எல்பிட்டிய - வெலிகந்த விபத்துக்களில் இருவர் பலி

Published By: Vishnu

15 Mar, 2020 | 03:56 PM
image

எல்பிட்டிய மற்றும் வெலிகந்த பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர். 

எல்பிட்டிய - அளுத்கம வீதி, அட்டகொஹொட சந்திக்கருகில் சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய நோக்கி பயணித்த பஸ்ஸொன்று எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொலஇஹல - நவதகல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

மேலும், வெலிகந்த பகுதியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த வீதியில் மதுரங்கல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

வெலிகந்த - றுஹுணுகெத பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வுருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19