பாத­க­மான நிலைமை  இன்­னமும் இல்லை : வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் விபரங்கள் சேகரிப்பு - அரசாங்கம் அறிவிப்பு

16 Mar, 2020 | 12:32 PM
image

(எம்.மனோ­சித்ரா)

இலங்­கையை கொரோனா வைரஸ் பரவும் நாடாக உலக சுகா­தார ஸ்தாபனம் பெய­ரிட்­டுள்ள போதிலும் அவ்­வா­றா­ன­தொரு பாத­க­மான நிலைமை இது­வ­ரையில் ஏற்­ப­ட­வில்லை. தொற்­றுக்­குள்­ளாகி சிகிச்சை பெற்று வரு­கின்றவர்களுக்கு பார­தூ­ர­மான பாதிப்­புக்கள் இல்லை என்று சுகா­தார சேவைகள்  பணிப்­பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரி­வித்தார்.

நாட்டில் மருத்­துவ பரி­சோ­தனை, தனி­மைப்­ப­டுத்தல் கண்­கா­ணிப்பு ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வருகை தந்­த­வர்­க­ளது விப­ரங்கள் சேக­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அவர்­களும் மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டுவர் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் மருத்­துவ பரி­சோ­தனை, தனி­மைப்­ப­டுத்தல் கண்­கா­ணிப்பு ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வருகை தந்­த­வர்­க­ளது விப­ரங்கள் சேக­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அவர்­களும் மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டுவர் என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவல் நிலை­வரம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் கொவிட் 19 ஊடக மத்­திய நிலை­யத்தின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று ஞாயிற்­றுக்­கிழமை அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது.

இந்த ஊடக சந்­திப்பில் கலந்து கொண்ட சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, அமைச்சர் பந்­துல குண­வர்­தன மற்றும் குடி­வ­ரவு - குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் பதில் பணிப்­பாளர் நாயகம் சரத் ரோக­சிறி ஆகியோர் தெரி­வித்த விடயங்கள் வரு­மாறு.

சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் அனில் ஜாசிங்க

இலங்­கையில் இது­வ­ரையில் 10 பேர் மாத்­தி­ரமே தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். இவர்கள் அனை­வரும் அங்­கொடை ஐ.டி.எச். வைத்­தி­ய­சா­லையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர். இந்த 10 பேரில் இருவர் பெண்­க­ளாவர். இதில் 8 பேர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வருகை தந்­த­வர்கள் என்­ப­தோடு, ஏனைய இரு­வரும் பிறி­தொ­ரு­வ­ரி­லி­ருந்து தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­க­ளாவர். எனினும் எவரும் பார­தூ­ர­மான நிலை­மைக்கு உள்­ளா­க­வில்லை.

சந்­தே­கத்தில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளோர்

சுகா­தார அமைச்­சினால் தெரி­வு­செய்­யப்­பட்டு பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்ள நாடு பூரா­க­வு­முள்ள வைத்­தி­ய­சா­லை­களில் சந்­தே­கத்தின் பேரில் 133 பேர் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 9 பேர் வெளி­நாட்­ட­வர்­க­ளாவர். மேலும் பொது சுகா­தார பரி­சோ­த­கர்­களால் இது­வ­ரையில் 4405 பேர் மருத்­துவ சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் இலங்­கை­யர்கள் 2769 பேரும் சீனர்கள் 1120 பேரும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

10 ஆம் திக­திக்கு முன்னர் வந்­த­வர்­களின் தகவல் சேக­ரிப்பு

இம்மாதம் 10 ஆம் திக­திக்குப் பின்­னரே மருத்­துவ பரி­சோ­த­னை­களும் தனி­மைப்­ப­டுத்தல் கண்­கா­ணிப்­பு­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டன. எனினும் அதற்கு முன்னர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து பலர் வருகை தந்­துள்­ளனர். இம்­மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி நாட்­டுக்கு வரு­கை­தந்த இலங்­கை­யர்கள், வெளி­நாட்டு பிர­ஜைகள் உள்­ளிட்­டோரின் தக­வல்கள் விமான நிலை­யங்­களில் சேக­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன. பின்னர் இவர்­க­ளையும் மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையை வைரஸ் பரவும் நாடாக சுகாதார ஸ்தாபனம் அறி­விப்பு

உலக சுகா­தார ஸ்தாபனம் இலங்­கையை தொற்று பரவும் நாடாக பெய­ரிட்­டுள்ள போதிலும் அவ்­வா­றான பார­தூ­ர­மான நிலைமை இன்னும் ஏற்­ப­ட­வில்லை. ஏற்படாது எனக் கூற முடி­யாது. முடிந்­தளவு வைரஸ் பர­வு­வதைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். தொற்­றுக்கு உள்­ளா­கி­யி­ருப்­ப­வர்­களும் சந்­தே­கத்தின் பேரில் வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­வர்­களும் சிகிச்சை பெறு­வ­தற்­காக போது­மான வச­திகள் காணப்­ப­டு­கின்­றன. சிறு குறை­பா­டுகள் காணப்­பட்­டாலும் அவை விரைவில் நிவர்த்தி செய்­யப்­படும்.

