மூடிய அரங்கில் நடை­பெற்­ற போட்டியை கண்டுகளித்த தனி ஒருவர் 

Published By: J.G.Stephan

15 Mar, 2020 | 02:22 PM
image

அவுஸ்­தி­ரே­லியா மற்றும் நியூ­ஸி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் போட்டி வெள்­ளி­யன்று சிட்னி கிரிக்கெட் மைதா­னத்தில் மூடிய அரங்கில் நடை­பெற்­றது. இப்­போட்­டியைக் காண பார்­வை­யா­ளர்கள் எவ­ருக்­கும் அனு­மதி அளிக்­க­வில்லை. ஆனால் ஒரு­வ­ருக்கு மாத்­திரம் ஆசனம் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆம். அவர் 'யப்பா' (yabba) என அறி­யப்­பட்­ட­வ­ராவார். இவரைத் தவிர பார்­வை­யாளர் அரங்கில் வேறெ­வரும் இருக்­க­வில்லை. 

அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணியின் ரசி­க­ராக விளங்­கிய இவரின் இயற்பெயர் ஸ்டீபன் ஹரோல்ட் கேஸ்­கொயிங் ஆகும். 1920 கள் முதல் 1930 கள் வரை­யான காலப்­ப­கு­தி­களில் இவரின் நட­வ­டிக்­கைகள் பல­ரையும் கவர்ந்­தி­ருந்­தன. 

அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணியின் தீவிர ரசி­க­ரான இவர், அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி சிட்னி மைதா­னத்தில் விளை­யா­டும்­போ­தெல்லாம் சிட்னி கிரிக்கெட் மைதா­னத்தின் 'ஸ்கோர் போர்ட்' பல­கைக்கு எதிர்த்­தி­சையில் அமைந்­துள்ள  பார்­வை­யாளர் பகு­தியின் உய­ர­மான இடத்­தி­லி­ருந்து போட்­டியை கண்­டு­களிக்கும் வழக்­கத்தைக் கொண்­டி­ருப்பார். இவர் உற்­சாக கோஷம்  அவுஸ்­தி­ரே­லிய வீரர்­க­ளுக்கு புது தெம்பை அளிக்கும் வித­மாக அமைந்­த­துடன், ரசி­கர்கள் பல­ரையும் கவர்ந்­தி­ழுக்கும் வண்­ண­மாக இருந்­தது. 

இவரின் மறை­வுக்கு பின்னர் அவர் வழ­மை­யாக இருக்கும் இடத்தை அவ­ருக்­காக ஒதுக்­கப்­பட்­ட­துடன், 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திக­தி­யன்று அவர் அமர்ந்­து­கொண்டு கோஷ­மிடும் வித­மான அவரின் வெண்­கல சிலை­யொன்றை அவுஸ்­தி­ரே­லிய  கிரிக்கெட் சபை வடி­வ­மைத்­தது. 

கொரோனா வைரஸ் தொற்று கார­ண­மாக முடிய அரங்குக்குள் பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படாவிடினும், யப்பா போட்டியை தனியொருவராக கண்டுகளித்திருந்ததாக அனைவரும் நினைவு கூர்ந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35