அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை இன்று - அத்தியாவசிய சேவைகள் வழமை நிலையில்!

Published By: Vishnu

16 Mar, 2020 | 08:27 AM
image

இன்றைய தினம் அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லையாயினும் , அத்தியாவசிய சேவைகளை இடையூறின்றி இடம்பெறும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று விடுமுறை தினமாக இருந்த போதிலும், சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவையின் கீழ் உரிய முறையில் முன்னெடுக்க வேண்டுமென சுகாதார மற்றும் சுதேச வைத்தியத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதாரத் துறையில் பணியாற்றும் சகலரும் இன்று பணிக்குச் சமூகமளிக்க வேண்டுமெனவும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை விசேட பொது மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்ட போதிலும். கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள மொத்த மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் வழமை போன்று தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார். 

மக்கள் கூட்டங்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. நாளையதின (இன்று) விடுமறை தினத்தில் பல்கலைக்கழகங்கள், காரியாலயங்கள், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்து நிலையங்களை சுத்தம் செய்து புகைபோடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரின் உதவிகொண்டு இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தினார்.

- அரசாங்க தகவல் திணைக்களம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59