உலக நாடுகள்

உலக நாடு­களின் நிலை­வ­ரத்தை அவ­தா­னிக்கும் போது இத்­தா­லியில் வைரஸ் பரவல் அதி­க­ரித்த போக்­கி­னையே காட்­டு­கின்­றது. வைரஸ் பர­வ­லுக்கு முன்னர் இத்­தாலி எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­கா­மையே இதற்­கான கார­ண­மாகும். தென் கொரி­யாவில் வைரஸ் பரவல் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சீனா­வி­லேயே இவ் வைரஸ் உரு­வா­கி­யது. பர­வி­யுள்ள வைரஸ் என்ன என்று கண்­ட­றி­வ­தற்கே அவர்­க­ளுக்கு சிறிது காலம் எடுத்­தது. எனவே தான் அந்­நாட்டில் பாதிப்­புகள் அதி­க­மா­கின. எனினும் தற்­போது அங்கும் பரவல் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தோடு, பலர் குண­ம­டைந்­துள்­ளனர் என்று தெரி­வித்தார்.

அமைச்சர் பந்­துல கருத்து

இங்கு அமைச்­ச­ரவை பேச்­சாளர்  பந்­துல குண­வர்­தன கருத்துத் தெரி­விக்­கையில்,

உலக நாடு­களில் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தி­யுள்ள கொரோனா வைரஸ் இலங்­கையில் பர­வா­தி­ருத்­தலைத் தடுப்­ப­தற்­காக தொடர்ச்­சி­யான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அதற்­க­மை­யவே திங்­கட்­கி­ழமை அரச விடு­மு­றை­யாக அறி­விக்­கப்­பட்­டது. அரச திணைக்­க­ளங்கள், பல்க­லை­க­்கழ­கங்கள், பல்­க­லைக்­க­ழக மாணவர் விடு­திகள் உள்­ளிட்ட கட்­டட தொகு­தி­களை தூய்­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. எனினும் இன்று மொத்த மற்றும் சில்­லறை விற்­பனை நிலை­யங்கள் மூடப்­ப­ட­மாட்­டாது.

வெளி­வி­வ­கார அமைச்சர்  

தினேஷ் குண­வர்­த­ன­வுக்கு தொற்­றில்லை

வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் தினேஷ் குண­வர்­தன ஜெனிவா சென்று வந்­த­தனால் அவ­ருக்கு கொரோனா தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக போலி­யான செய்­திகள் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­கி­யுள்­ளன. அவை உண்­மைக்கு புறம்­பா­ன­வை­யாகும். ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ கொரோனா தொற்­றினை தடுப்­பது தொடர்பில் சகல அரச தலை­வர்­க­ளுடனும் இது குறித்து கலந்­து­ரை­யா­ட­வுள்ளார் என்று தெரி­வித்தார்.

குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின்

கட்­டுப்­பாட்டுப் பிரிவின் பணிப்­பாளர் நாயகம்  சரத் ரூப­சிறி

இங்கு கருத்துத் தெரி­வித்த குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் கட்­டுப்­பாட்டுப் பிரிவின் பணிப்­பாளர் நாயகம்  சரத் ரூப­சிறி,

குடி­வ­ரவு - குடி­ய­கல்வு திணைக்­களம் ஏனைய திணைக்­க­ளங்கள் நிறு­வ­னங்­களைப் போன்­றல்­லாமல் அதி­க­ள­வான மக்கள் வரு­கை­தரும் இட­மாகும். எனினும் அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்­காக அன்றி சாதா­ரண தேவைகள் இருப்­ப­வர்கள் இரு வார காலத்­துக்கு திணைக்­க­ளத்­துக்கு வருகை தரு­வதை தவிர்த்துக் கொள்­ளு­மாறு கேட்டுக் கொள்­கின்றோம். குறிப்­பாக சுக­யீ­ன­ம­டைந்­துள்­ள­வர்கள் வருகைத் தரா­ம­லி­ருப்­பது சிறந்­த­தாகும்.

காரணம் பரி­சோ­தனை கருவி மூலம் பரிசோ­திக்கும் போது அவர்கள் திணைக்­க­ளத்­தினுள் அனு­ம­திக்­கப்­பட மாட்டார்கள். இதன்­போது அவர்கள் வீணான அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நேரிடும். இதனைத் தவிர்த்துக் கொள்­வ­தற்­காகவே வருகைதர வேண்டாம் என்று கோரு­கின்றோம். தற்­போது 15 நாடு­க­ளுக்கு விசா வழங்­கு­வது தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டுள் ளது. எதிர்­வரும் நாட்­களில் மேலும் சில நாடு­க­ளுக்கும் விசா வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளோம் என்று தெரிவித்தார்.  

பிடியாணையின்றி கைது செய்ய முடியும்

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கொரோனா வைரஸ் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை யில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்து வதற்காக 1897 ஆம் இலக்க 3 உறுப்புரை நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் சட் டத்தின் அடிப்படையில், நோய் பரவும் வகையில் செயற்படுபவர்களை பிடியாணை யின்றி பொலிஸாரால் கைதுசெய்ய முடி யும் என்று பொலிஸ் தலைமையகம் தெரி வித்துள்ளது.

யாத்திரை, சுற்றுலா செல்லத்தடை

எதிர்வரும் இரு வார காலத்துக்கு மத யாத்திரைகள், பயணங்கள், சுற்றுலா செல் வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக புத்த சாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு நேற்று ஞாயிற்றுக்கிழமை அறி வித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58