணைக்கு ஆதரவாகச் செயற்பட்டு ரணிலைக் காப்பாற்றியவர்கள். இவர்களுடைய செயற்பாடுகளை மக்கள் தெரிந்து கொண்டதன் காரணமாகத்தத் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் தற்போது கூறுகின்றார். தன்னுடைய மனைவி ரணில் உங்களை ஏமாற்றிவிட்டார் என்று கூறுகின்றார் என புதுக்கதை விடுகின்றார். 

அவருடைய மனைவி சொன்னபோது ஏன் அதனை யோசிக்கவில்லை ஏன் அதனை ஊடகங்களுக்குத் தெரிவிக்கவில்லை கூட்டமைப்புக்குள் நாங்கள் இருந்தபோதே நாங்கள் ஏமாற்றப்படுவோம் என்பதைக்கூறினோம். ஆகவே இவர்களின் நடவடிக்கை எல்லாம் மக்களுக்கு ஒரு பிழையான விம்பத்தைக்காட்டி மீண்டும் பாராளுமன்ற பதவிகளைப் பிடிப்பதும் தங்களுடைய எடுபிடிகளுக்கு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிப்பார்கள் என்று ஒரு குழு அவர்களை சுற்றி நிற்கின்றதே தவிர மக்களால் இவர்கள் அம்மபலப்படுவார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என்பதை நாங்கள் நம்புகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04